வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

ரஷியாவில் இருந்து மேலும் 60 ஆயிரம் டோஸ் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இந்தியா வந்தது!

ரஷியாவில் இருந்து மேலும் 60 ஆயிரம் டோஸ் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இந்தியா வந்தடைந்தது.

ரஷிய தயாரிப்பான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி, கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக கருதப்படுகிறது. எனவே, இந்தியா மேற்கொண்ட முயற்சியின் பலனாக, கடந்த 1-ந் தேதி ரஷியாவில் இருந்து 1½ லட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தன. மத்திய மருந்துகள் ஆய்வுக்கூடம் அதற்கு ஒப்புதல் அளித்தது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை ரூ.948 மற்றும் 5 சதவீத ஜி.எஸ்.டி. என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14-ந் தேதி, ஐதராபாத்தில் முதல் முறையாக ஒரு பயனாளிக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்தநிலையில், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் 2-வது தொகுப்பு நேற்று இந்தியாவுக்கு வந்தது. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. அதில், 60 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் இருந்தன. விமானத்தில் இருந்து தடுப்பூசி பெட்டிகள் இறக்கப்படும் புகைப்படத்தை ஸ்புட்னிக்- வி இணையதளம் வெளியிட்டுள்ளது.

154 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன