புதன்கிழமை, ஜூன் 24
Shadow

Author: Kodanki

மக்களை ஏமாற்றி தயாரிப்பாளர்களின்  கோவணத்தை உருவும் முன்னணி நடிகர்கள்  வெளுத்து வாங்கும் தயாரிப்பாளர்

மக்களை ஏமாற்றி தயாரிப்பாளர்களின் கோவணத்தை உருவும் முன்னணி நடிகர்கள் வெளுத்து வாங்கும் தயாரிப்பாளர்

செய்திகள்
  தமிழ் சினிமாவில் சமீப காலமாக திருட்டு கதைகள் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், பட வெற்றி விழாக்களும் போலியாக மக்களை ஏமாற்றுவதற்காக தயாரிப்பாளர்களை நஷ்டத்தில் தள்ளி நடிகர்களின் விளம்பரத்திற்காக நடத்தப்படுகிற விழ £க்கள் என்று பகீர் உண்மையை தயாரிப்பாளர் ஒருவர் வெளிப்படுத்தியிருப்பதால் தமிழ் சினிமாவில் பல வெற்றி விழாக்களின் பே £லித்தனம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இது குறித்து தயாரிப்பாளர் திருப்பூர் சுப்பிரமணியம் என்பவர் வாட்ஸ் அப் குரல் மூலம் வெளியிட்டிருக்கும் ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ் சினிமாவில் பணம்போட்டு படம் தயாரிக்கிற தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் எல்லாருமே பெருத்த நஷ்டத்தில்தான் இருக்கிறார்கள். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இதுதான் நிலைமை. ஆனால், இதை மறைத்து விட்டு படம் ரிலீஸ் ஆன இரண்ட £வது நாளே வெற்றி விழா கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயம். அந்...

நடிகர் தியாகராஜன்.புகழாரம்

செய்திகள்
  விஜய் ஆண்டனி - மியா ஜார்ஜ் நடிப்பில், ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'எமன்' திரைப்படத்தை 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' சார்பில் ராஜு மகாலிங்கம் மற்றும் 'விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்' சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி ஆகியோர் இணைந்து தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. "சில  வருட கால இடைவேளைக்கு பிறகு  நடிக்க முடிவு செய்த நான், என்னுடைய கதாபாத்திரங்களை மிக கவனமாக தேர்வு செய்து வருகிறேன். ஒரு சில கதைகளை கேட்ட அடுத்த கணமே, நாம் அதில் நடித்தாக வேண்டும் என்று நமக்கு தோன்றும். அப்படி எனக்கு கேட்ட மாத்திரத்திலேயே அவ்வாறு என் மனதில் தோன்றிய திரைப்படம் தான் 'எமன்'.  எதிர்பாராத திருப்புமுனைகளை உள்ளடக்கி, முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் 'எமன்' திரைப்படத்தில் நான் ஒரு முக்கியமான அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். நல்ல வலுவான கதையம்சத்தோடு ஜீவா சங்க...

சினேகா உறுதிமொழி

செய்திகள்
நடிகை சினேகா சமீபத்தில் நடிகை பாவனாவுக்கு ஏற்பட்ட பாலியல் பலாத்காரம் பற்றி செய்தியாளர்களுக்கு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது : "என்னுடைய  துறையில்  பணியாற்றும்  என்  சக கலைஞர்களான பாவனா மற்றும் வரலக்ஷ்மி ஆகியோருக்கு நடந்த சம்பவங்கள், எனக்கு மிகுந்த மன வேதனையை அளித்து இருக்கின்றது. இந்த நேரத்தில் அவர்களுக்கு நான் எப்போதும் உறுதுணையாய் இருப்பேன் என்பதைனை  உறுதிப்படுத்தி கொள்ள விரும்புகின்றேன். எந்தவித பயமுமின்றி அவர்களுக்கு நடந்ததை வெளிப்படையாக தெரிவித்த அவர்களின் தைரியத்தை பாராட்டுகின்றேன்.  இத்தகைய பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்,  நம் சமூதாயத்தில்   ஒவ்வொரு நாளும்  நடந்து கொண்டு தான் இருக்கின்றது. பாலியல் துஷ்பிரயோகம், பலாத்காரம் என நாட்டின் ஒவ்வொரு மூலைகளிலும் நடக்கும் கொடுமைகளை அடுக்கி கொண்டே போகலாம். ஆனால் பெரும்பாலான பாதிக்கப்பட்ட பெண்கள் அதனை வெளியே சொல...
நான் முதலமைச்சராக ரசிகர்கள் விரும்புகிறார்கள் : பவர் ஸ்டார் சீனிவாசன்

நான் முதலமைச்சராக ரசிகர்கள் விரும்புகிறார்கள் : பவர் ஸ்டார் சீனிவாசன்

சினி நிகழ்வுகள்
நான் முதலமைச்சராக ரசிகர்கள் விரும்புகிறார்கள் : பவர் ஸ்டார் சீனிவாசன் பவர் ஸ்டார் சீனிவாசன் தற்போது ‘சிரிக்க விடலாமா’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை காவியன் என்பவர் இயக்கியுள்ளார். நிதின் சத்யா, மகாநதி சங்கர், சந்தான பாரதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பேசும்போது, இன்று முதலமைச்சராவதற்கு எவ்வளவு கஷ்டம், எவ்வளவு அடிதடி, எவ்வளவு சண்டையெல்லாம் நடக்கிறது. இப்படியெல்லாம் நடக்கும்போது நானும் ஒரு படத்தில் முதலமைச்சராக நடித்திருக்கிறேன். பாக்யராஜ் சாருடன் அந்த படத்தில் நான் நடித்தேன். எல்லோருக்கும் முதலமைச்சர் ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கும். நான் அந்த படத்தின்மூலம் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொண்டேன். இப்படித்தான், நிஜத்தில் சாதிக்க முடியாததை நாங்கள் ...
இயக்குனர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடிகை ஜோதிகா

