ஏறுதழுவுதல் எங்கள் பண்பாடு- ஜல்லிக்கட்டுக்காக மதுரையிலும் இளைஞர்கள் எழுச்சி
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி அளிக்கக் கோரி இன்று மதுரையில் மிகப்பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் பங்கேற்றனர். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கக்கோரி அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பீட்டா என்ற விலங்குகள் நல அமைப்பு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்த 2014ம் ஆண்டு மே மாதம் தடை விதித்தது. கடந்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதனால் ஜல்லிக்கட்டு நடக்கும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் உச்சநீதிமன்றம் ஜனவரி14ம் தேதி அந்த அறிவிப்பை தடை செய்தது.
இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகள...
