இன்று முதல் தமிழகத்தில் ‘இ-பதிவு’ முறை கட்டாயம்!
இன்று முதல் தமிழகத்தில் 'இ-பதிவு' முறை கட்டாயம்!
தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணிப்பதற்கு ‘இ-பதிவு' முறை கட்டாயம் ஆகும்.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகரிப்புக்கு ஏற்ப ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கு ‘இ-பதிவு' முறை (http://eregister.tnega.org) அமல்படுத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் கடந்த 13-ந்தேதி நடைபெற்ற அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைக்கு ஏற்ப முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடந்த 15-ந்தேதி அமலுக்கு வந்தது.
இந்த உத்தரவில், 'த...
