
டிராகன் கோடங்கி விமர்சனம் 3.5/5
நடிகர்கள்:
பிரதீப் ரங்கநாதன்,அனுபமா பரமேஸ்வரன்,மிஷ்கின்,கவுதம் மேனன், ரவீந்தர், ஜார்ஜ்
இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து
பள்ளியில் 96 சதவீத மார்க் எடுக்கிற நல்ல பையனாக வரும் பிரதீப் ரங்கநாதன் கூட படிக்கிற ஒரு பெண்ணிடம் காதலை சொல்கிறார். படிக்கிற பையனைவிட கெத்தாக சுத்தும் பையனைத்தான் பிடிக்கும் என அந்த காதலை அந்த பெண் நிராகரிக்க… கல்லூரியில் சேர்ந்த்தும் படிப்பை விட்டுவிட்டு பேரையும் டிராகன் என மாற்றிக் கொண்டு கெத்தாக சுத்தும் பிரதீப். அவரை கூட படிக்கும் அனுபமா பரமேஸ்வரன் அநியாயத்துக்கு காதலிக்கிறார். அந்த கல்லூரியின் பிரின்ஸ்பாலாக மிஷ்கின். படிக்காமல் 48 அரியர் வைத்து கல்லூரியில் இருந்து வெளியேறி நண்பர்கள் உதவியுடன் அப்பா அம்மாவிடம் கல்லூரியை முடித்து வேலையில் இருப்பதாக பொய் சொல்லி கெத்து காட்டி வரும் பிரதீப்பை ஒரு கட்ட்த்தில் காதலி அனுபமா கழற்றி விடுகிறார்.
அதில் அவமானப்படும் பிரதீப் குறுக்கு வழியில் போலி டிகிரி சர்ட்டிபிகேட் கொடுத்து கவுதம்மேன்ன் கம்பெனியில் வேலைக்கு சேருகிறார். கை நிறைய சம்பளம், சொந்த வீடு, சொகுசு கார், பணக்கார வீட்டு சம்மந்தம் என வாழக்கை மாறிய சூழலில் காலேஜ் பிரின்ஸ்பால் மிஷ்கின் மூலமாக ஒரு சிக்கல் வருகிறது.
தான் செய்த ஒரு தப்பு கண்டுபிடிக்கப்பட்டால் இந்த வசதியான வாழ்க்கை பறிபோகும் நிலை.
எழுதாமல் விட்ட 48 அரியர்களை ஒரே நேரத்தில் எழுதி வெற்றி பெற்றால் சிக்கலில் இருந்து தப்பிக்கலாம் என்ற சூழல்.
பிர்தீப் தேர்வு எழுதி நிஜமாகவே வெற்றி பெற்றாரா? கல்யாணம் முடிந்ததா? செய்த ஒரு தவரை சரி செய்தாரா? இதற்கெல்லாம் விடை சொல்கிறது டிராகன்.
இதுவரை மிஷ்கின் நடித்த படங்களில் உருப்படியாக நடித்த ஒரே படம் டிராகன் தான்.
பிரதீப் ஓவர் ஆக்டிங்கை கொஞ்சம் இல்ல இல்ல ரொம்பவே குறைக்க வேண்டும். சிகரெட் பிடித்தால் தான் கெத்துன்னு எவண்டா சொல்லி குடுத்த்து… தனுஷை காப்பி அடிக்கும் பழக்கத்தை மாத்திக்கனும்.
பட்த்துல ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக். பயங்கர சினிமாத்தனம். தப்பா தொடங்கி தப்பா முடிஞ்சுடுமோன்னு போன பட்த்தை சரியா முடிச்ச அந்த கடைசி 20 நிமிஷம்தான் படம்.
படம் தொடங்கி முடிவதற்கு 20 நிமிடம்வரை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவை விமர்சனத்தில் வெளுத்து கட்ட வேண்டும் என நினைத்த நமக்கு… கடைசியில்….”ஒரு தப்பு நம்ம வாழ்க்கையை நல்ல விதமா மாற்றும்னா..அந்தத் தப்பைச் செய்வதில் தப்பே இல்லை” என்று தொடங்கி , அதே நாம் செய்யும் தப்பு அடுத்தவர்களைப் பாதிக்கும்னா அதைச் செய்யவே கூடாது என்று முடித்த விதம்” திட்ட நினைத்தவர்களையும் தன் வசப்படுத்திய இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து…. சபாஷ்டா தம்பி!
கோடங்கி 3.5/5
