செவ்வாய்க்கிழமை, ஜூன் 9
Shadow

Tag: thirupathi temple

ரூ.47 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்ட பக்தர்களின் காணிக்கை!

ரூ.47 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்ட பக்தர்களின் காணிக்கை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் விரதம் இருந்து திருப்பதிக்கு வந்து நேர்த்தி கடனாக தலைமுடி காணிக்கை செலுத்துவது வழக்கம். தரிசனத்திற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களில் தினமும் 25 ஆயிரம் முதல் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்துகின்றனர். பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடி தரம் வாரியாக பிரித்து சேகரித்து வைக்கப்படுகிறது. பின்னர் குறிப்பிட்ட அளவு முடி சேர்ந்ததும் ஏலம் விடப்பட்டு வருகிறது. நேற்று 21 டன் எடை கொண்ட தலைமுடி ஆன்லைனில் ஏலம் விடப்பட்டது. ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தலைமுடியை ரூ.47 கோடிக்கு ஆன்லைனில் ஏலம் எடுத்ததாக திருப்பதி தேவஸ்தான பொது மேலாளர் கிருஷ்ணா ரெட்டி தெரிவித்தார். திருப்பதியில் நேற்று 66,072 பேர் தரிசனம் செய்தனர். 25,239 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.23 கோடி உண்டியலில் காணிக்க...
பலத்த மழை திருப்பதியில் 2 நாட்கள் நடை பாதைகள் மூடல்

பலத்த மழை திருப்பதியில் 2 நாட்கள் நடை பாதைகள் மூடல்

HOME SLIDER, செய்திகள்
பலத்த மழை திருப்பதியில் 2 நாட்கள் நடை பாதைகள் மூடல் திருப்பதி கோவிலில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் தரிசனத்திற்காக வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து திருப்பதிக்கு வாகனங்கள் மூலம் வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக மலைப்பாதையில் நடந்து சென்று தரிசனம் செய்வது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் காரணமாக அலிபிரி வழியாக செல்லும் நடைபாதையில் மழை வெள்ளம் புகுந்தது. மேலும் நடைபாதையில் பாறைகள் மற்றும் மண் சரிவு ஏற்பட்டதால் 2 நாட்கள் நடைபாதை மூடப்பட்டன. இந்த நிலையில் புயல் சின்னம் காரணமாக பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலிபிரி வழியாக செல்லும் மலைப்பாதை மற்றும் ஸ்ரீவாரிமெட்டு ஆகிய நடைபாதைகள் இன்றும் நாளையும் ம...