ராமர் பாலம் புராணக்கதையா? கட்டப்பட்டதா? விவாதத்தை முடிவுக்கு கொண்டு வருதா அமெரிக்கா டிவி..!?
தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் அருகே பாம்பன் பகுதியில் இருந்து இலங்கையின் மன்னார் வளைகுடா வரையில் சுண்ணாம்புக் கற்களாலான மேடான பகுதி செல்கிறது. இது இயற்கையாக உருவானது என்று ஒருசாரார் கூறுகின்றனர். ஆனால், புராணத்தின்படி சீதையை மீட்க ராமர் மற்றும் வானரங்களால் கட்டப்பட்டது என்று இந்துக்கள் நம்புகின்றனர். ‘ஐஸ் ஏஜ்’ காலத்தில் இந்தப் பாலம் இயற்கையாக உருவானது என்று புவியியல் ஆதாரங்கள் கூறுவதாக என்சைக்கிளோபீடியா பிரிட்டானிகா கூறி உள்ளது. இதற்கிடையே இவ்வழியாக முன்னெடுக்க திட்டமிடப்பட்ட மத்திய அரசின் சேது சமுத்திர திட்டம் பெரும் விவாதப்பொருளாகியது.
தென் தமிழக மக்களின் 150 ஆண்டு கால கனவுத்திட்டம், சேது சமுத்திர திட்டம். இந்த திட்டம் நிறைவேறினால், கிழக்கு, மேற்கு கடற்கரை இடையே 424 கடல் மைல் தொலைவு குறையும். பயண நேரமும் 30 மணி நேரம் குறையும். இலங்கையை சுற்ற வேண்டியதும் இல்லை. இந்த திட்டம் மத்தியில் அமைந்...









