வியாழக்கிழமை, செப்டம்பர் 17
Shadow

குஜராத்தில் தொடர்ந்து 2வது நாளாக இன்று மீண்டும் நிலநடுக்கம்!

குஜராத்தில் தொடர்ந்து 2வது நாளாக இன்று மீண்டும் நிலநடுக்கம்!

குஜராத்தில் தொடர்ந்து 2வது நாளாக இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மாநிலத்தில் ராஜ்கோட் பகுதியில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

ராஜ்கோட்டிலிருந்து 122 கி.மீ., தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.3 ஆக பதிவானது என்று தேசிய புவியியல் மையம் தெரிவித்திருந்தது. இதனால் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில் இன்றும் ராஜ்கோட் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிற்பகல் 12.57 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ராஜ்கோட்டிலிருந்து வடமேற்கில் 83 கி.மீ., தொலைவில் பதிவாகி உள்ளது.  கட்ஜ் பகுதியில், 4.2 ரிக்டர் அளவுகோலில் இம்மாதம் 10ம் தேதி நில நடுக்கம் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில், மீண்டும், அம்மாநிலத்தின் மற்றொரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2001 ஜனவரி 31ம் தேதி குஜராத் மாநிலம், கட்ஜ் பகுதியில் நேரிட்ட நிலநடுக்கத்தால் 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1,67,000க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 4 லட்சம் வீடுகள் தரைமட்டமாயின. 6 லட்சம் மக்கள் வாழிடம் இல்லாமல் வேறு நகரங்களுக்கு இடம் பெயர்ந்தனர். இந்தியா கண்ட மிகப்பெரிய பூகம்பமாக அந்த சம்பவம் பார்க்கபபடுகிறது. இந்த நிலையில், அடுத்தடுத்த நில அதிர்வுகள் குஜராத் மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளன.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன