
இன்று முதல் தமிழகத்தில் ‘இ-பதிவு’ முறை கட்டாயம்!
தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணிப்பதற்கு ‘இ-பதிவு’ முறை கட்டாயம் ஆகும்.

எனவே தமிழகத்தில் இன்று முதல் ‘இ-பதிவு’ முறை கட்டாயம் ஆகிறது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் இருந்து யார், யார் வருகிறார்கள்? என்பதை கண்காணித்து, அதனடிப்படையில் கொரோனா பரவலை தடுப்பதற்கான முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
காய்கறிகள், மளிகை, பால், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வெளியே செல்வதற்கு ‘இ-பதிவு’ அவசியம் இல்லை. இந்த பொருட்களை வாங்குபவர்கள் வாகனங்களில் செல்லாமல் தங்கள் வீட்டின் அருகே உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்றும், அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக ஒரு ஏரியாவில் இருந்து மற்றொரு ஏரியாவுக்கு சென்றால் அனுமதி மறுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் தீவிரமாக இருந்த நேரத்தில் ‘இ-பாஸ்’ நடைமுறை கொண்டு வரப்பட்டது. ‘இ-பாஸ்’ வாங்க சிரமமான நிலை இருந்தது. ஆனால் இடைத்தரகர்கள் தலையீட்டால், ‘இ-பாஸ்’ நடைமுறை குளறுபடியானது. இதனால் மக்கள் பரிதவிப்புக்கு ஆளாகினர்.
எனவே தற்போது ‘இ-பதிவு’ என்ற எளிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
