
9 லட்சம் பார்வையாளர்களை நெருங்கும் திகிலூட்டும் ”ராபர்” டிரைலர்!
‘மெட்ரோ படத்தின் இயக்குநரான ஆனந்த கிருஷ்ணன் கதை, திரைக்கதை எழுதி மெட்ரோ சத்யா நடிப்பில் எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ள படம் ராபர்.
சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த பட்த்தை இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதாவும்,மெட்ரோப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்து தயாரித்துள்ளனர்.
பட்த்தின் டைட்டிலை சிவகார்த்திகேயன் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இந்த சுழலில் படத்தின் டிரைலரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டு பட இயக்குனரை வெகுவாக பாராட்டி உள்ளார்.
டிரைலர் மிக விறுவிறுப்பாக திகிலூட்டும் விதமாக மிக நேர்த்தியாக இருப்பதாக விஜய்சேதுபதி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
கடந்த நான்கு நாட்கள் முன்பு சரிகம தமிழ் யூடியூப் தளத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
இந்த ராபர் டிரைலரும் அதன் திகிலூட்டும் பரபரப்பான காட்சிகளும் இணையத்தில் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.
யூடியூப் தளத்தில் 9 லட்சம் பார்வையாளர்களை நெருங்கி உள்ளது இந்த ராபர் டிரைலர்.
டிரைலருக்கு ரசிகர்களிடம் பாசிட்டிவான கமெண்ட்கள் வந்துள்ளது.
ரசிகர்கள் வரவேற்கும் படங்களை தேர்வு செய்து வெளியிடும் சக்திபிலிம் பேக்ட்ரி இந்த பட்த்தை வரும் மார்ச் 14ம் தேதி உலகம் முழுதும் ரிலீஸ் செய்கிறது.
ராபர் படத்தின் ஆடியோ ரிலீஸ் மார்ச் 8ம் தேதி வெளியாகும் என தெரிகிறது.

