வைரஸ் பீதியில் மூடப்பட்ட பள்ளிகளை எப்போது திறப்பது… இன்று தெரியுமாம்!
வைரஸ் பீதியில் மூடப்பட்ட பள்ளிகளை எப்போது திறப்பது என மத்திய அரசுக்கு தமிழக அரசு இன்று முடிவு சொல்கிறது!
கொரானா நோய்த்தொற்றின் தாக்கம் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. எப்போது மீண்டும் திறக்கப்படும்? என்பது இதுவரை முடிவு எடுக்கப்படாமல் இருக்கிறது.
இந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் பள்ளிக்கல்வி துறை சார்பில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வித்துறை செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘பெற்றோரிடம் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக்கேட்டு அனுப்பவேண்டும். அதில், பள்ளிகள் மீண்டும் திறக்க வசதியான காலம் எது? ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் என எப்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்போது பள்ளிகளில் செய்யப்படவேண்டிய பெற்றோரின் எதிர்பார்ப்புகள் என்ன?, மேலும் இதுதொடர்பான பிற கருத்துகள் ஆகியவற்றை குறிப்பிட்டு coordin...

