பிக் பாஸ் நிகழ்ச்சியில் உண்மையை உளறிய சமந்தா!
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், இரண்டாவது சீசனை நானியும் தொகுத்து வழங்கினார்கள். மூன்றாவது சீசனை நாகர்ஜுனா தொகுத்து வழங்கினார். அதை தொடர்ந்து நான்காவது சீசனையும் அவர் தான் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் ஒயில்ட் டாக் படப்படிப்பில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் நாகர்ஜுனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரேக் எடுத்துள்ளார்.
நாகர்ஜுனா இல்லாத நேரத்தில் அவரின் மருமகளான சமந்தா பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த வாரம் தொகுத்து வழங்கினார். ஒயில்ட் டாக் ஷூட்டிங் இன்னும் முடியாததால் இந்த வாரமும், அடுத்த வாரமும் சமந்தா தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார் சமந்தா. மேலும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரு எபிசோடை க...
