திங்கட்கிழமை, ஆகஸ்ட் 3
Shadow

Tag: #southeasternsnowstorm

அமெரிக்காவின் தென் கிழக்கு மாகாணங்களுக்கு பனிபுயல் எச்சரிக்கை! ஆயிரம் விமானங்கள் ரத்து!!

அமெரிக்காவின் தென் கிழக்கு மாகாணங்களுக்கு பனிபுயல் எச்சரிக்கை! ஆயிரம் விமானங்கள் ரத்து!!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
  அமெரிக்காவின் தென்கிழக்கு மாகாணங்களான கென்டக்கி, ஓஹியோ, மேற்கு வர்ஜீனியா, அட்லாண்டா உள்ளிட்ட 10 மாகாணங்களை பனிப்புயல் தாக்கக் கூடும் என்று குளிர்கால புயல் கண்காணிப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வெள்ளியன்று வேகமாக நகர்ந்து வரும் பனிப்புயலால் மத்திய மேற்குப் பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல பள்ளிகள் மூடப்பட்டன. பல பள்ளிகளில் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டன. டெஸ் மொயின்ஸில் உள்ள விமான நிலையத்தில் 14 அங்குலத்திற்கும் அதிகமான பனிப்பொழிவு காணப்பட்டதாக தேசிய வானிலை சேவை ஆய்வாளர் பிராட் ஸ்மால் தெரிவித்துள்ளார். மத்திய மற்றும் தெற்கு அயோவாவில் ஒரு அடி உயரத்திற்கு பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.  டென்னசியின் சில பகுதிகள் 14 சென்டிமீட்டர் அளவிற்கு பனி பொழிவை பெறக்கூடும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்தனர். வ...