சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!
சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!
KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்கள் தயாரிப்பில், ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘டாக்ஸிக்: A Fairy Tale for Grown-Ups’. ஆக்ஷன், கேங்ஸ்டர் உலகம், குடும்ப உறவுகள், துரோகம், அதிகாரப் போட்டி என பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாகியுள்ள இப்படம், ஆகஸ்ட் 26-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ‘டாக்ஸிக்’ படக்குழுவினர் தொடர்ந்து ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழ் ரசிகர்களை நேரடியாகச் சந்தித்து தமிழ் பதிப்பை விளம்பரப்படுத்தும் நோக்கில், நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு ...









