டிராகன் கோடங்கி விமர்சனம் 3.5/5
டிராகன் கோடங்கி விமர்சனம் 3.5/5
நடிகர்கள்:
பிரதீப் ரங்கநாதன்,அனுபமா பரமேஸ்வரன்,மிஷ்கின்,கவுதம் மேனன், ரவீந்தர், ஜார்ஜ்
இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து
பள்ளியில் 96 சதவீத மார்க் எடுக்கிற நல்ல பையனாக வரும் பிரதீப் ரங்கநாதன் கூட படிக்கிற ஒரு பெண்ணிடம் காதலை சொல்கிறார். படிக்கிற பையனைவிட கெத்தாக சுத்தும் பையனைத்தான் பிடிக்கும் என அந்த காதலை அந்த பெண் நிராகரிக்க… கல்லூரியில் சேர்ந்த்தும் படிப்பை விட்டுவிட்டு பேரையும் டிராகன் என மாற்றிக் கொண்டு கெத்தாக சுத்தும் பிரதீப். அவரை கூட படிக்கும் அனுபமா பரமேஸ்வரன் அநியாயத்துக்கு காதலிக்கிறார். அந்த கல்லூரியின் பிரின்ஸ்பாலாக மிஷ்கின். படிக்காமல் 48 அரியர் வைத்து கல்லூரியில் இருந்து வெளியேறி நண்பர்கள் உதவியுடன் அப்பா அம்மாவிடம் கல்லூரியை முடித்து வேலையில் இருப்பதாக பொய் சொல்லி கெத்து காட்டி வரும் பிரதீப்பை ஒரு கட்ட்த்தில் காதலி அனுபமா கழற...









