ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: sonu sood

சோனு சூட் படத்தில் அடிவாங்குவதை நிஜம் என நம்பி டி.வி.யை உடைத்த குட்டி ரசிகன்!

சோனு சூட் படத்தில் அடிவாங்குவதை நிஜம் என நம்பி டி.வி.யை உடைத்த குட்டி ரசிகன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
சோனு சூட் படத்தில் அடிவாங்குவதை நிஜம் என நம்பி டி.வி.யை உடைத்த குட்டி ரசிகன்! தெலங்கானா மாநிலம் சூர்யாபேட் மாவட்டத்தை சேர்ந்தவர் குருவையா. இவரது 7 வயது மகன் விராட், நடிகர் சோனு சூட்டின் தீவிர ரசிகனாம். குருவையா தனது மகனை உறவினர் வீட்டு திருமணத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரது மகன் விராட், சோனு சூட் நடித்த ‘துக்குடு’ என்ற தெலுங்கு படத்தை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தான். ‘துக்குடு’ படத்தில் ஹீரோ மகேஷ் பாபு, வில்லன் சோனு சூட்டை அடித்து துவம்சம் செய்வது போன்று ஒரு சண்டைக் காட்சி இடம்பெற்றிருக்கும். தனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் அடிவாங்குவதை பொறுத்துக்கொள்ள முடியாத விராட், மகேஷ் பாபு மீதான ஆத்திரத்தில் டி.வி மீது கல்லை எறிந்துள்ளான். டி.வி உடையும் சத்தம் கேட்டதும், உறவினர்கள் அங்கு விரைந்தனர். அதன்பிறகு தான் சிறுவன் விராட், சோனு சூட்டுக்காக டி.வி.யை உடைத்தது தெரியவந்தது. இ...
கொரோனா நோயாளிகள் 22 பேரின் உயிரைக் காப்பாற்றிய சோனு சூட்!

கொரோனா நோயாளிகள் 22 பேரின் உயிரைக் காப்பாற்றிய சோனு சூட்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
கொரோனா நோயாளிகள் 22 பேரின் உயிரைக் காப்பாற்றிய சோனு சூட்! தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சோனு சூட். இவர் ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்தாண்டு கொரோனா லாக்டவுன் போடப்பட்ட சமயத்தில் இருந்து ஏழை எளிய மக்களுக்கு எண்ணிலடங்கா உதவிகளை செய்துள்ளார். தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா தீவிரமாக பரவிவரும் நிலையில் நடிகர் சோனு சூட்டிடம் உதவி கேட்டு ஏராளமான அழைப்புகள், மெசேஜ்கள் குவிந்தவண்ணம் உள்ளது. அவர்களுக்கு தன்னால் இயன்றவரை உதவி வருகிறார் சோனு சூட். அந்தவகையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில், கொரொனா நோயாளிகள் 22 பேர் ஆக்ஸிஜன் இல்லாமல் உயிருக்கு போராடி வருவதாகவும், அவர்களைக் காப்பாற்ற உதவி கேட்டு நடிகர் சோனு சூட்டை அணுகி உள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு உடனடியாக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கிடைக்க ஏற்பாடு செய்து கொடுத்து ...
உயிருக்கு போராடிய கொரோனா நோயாளி… ஆம்புலன்ஸ் விமானம் அனுப்பி உதவிய சோனு சூட்!

உயிருக்கு போராடிய கொரோனா நோயாளி… ஆம்புலன்ஸ் விமானம் அனுப்பி உதவிய சோனு சூட்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
உயிருக்கு போராடிய கொரோனா நோயாளி... ஆம்புலன்ஸ் விமானம் அனுப்பி உதவிய சோனு சூட்! உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியை சேர்ந்தவர் கைலாஷ் அகர்வால். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், ஜான்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு இவரது உடல்நிலை மோசமானதால், உயர் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். பின்னர் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையை தேடி அலைந்துள்ளனர். ஆனால் எங்கும் இடம் கிடைக்க வில்லையாம். இதையடுத்து டுவிட்டர் வாயிலாக நடிகர் சோனு சூட்டுக்கு நிலமையை எடுத்துக் கூறி உள்ளனர். இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இடம் இருப்பதை அறிந்த சோனு சூட், கைலாஷ் அகர்வாலை ஜான்சியில் இருந்து ஐதராபாத்துக்கு கூட்டிச் செல்ல தன் சொந்த செலவில் ஆம்புலன்ஸ் விமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். ஐதராபாத்தில் சிகிச்சை பெற்று வரும் கைலாஷ்...