
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் கோடங்கி விமர்சனம் 3.5/5
நடிகர்கள்:
பவிஷ்,அனிகா,ப்ரியா பிரகாஷ் வாரியர்,சரத்குமார், சரண்யா பொன்வண்ணன்
இயக்கம்: தனுஷ்
இசை : ஜிவி பிரகாஷ்
தனுஷ் இயக்கி தயாரித்திருக்கும் படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். தனுஷ் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக ஒரு காதல் கதையில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
படம் தொடங்கும் போதே இது ஒரு யூஷுவல் காதல் கதை என்றே தொடங்குகிறது.
கல்யாணம் வேண்டாம் என இருக்கும் ஹீரோ தன் அம்மா அப்பா கட்டாயத்தால் பெண் பார்க்க போகிறார். பெண்ணை பார்த்த்தும் ஷாக் ஆகிறார். அந்த பெண் ஹீரோவுடன் ஒன்றாக படித்த பெண் என்பது தெரிய வருகிறது.
இருவரும் பழகிய பின் கல்யாணம் என முடிவெடுக்கையில் பிரேக் அப் செய்த காதலியின் கல்யாண அழைப்பு வருகிறது.
அந்த காதல் பிரேக் அப் ஆன கதையை தோழியிடம் சொல்கிறார் ஹீரோ. இதையடுத்து அந்த கல்யாணத்திற்கு போக சொல்கிறார் தோழி.
கோவாவில் நடக்கும் அந்த கல்யாணத்திற்கு போகிறார் ஹீரோ. அங்கே பழைய காதலியை பார்த்த்தும் மீண்டும் காதல் துளிர்த்த்தா? திட்டமிட்டபடி அந்த கல்யாணம் நடந்த்தா? அல்லது பெற்றோர் பார்த்த தன் தோழியை ஹீரோ கல்யாணம் செய்து கொள்கிறாரா? என்பதை போகிற போக்கில் சொல்லாமல் கொஞ்சம் சுத்தவிட்டு காதில் கொஞ்சம் பூவையும் சுத்திவிட்டு பார்ட் 2 இருக்கு என்பதை சொல்லிவிட்டு முடிக்கிறார் இயக்குனர் தனுஷ்.
ஹீரோவின் காதலியான அனிகா அழகாக இருந்தாலும் காதல் காட்சிகளில் சொதப்புகிறார். ஹீரோவுக்கும் அவருக்குமான ரொமான்ஸ் படு வீக். காரணம் ஹீரோ பவிஷ் நெடு நெடுவென வளர்ந்து நிற்க அனிகாவோ குழந்தை போல பக்கத்தில் நிற்ப்பது… மேட்ச் ஆகலியே இயக்குனரே…
ஆனா ஹீரோ அச்சு அசல் தனுஷ் போலவே உடல் மொழி வசன உச்சரிப்பு. வாரீசை உருவாக்கி விட்டார் போல. நல்ல கதைகளை தேர்வு செய்தால் நிலைக்கலாம்.
ஹீரோ அம்மா சரண்யா பொன்வண்ணன் வழக்கம் போல அடித்து ஆடும் அம்மா.
ஹீரோ நண்பனாக வரும் கதாபாத்திரம் ரசனை ரகம்.
ஹீரோயின் அனிகா அப்பா சரத்குமார் பெரிய பணக்கார அப்பா… வாரீசு படத்தில் வந்த அதே வீடு… அதே அப்பா சரத்குமார்… அதே கேன்சர் வியாதி… அதே 6 மாத கெடு… ஏம்பா இயக்குனரே மத்த்தெல்லாம் வித்தியாசமா யோசிக்கிற போது இந்த அறதபழசு லைன மாத்தியிருக்கலாம்.
அதோடு, நடிகர், நடிகைகளின் நடிப்பில் ஆழம் இல்லாததால் அந்த கதாபாத்திரங்களின் வலி, சந்தோஷம், அழுகை, யதார்த்தத்தை நம்மால் உணர முடியவில்லை. ஜிவி பிரகாஷின் இசையில் கோல்டன் ஸ்பாரோ தவிர்த்து பிற பாடல்கள் பெருசா கை கொடுக்கவில்லை.
கலர்புல் காட்சிகள் நிறைய இருப்பது போல படம் முழுக்க ஏகப்பட்ட மைனஸ் நிறைந்து இருந்தாலும் இயக்குனர் தனுஷ் தப்பிக்கிறார். காரணம் படம் பார்க்கிற பலருக்கு பல நிஜ சம்பவங்களும் கண் முன் வந்து போவதுதான்.
பார்த்த்தும் காதல் என சுத்தும் இளைய சமூகத்தை இந்த NEEK இழுக்கும்!
கோடங்கி 3.5/5
