கணவரின் விந்தணு மூலம் தனது தோழி குழந்தை பெற்றுக்கொள்ள உதவிய நடிகை!
அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை ஜெனிஃபர் குட்வின் (வயது 43). இவர் சமீபத்தில் ஒரு வித்தியாசமான செயலை செய்து வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளார்.
இவர் ஜோஸ் டெல்லாஸ் என்ற ஒரு நடிகரை திருமணம் செய்துள்ளார்.
இவர் சமீபத்தில் SiriusXM என்ற டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் பொழுது தான் தனது கணவரின் விந்தணு மூலம் தனது தோழி குழந்தை பெற்றுக்கொள்ள உதவியதாக கூறியுள்ளார்.
ஜெனிஃபர் குட்வினின் தோழி ஒருவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்துள்ளது.
இதற்காக தோழி டாக்டரிடம் இது குறித்து பேசிய பொழுது செயற்கை கருத்தரிப்பு முறையில் விந்து தானம் பெற்று குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளனர்.
இந்நிலையில் ஜெனிஃபருக்கு தன் கணவரின் விந்தணுவை தோழிக்கு தானமாக கொடுக்கும் எண்ணம் இருந்துள்ளது. ஜ...