சூர்யாக்கு எனது நன்றி – ரம்யா பாண்டியன்
சூர்யாக்கு எனது நன்றி - ரம்யா பாண்டியன்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகை ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். ஜோக்கர் என்ற படத்தின் மூலம் பலரும் அறியும் நடிகையானார். எனினும், இந்தப் படங்களுக்குப் பிறகு நம்யா பாண்டியனுக்கு போதுமான வாய்ப்பு அமையவில்லை. எனினும், தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தனது கிளாமரான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டு வந்தார்.
தனது வீட்டு மொட்டை மாடியில் ரம்யா பாண்டியன் எடுத்த கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசன...
