புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

சந்தானத்தின் சபாபதி சிரிப்பா? கடுப்பா? கோடங்கி விமர்சனம்

 

காமெடி என்ற பெயரில் அடுத்தவர்களை நக்கல் அடித்தே தன் படங்களை தந்த சந்தானம் முதல் முறையாக அப்பாவியாக அதே நேரம் தாழ்வு மனம் உள்ள திக்குவாய் மனிதராக நடித்திருக்கிறார்.

கதைன்னு பெருசா ஒன்னும் இல்ல… வழக்கம் போல ஹீரோ வீட்டுக்கு எதிர் வீட்டில் ஹீரோயின் இருப்பதும், அவர்களுக்குள் காதல் வருவதும் எவ்வளவு நாள் கதைன்னு சொல்ல முடியும்.

ஆனால், அதுல விதின்னு ஒரு விஷயத்தை புகுத்தி ஒரு அரசியல்வாதி கேரக்டரை ஏற்படுத்தி பெட்டி பெட்டியா தேர்தலுக்கு பணம் எடுத்துகிட்டு போகும் போது அந்த வண்டி விபத்துல சிக்கி பணம் எரிஞ்சி போவதும், ஒரு பெட்டி மட்டும் ஹீரோ கையில் கிடைப்பதும் கடைசியில் அந்த பணம் என்ன ஆகிறது, அரசியல்வாதி வில்லன் சிக்கினானா, ஹீரோ காதல் கை கூடியதா? ஹீரோவின் தாழ்வுமனப்பான்மை என்ன ஆகிறது என்பதை இயக்குனர் தனக்கே உரிய பாணியில் சொல்லி இருக்கிறார்.

நக்கல் நையாண்டியில் வண்டி ஓட்டி வந்த சந்தானம் இதில் அடக்கி வாசித்து இருக்கிறார்.இதற்காக இயக்குனர் ஸ்ரீனிவாசராவுக்கு ஒரு சபாஷ் போடலாம்.

ஹீரோயின் ப்ரீத்தி தமிழுக்கு கிடைத்த அழகான ஹீரோயின்.நல்ல கதைகளில் நடித்தால் ஒரு ரவுண்டு வரலாம்.

எம்.எஸ்.பாஸ்கர் பேசாமலேயே பல இடங்களில் அசத்துகிறார். லொள்ளு சபா சுவாமிநாதன் வழக்கம் போல சிரிப்புடன் சீரியஸ் விஷத்தை சொல்லி நினைவில் நிற்கிறார்.

படத்தில் அரசியல்வாதியின் கட்சி கொடியும், சின்னமும் தூரத்தில் இருந்து பார்த்தால் இப்ப ஜெய்பீம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் கட்சியின் சின்னம் போலவே தெரிகிறது. அந்த வில்லனும் பெட்டி பெட்டியாக பணம் எடுத்து செல்கிறார். நமக்கு மட்டும் தான் அப்படி தெரிகிறதா இல்ல பார்க்கும் எல்லாருக்கும் அப்படி தெரிகிறதா என தெரியவில்லை.

மொத்தத்தில் சந்தானத்தின் சப்த நாடியையும் அடக்கிய சபாபதியும் சர்ச்சைக்குறியவன் தான்.

கோடங்கி

மதிப்பீடு 3/5

244 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன