பத்திரிகையாளர்களின் எழுத்துகள் தான் எங்களை போன்ற இயக்குனர்களுக்கு உத்வேகமும் உற்சாகமும் கொடுக்கிறது – கிருத்திகா உதயநிதி
இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகர்கள் தம்பி ராமையா, ரைட்டர் ஆண்டனி, முல்லை கோதண்டம், லிடியன் என களை கட்டிய TMJA பொங்கல் விழா
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகர்கள் தம்பி ராமையா, முல்லை கோதண்டம், இசையமைப்பாளர் சதீஷ் வர்ஷன், உலக புகழ் பெற்ற லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்த வர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் கிருத்திகா உதயநிதி பேசும் போது, பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள ரொம்ப பாசத்தோடு கூப்பிட்டதால் இந்த விழாவிற்கு வந்தேன்.
பத்திரிகையாளர்களின் எழுத்துகள் தான் எங்களை போன்ற இயக்குனர்களுக்கு உத்வேகமும் உற்சாகமும் கொடுக்கிறது.
என்னுடைய அடுத்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவு வேண்டும் என்றார்.
...

