11:11 தயாரிப்பில் டாக்டர் பிரபு திலக் வழங்கும் கதிர்- நடராஜன் சுப்ரமணியம்- நரேன் நடிக்கும் ‘யூகி’!
11:11 தயாரிப்பு நிறுவனம் டாக்டர். பிரபு திலக் வழங்கி வரும் படங்கள் பார்வையாளர்கள், விமர்சகர்கள் மற்றும் வர்த்தக வட்டத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
தற்போது, ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர், நடராஜன் சுப்ரமணியம் மற்றும் நரேன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் 'யூகி' படத்தை வழங்குகின்றனர்.
11:11 புரொடக்ஷன்ஸ், டாக்டர் பிரபு திலக் பேசுகையில், "'யூகி' படத்தின் உரிமையை 11:11 புரொடக்ஷன் வாங்கியிருப்பதில் மகிழ்ச்சி.
படத்தில் கடுமையான தரமான உழைப்பை வழங்கி இருக்கும் அணியோடு இணைந்திருக்கிறோம் என்பதில் பெருமை.
பார்வையாளர்களைக் கட்டிப்போடும் வகையிலான சிறப்பான சில அம்சங்கள் இந்தக் கதையில் உள்ளது. 11:11 புரொடக்ஷன்ஸ் எப்போதுமே தனித்துவமான கதைகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டும்.
அந்த வரிசையில் 'யூகி' படமும் நிச்சயமும் தனித்துவமான கதையாக அமையும் நடிகர்கள் கதிர், நடராஜன் சுப்பிரம...
