புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: Tirupati Temple

பலத்த மழையால் திருப்பதியில் பக்தர்கள் செல்லும் வழியில் மரங்கள் சாய்ந்தது!

பலத்த மழையால் திருப்பதியில் பக்தர்கள் செல்லும் வழியில் மரங்கள் சாய்ந்தது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஆந்திர மாநிலம் திருப்பதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. லேசாக சாரல் மழை செய்தது. கோடை விடுமுறை என்பதால் தற்போது திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்து வருகின்றனர். சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இந்தநிலையில் மாலை 5 மணிக்கு திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சூறாவளி காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தது. சாலைகள் மற்றும் மின்கம்பங்கள் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலைகளில் மரம் விழுந்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். பக்தர்கள் செல்லும் வழியிலும் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் த...
திருப்பதி கோவிலுக்கு வரும் வெளிநாட்டு நன்கொடைகள் நிறுத்தம்! ஏன் தெரியுமா?

திருப்பதி கோவிலுக்கு வரும் வெளிநாட்டு நன்கொடைகள் நிறுத்தம்! ஏன் தெரியுமா?

HOME SLIDER, NEWS, செய்திகள்
திருப்பதி கோவிலுக்கு வரும் வெளிநாட்டு நன்கொடைகள் நிறுத்தம்! ஏன் தெரியுமா? திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் உண்டியலில் தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை காணிக்கையாக செலுத்துகின்றனர் வெளிநாடுகளில் வாழும் ஏழுமலையான் பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு ஆன்லைன் மூலம் நன்கொடை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் வெளிநாட்டு நிதியை பெறுவதற்கான உரிமத்தை புதுப்பிக்காததால் வெளிநாட்டில் இருந்து வரும் நன்கொடை நிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் மதம் சார்ந்த அறக்கட்டளைகளுக்கு நிதி வழங்குவதற்காக உள்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் உரிமம் வழங்கி வருகிறது. அவ்வாறு திருப்பதி தேவஸ்தானத்திற்கு வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் உரி...
பலத்த மழை திருப்பதியில் 2 நாட்கள் நடை பாதைகள் மூடல்

பலத்த மழை திருப்பதியில் 2 நாட்கள் நடை பாதைகள் மூடல்

HOME SLIDER, செய்திகள்
பலத்த மழை திருப்பதியில் 2 நாட்கள் நடை பாதைகள் மூடல் திருப்பதி கோவிலில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் தரிசனத்திற்காக வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து திருப்பதிக்கு வாகனங்கள் மூலம் வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக மலைப்பாதையில் நடந்து சென்று தரிசனம் செய்வது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் காரணமாக அலிபிரி வழியாக செல்லும் நடைபாதையில் மழை வெள்ளம் புகுந்தது. மேலும் நடைபாதையில் பாறைகள் மற்றும் மண் சரிவு ஏற்பட்டதால் 2 நாட்கள் நடைபாதை மூடப்பட்டன. இந்த நிலையில் புயல் சின்னம் காரணமாக பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலிபிரி வழியாக செல்லும் மலைப்பாதை மற்றும் ஸ்ரீவாரிமெட்டு ஆகிய நடைபாதைகள் இன்றும் நாளையும் ம...
கொரோனா பரவலால் திருப்பதியில் புதிய விதிமுறைகள் அமல்- பக்தர்கள் அவதி!

கொரோனா பரவலால் திருப்பதியில் புதிய விதிமுறைகள் அமல்- பக்தர்கள் அவதி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா பரவலால் திருப்பதியில் புதிய விதிமுறைகள் அமல்- பக்தர்கள் அவதி! ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென உயர்ந்து வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு புதிய விதிமுறைகளை திருப்பதி தேவஸ்தானம் நேற்று முதல் அமல்படுத்தி உள்ளது. மறுநாள் தரிசன டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே முந்தைய நாள் மதியம் 1 மணிக்கு பிறகு அலிபிரி சாலை வழியாக திருமலைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதேபோன்று, மறுநாள் தரிசன டோக்கன் பெற்று நடைபாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு, முந்தைய நாள் காலை 9 மணிக்கு பிறகு மலைப்பாதையில் நடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திருப்பதிக்கு வந்த ஏராளமான பக்...