சந்தானத்தின் சபாபதி சிரிப்பா? கடுப்பா? கோடங்கி விமர்சனம்
காமெடி என்ற பெயரில் அடுத்தவர்களை நக்கல் அடித்தே தன் படங்களை தந்த சந்தானம் முதல் முறையாக அப்பாவியாக அதே நேரம் தாழ்வு மனம் உள்ள திக்குவாய் மனிதராக நடித்திருக்கிறார்.
கதைன்னு பெருசா ஒன்னும் இல்ல... வழக்கம் போல ஹீரோ வீட்டுக்கு எதிர் வீட்டில் ஹீரோயின் இருப்பதும், அவர்களுக்குள் காதல் வருவதும் எவ்வளவு நாள் கதைன்னு சொல்ல முடியும்.
ஆனால், அதுல விதின்னு ஒரு விஷயத்தை புகுத்தி ஒரு அரசியல்வாதி கேரக்டரை ஏற்படுத்தி பெட்டி பெட்டியா தேர்தலுக்கு பணம் எடுத்துகிட்டு போகும் போது அந்த வண்டி விபத்துல சிக்கி பணம் எரிஞ்சி போவதும், ஒரு பெட்டி மட்டும் ஹீரோ கையில் கிடைப்பதும் கடைசியில் அந்த பணம் என்ன ஆகிறது, அரசியல்வாதி வில்லன் சிக்கினானா, ஹீரோ காதல் கை கூடியதா? ஹீரோவின் தாழ்வுமனப்பான்மை என்ன ஆகிறது என்பதை இயக்குனர் தனக்கே உரிய பாணியில் சொல்லி இருக்கிறார்.
நக்கல் நையாண்டியில் வண்டி ஓட்டி வந...
