பசுமைப் புற்களின் மேல் வெள்ளைக் கம்பளம்… கொடைக்கானலில் மீண்டும் உறைபனி
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் ஒரு குளுமை நிறைந்த சர்வதேச சுற்றுலாத் தலமாகும்.
இங்கு டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையில் கடும் உறைபனி பொழிவு காணப்படும்.
இந்நிலையில் கடந்த வருடம் பெய்த தொடர் மழையின் காரணமாக உறைபனி காலமானது தாமதமாக துவங்கியது.
மேலும் டிசம்பர் மாதம் இறுதி நாட்களில் மட்டும் உறை பனியானது சில நாட்கள் மட்டும் நிலவியது.
அதன்பின் கடும் குளிர்,சாரல் மழை மற்றும் மிதமான வெப்பம் நிலவி வந்தது.
இந்நிலையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும் இரவில் வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸ் வரை நிலவியதால் மலைப்பகுதி முழுவதும் குளிர் நிலவி வந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் 9 டிகிரி செல்சியஸ்க்கு குறைவாக வெப்பநிலை காணப்பட்டு கடும் குளிர் நிலவியதால் பசுமைப்புற்களின் மேல் விழுந்த நீர்ப் பனித் துளிகள் உறைந்த...
