அரசியலுக்கு ரஜினி வரவேண்டும் ரசிகர்கள் சந்திப்பில் வேண்டுகோள்… !
அரசியலுக்கு ரஜினி வரவேண்டும்
ரசிகர்கள் மீண்டும் வேண்டுகோள்
சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டு ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தி பேசினார்கள்.
“ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை அனைத்து ரசிகர்களும் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறோம். அவருடைய அரசியல் பிரவேசத்தை தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள். ரஜினிகாந்த் வந்தால் மட்டுமே அரசியல் தூய்மைப்படுத்தப்படும் என்று மக்கள் நம்புகிறார்கள். எனவே விரைவில் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்” என்று அவர்கள் பேசினார்கள். இதுகுறித்து இப்போது விவாதிக்க வேண்டாம் என்று ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் பதில் அளித்தனர்.
இந்த கூட்டத்தில் ரஜினிகாந்த் பங்கேற்பார் என்று எதிர்பார்த்து சென்னையில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் ஆயிரக...