இயக்குனர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடிகை ஜோதிகா

செய்திகள்
இயக்குனர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடிகை ஜோதிகா தாரைதப்பட்டை பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குனர் பாலா இயக்க ஜோதிகா நடிக்கும் புதிய படமொன்றை EON Studios என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் பாலாவின் B Studios நிறுவனத்துடன் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. இன்னும் பெயரிப்படாத இப்படத்தில் மிகவும் பிரபலமான கதாநாயகன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் யார் என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும் என தயாரிப்பு தரப்பு கூறுகிறது. மார்ச் 1 முதல் துவங்கும் இப்படத்தினை பற்றிய விரிவான செய்திகள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது....
என்னோடு விளையாடு விமர்சனம்

என்னோடு விளையாடு விமர்சனம்

விமர்சனம்
என்னோடு விளையாடு அக்கவுண்டன்டாக இருக்கும் பரத்துக்கு குதிரைப் பந்தயத்தில் மிகவும் ஆர்வம். பந்தயத்தில் எந்த குதிரை தோற்கும், எந்த குதிரை ஜெயிக்கும் என்பதை தனது கணக்கு மூளையால் கணிப்பதில் வல்லவர். இருப்பினும், இந்த குதிரை பந்தயத்தில் லட்சக்கணக்கான பணத்தை இழந்திருப்பார். இதற்கான காரணத்தை யோசிக்கும்போது, குதிரை பந்தயத்தில் மேட்ச் பிக்சிங் நடப்பதை கண்டுபிடிக்கிறார். ஒருகாலத்தில் குதிரை பந்தயத்தில் கொடிகட்டிப் பறந்த ராதாரவி, ஒரு தோல்வியால் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். பின்னர் நம்பர் 1 இடத்தை பிடிப்பதற்காக மீண்டும் போட்டியில் கலந்துகொள்ள வரும் ராதாரவி, தொடர்ந்து ஜெயித்துக் கொண்டிருக்கும் யோக் ஜேப்பியிடம் பேரம் பேசுகிறார். இதை அறியும் பரத், அந்த பணத்தை கைப்பற்ற நினைக்கிறார். இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மற்றொரு முனையில் பெண்களே பிடிக்காத கதிர், வேலை விஷயமாக சென்னை வரும்போது, கட்டாயத்...
பகடி ஆட்டம் விமர்சனம்

பகடி ஆட்டம் விமர்சனம்

விமர்சனம்
பகடி ஆட்டம் நாயகன் சுரேந்தர் பெண்கள் விஷயத்தில் ரோமியோ. பார்க்கிற பெண்களையெல்லாம் அடையவேண்டும் என்ற எண்ணத்திலேயே சுற்றுபவர். இவருடைய அப்பா நிழல்கள் ரவி பெரிய செல்வந்தர், அம்மா ராஜஸ்ரீ பொறுப்பான குடும்பத் தலைவி. மகன் மீது அதிக பாசத்தை பொழிபவர். இந்நிலையில், சுரேந்தர் ஒருநாள் மோனிகாவை பார்த்ததும் அவள்மீது ஆசைப்படுகிறார். மோனிகாவின் குடும்பம் அவளுடைய அக்கா கௌரி நந்தா ஆட்டோ ஓட்டி கொண்டுவரும் பணத்தில்தான் பிழைப்பு நடத்தி வருகிறது. தனது குடும்ப சூழ்நிலையை மறந்த மோனிகா தன் மீது சுரேந்தர் காட்டும் அக்கறையை காதல் என்று நம்பி அவனது வலையில் விழுகிறாள். இதை அறிந்த கௌரி நந்தா, தனது தங்கையை அழைத்து கண்டிக்கிறாள். அக்காவின் கண்டிப்பில் மனம் திருந்திய மோனிகாவை தனது வழிக்கு கொண்டுவர சுரேந்தர் முயற்சி செய்கிறான். தனது அம்மாவிடம் அவளைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் கூறிவிட்டதாகவும், அம்மாவிடம் வந்து உறுதி...
‘என்னோடு விளையாடு’ என் வாழ்வில் திருப்புமுனை படமாக இருக்கும்: பரத்

‘என்னோடு விளையாடு’ என் வாழ்வில் திருப்புமுனை படமாக இருக்கும்: பரத்

செய்திகள்
பரத், கதிர் இணைந்து நடித்துள்ள படம் ‘என்னோடு விளையாடு’. டொரண்டோ ரீல்ஸ், ரேயான் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அருண் கிருஷ்ணசாமி இயக்கியுள்ளார். இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் பேசிய பரத்... “ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு நான் நடிக்க ஒப்புக்கொண்டபடம் இது. கதையை இயக்குநர் என்னிடம் விவரித்தபோது இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. என்னுடைய பதினான்கு ஆண்டு கால திரையுலகில் குதிரை பந்தயம், குதிரை பந்தய சூதாட்டம் என்ற பின்னணியை வைத்து ஒரு முழுத்திரைக்கதையை நான் தமிழ் சினிமாவில் பார்த்ததில்லை. அந்த வகையில் இந்த திரில்லர் படம் புதிதாக இருக்கும். இப்படம் என்னுடைய திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். ஒரு படத்தின் வெற்றியை ரசிகர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த ரொமாண்டிக் திரில்லர் படம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும்....