புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: shivani

வடிவேலு படத்தில் நடித்த பிக்பாஸ் நடிகை!

வடிவேலு படத்தில் நடித்த பிக்பாஸ் நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். சுராஜ் இயக்கி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஷிவானி நாராயணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக அவரே அறிவித்திருக்கிறார். மேலும் வடிவேலுடன் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்தது மிகவும் சந்தோஷம் என்று ஷிவானி பதிவு செய்திருக்கிறார்....
நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம்!

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இதில் வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி, 'டாக்டர்' பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார். முன்னதாக இப்படத்தில் பிரியா பவானிசங்கர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், கால்ஷீட் பிரச்சனைகளால் இவர் அதில் இணையவில்லை எனவும் பிரியாவுக்குப் பதிலாக பிக்பாஸ் சீசன் 4-இல் இடம்பெற்ற ஷிவானி நாராயணன் இணையவுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் "ஷிவானியின் கதாப்பாத்திரம் மிக முக்கியமானதாக இருக்கும் எனவும் படத்தில் வடிவேலுடன் நடனமாடுவதையும் காணல...
பம்பர்’ படத்தில் வெற்றி ஜோடியாக பிக்பாஸ் ஷிவானி

பம்பர்’ படத்தில் வெற்றி ஜோடியாக பிக்பாஸ் ஷிவானி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  *வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் செல்வக்குமார் இயக்கும் 'பம்பர்' படத்தில் வெற்றி ஜோடியாக ஷிவானி நடிக்கிறார்* கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட 'பம்பர்' என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர்கள் மீரா கதிரவன் மற்றும் ‘கொம்பன்’ முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள எம். செல்வக்குமார் இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்க கார்த்திக் நேத்தா பாடல்களை இயற்றுகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு எருமேலியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பெருவழிப்பாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கேரள அரசின் உரிய அனுமதியுடன் நிறைவடைந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கி பிப்ரவரி மாதம் நிறைவடையும். சில முக்கிய காட்ச...
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்!

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்! மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘விக்ரம்’. நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். விக்ரம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்க இருக்கிறது. இதில் கமல், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறார்கள். இந்த படப்பிடிப்பில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஷிவானி இணைய இருப்பதாக த...
உதயநிதி ஸ்டாலின் படத்தில் இணைந்த ஷிவானி!

உதயநிதி ஸ்டாலின் படத்தில் இணைந்த ஷிவானி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
உதயநிதி ஸ்டாலின் படத்தில் இணைந்த ஷிவானி! இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘ஆர்ட்டிகிள் 15’. இப்படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகிறது. கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ், இப்படத்தை இயக்குகிறார். உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும் நடிகர் ஆரியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகரின் மகளான ஷிவானியும் ‘ஆர்ட்டிகிள் 15’ தமிழ் ரீமேக்கில் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே அன்பறிவு என்ற படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை. ‘ஆர்ட்டிகிள் 15’ தமிழ் ரீமேக்கின் முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்து முடிந்துள்ளது. கொரோனா ஊரடங்கு ...
“எதுக்கு நீ இந்த ஷோவுக்கு வந்தாய்?”  தாயார் கேள்வியால் பிக்பாஸ் ஷிவானி அதிர்ச்சி

“எதுக்கு நீ இந்த ஷோவுக்கு வந்தாய்?” தாயார் கேள்வியால் பிக்பாஸ் ஷிவானி அதிர்ச்சி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு இன்று முதல் ப்ரீஸ் டாஸ்க் நடக்க இருப்பதாகவும் போட்டியாளர்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக, கடந்த சீசனை போலவே இப்போதைய சீசனிலும் வருகை தர உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இன்னிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ஷிவானியின் தாயார் பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார். 85 நாட்களாக பிரிந்திருந்த தனது தாயாரை பார்த்ததும் ஷிவானி அவரை கட்டி பிடித்துக்கொண்டு அழுகிறார். இருவரும் சிறிது நேரம் சென்டிமென்டாக நடந்து கொள்கின்றனர்.  இதைப்பார்த்து போட்டியாளர்கள் அனைவரும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதன் பின் ஷிவானியை தனியே அழைத்து கண்டிக்கும் வகையில் அவருடைய தாயாரும் கேள்வி கேட்டது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. எதுக்கு நீ இந்த ஷோவுக்கு வந்தாய் நீ இந்த வீட்டிற்குள் செய்து கொண்டிருப்பது எல்லாம் வெளி...
ஷிவானி தாயாரின் வருகையால் கண்கலங்கிய பாலாஜி

ஷிவானி தாயாரின் வருகையால் கண்கலங்கிய பாலாஜி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
ஷிவானி தாயாரின் வருகையால் கண்கலங்கிய பாலாஜி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக உள்ளே வர உள்ளனர். அந்த வகையில் இன்று ஷிவானியின் தாயார் வருகை குறித்த காட்சிகள் முதல் புரமோவில் இருந்தது. அவர் ஷிவானியிடம் இங்கே வந்து நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ செய்வது எதுவும் வெளியே தெரியாது என்று நினைத்து கொண்டிருக்கின்றாயா என்று ஷிவானியிடம் அவரது தாயார் கண்டிப்பது போன்ற காட்சிகள்  இருந்தது. இந்த நிலையில் ஷிவானியிடம் ஒரு சில நிமிடங்கள் மிகவும் ஆவேசமாக தனியாக அவரது தாயார் பேசிக்கொண்டிருப்பது மற்ற போட்டியாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பாலாஜி மிகுந்த வருத்தப்படுகிறார். என்னால் தான் பிரச்சனையோ என்று மிகுந்த வருத்தப்படும் பாலாஜிக்கு ரம்யா ஆறுதல் கூறுகிறார். இதுகுறித்து அவரிடம் ரம்யா கூறியபோது, இருவருக்கும் இடையே ந...