
இஸ்ரேலுக்கு எதிராக அணி திரளும் இஸ்லாமிய நாடுகள்!
கிழக்கு ஜெருசலேமில், அல்-அக்ஸா மசூதியில், இந்த மாத தொடக்கத்தில் இஸ்ரேலிய காவல் துறை மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதை அடுத்து காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாலஸ்தீனத்தின் பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் ஜெருசலேம் நோக்கி ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசியது. ஆனால், இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பான Iron Dome மூலம் இவை தடுத்து நிறுத்தப்பட்டதால், பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது.
சனிக்கிழமையன்று, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் காசா (Gaza) பகுதியில், இருந்த அல்ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் மற்றும் பிற செய்தி ஊடகங்களின் அலுவலகங்கள் இருந்த மிகப்பெரிய கட்டிடம் தகர்க்கப்பட்டது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான மோதல்கள் தொடர்ந்து இரு வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) அனைத்து 57 நாடுகளும் ஞாயிற்றுக்கிழமை அவசர கூட்டம் ஒன்றை கூட்டியுள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையில் பதற்றம் தொடங்கியதில் இருந்து, முதல் முறையாக இஸ்லாமிய நாடுகள் கூட்டாக எடுத்துள்ள முதல் நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
