ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: SanchitaShetty

சஞ்சிதா ஷெட்டி படக்குழுவினருக்கு அபராதம்!

சஞ்சிதா ஷெட்டி படக்குழுவினருக்கு அபராதம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
சஞ்சிதா ஷெட்டி படக்குழுவினருக்கு அபராதம்! தமிழில் சூது கவ்வும் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. இவர் தற்போது பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மகன் லியோ சிவகுமார் ஹீரோவாக அறிமுகமாகும் அழகிய கண்ணே படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சீனு ராமசாமியின் துணை இயக்குனர் விஜயகுமார் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே உள்ள கோணப்பட்டி கிராமத்தில் நடந்து வருகிறது. இதில் கிராமத்து மக்களும் கலந்து கொள்ள 100க்கும் மேற்பட்டவர்களை கொண்டு படப்பிடிப்பு நடந்தது. மேலும் கிராம மக்கள் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க கூடியிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொரோனா தடுப்பு குழுவினர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றனர். குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றாததால் படப்பிடிப்பு குழுவினருக்கு தடுப்பு பிரிவினர் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேற்க...
வரவேற்பை பெற்ற பிரசாந்தின் ஜானி டிரைலர்

வரவேற்பை பெற்ற பிரசாந்தின் ஜானி டிரைலர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
90-களில் முக்கியமான கதாநாயகனாக வலம் வந்தவர் பிரசாந்த். சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். இந்நிலையில் நீண்ட இடை வெளிக்குப் பிறகு பிரசாந்த் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ஜானி. இயக்குனர் ஜீவா சங்கரின் உதவியாளர் வெற்றிச்செல்வன் இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரசாந்துடன் இணைந்து சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை இயக்குனர் தியாகராஜன் தயாரித்துள்ளார். ஜானி படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் பெற்றுள்ள நிலையில், தற்போது படத்தின் டிரெய்லரை பிரசாந்த் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது வரை படத்தின் டிரைலரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர். கள்ள நோட்டை மையமாக வைத்து ஆக்‌ஷன் படமாக ஜானி உருவாகி இருப்பதை டிரெய்லரை பார்க்கும்போது அறிய...