பாலியல் குற்றங்களின் சூழல் குறித்து பேசும் ”மெய்ப்பட செய்”
அறிமுக நடிகர் ஆதவ் பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், மதுனிகா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் தயாரிப்பாளர் தமிழ்செல்வம், ஆடுகளம் ஜெயபாலன், ஓ.ஏ.கே.சுந்தர், இயக்குநர் ராஜ்கபூர், ராகுல் தாத்தா, சூப்பர் குட் சுப்பிரமணி, விஜய கணேஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
முழுக்க முழுக்க குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ள ’மெய்ப்பட செய்’ பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்துப் பேசியிருப்பதோடு, வேகமான காட்சிகளோடும், விறுவிறுப்பான திரைக்கதையோடும் அனைத்துத் தரப்பினருக்கும் பிடிக்கும் வகையிலான படமாக உருவாகியுள்ளது.
பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மையப்படுத்தி பல படங்கள் வந்தாலும், அப்படங்களில் குற்றங்கள் எதனால் நடக்கிறது? அல்லது குற்றங்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?, போன்றவற்றைச் சொல...
