வியாழக்கிழமை, ஜூலை 9
Shadow

Author: Kodanki

உரியடி2 படம் எண்டர்டெயின் பண்ணாது டிஸ்டர்ப் பண்ணும் யோசிக்க வைக்கும் – சூர்யா சொன்ன ரகசியம்

உரியடி2 படம் எண்டர்டெயின் பண்ணாது டிஸ்டர்ப் பண்ணும் யோசிக்க வைக்கும் – சூர்யா சொன்ன ரகசியம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  2 டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில், சாவனீர் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் ‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சூர்யா, உறியடி 2 படத்தின் இயக்குனர் விஜய்குமார், படத்தின் ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார், படத்தொகுப்பாளர் பினு, படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, நடிகர்கள் ராஜ் பிரகாஷ், சங்கர்தாஸ், பாடலாசிரியர் நாகராஜி, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், விநியோகஸ்தர் சக்தி வேலன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகை தந்தவர்களை இணை தயாரிப்பாளர் ராஜசேகர்  கற்பூரசுந்தரபாண்டியன் வரவேற்றார். அவர் பேசுகையில்,“ உறியடி 2 எங்களுக்கு ஸ்பெஷலான படம். உறியடி படத்தின் இயக்குனர்...
உச்சகட்டம் விமர்சனம்

உச்சகட்டம் விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
அனூப் சிங் மற்றும் தன்ஷிகா இருவரும் காதலர்கள். நியூ இயர் கொண்டாட்டத்திற்காக தனியார் விடுதிக்கு செல்கின்றனர். அங்கு, ஒரு நபரை கும்பல் ஒன்று கொலை செய்துவிட, இந்த கொலையை தன்ஷிகா தனது மொபைலில் வீடியோ எடுத்து விடுகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் தன்ஷிகாவை கொலை செய்ய துரத்துகிறார். தன்ஷிகாவை தேடி அனூப் சிங் அலைகிறார். இறுதியாக அந்த ரெளடி கும்பலிடம் இருந்து தன்ஷிகாவை அனூப் சிங் காப்பாற்றினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை. சிங்கம் 3 படத்தில் வில்லனாக நடித்திருந்த அனூப் சிங், இப்படத்தில் ஹீரோவாக களம் இறங்கியிருக்கிறார். நல்ல உடற்கட்டோடு, ஆக்‌ஷன் காட்சிகளில் அதகளம் செய்கிறார் அனூப். சாய் தன்ஷிகா, ரெளடி கும்பலிடம் சிக்கி தவிக்கும் காட்சிகளிலும், கார் டிக்கியில் சிக்கிக் கொண்டு பரிதவிக்கும் காட்சிகளிலும் மிரட்டியிருக்கிறார். இரண்டாவது நாயகி தன்யா ஹோப் தனது அழகில் அனைவரையும் கட்டிப...
ஆதி சாய்குமார்-வேதிகா ஜோடியின் புதுப்படம்!

ஆதி சாய்குமார்-வேதிகா ஜோடியின் புதுப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தில் இணையும் ஆதி சாய்குமார் மற்றும் வேதிகா! நடிகர் சாய்குமாரின் மகன் ஆதி சாய்குமார் தன் முயற்சியாலும், சிறந்த நடிப்பாலும் படிப்படியாக முன்னேறி தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தெலுங்கு சினிமாவில் தனது திறமையை நிரூபித்த ஆதி, தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் கால் பதிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்படும் இந்த படத்தை MG ஆரா சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் காவ்யா மகேஷ், திருக்குமரன் எண்டர்டெயின்மண்ட் சி.வி.குமார் மற்றும் நியூ ஏஜ் சினிமா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இரட்டை இயக்குனர்களான கார்த்திக் - விக்னேஷ் சகோதரர்கள் படத்தை இயக்குகிறார்கள். எம்.ஜி.ஆரா சினிமாஸ் தயாரிப்பாளர் காவ்யா மகேஷ் கூறும்போது, "ஆதி சாய்குமார் வளர்ச்சி படிப்படியாக அதிகரித்து வருகிறது...
எம்பிரான் விமர்சனம்

எம்பிரான் விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
நாயகன் ரெஜித் மேனன்(பிரியன்) ஒரு டாக்டர். தனது தாத்தா சந்திரமெளலியோடு வளர்ந்து வருகிறார் நாயகி ராதிகா ப்ரீத்தி(ஜெயா). ரெஜித் மேனனை ஒரு தலையாக காதலிக்கிறார் நாயகி ராதிகா. அவரை சந்தித்து காதலை வெளிப்படுத்தும் நேரத்தில் விபத்தில் சிக்கிக் கொள்கிறார் நாயகியும் அவரது தாத்தா சந்திரமெளலியும். சந்திரமெளலி சம்பவ இடத்தில் இறந்துவிட, கோமா நிலைக்கு சென்று விடுகிறார் நாயகி. பின், ராதிகாவிற்கு கோமா நிலை சரியானது..?? ராதிகாவின் காதல் ரெஜித் மேனனுக்கு தெரிந்ததா..?? காதல் கைகூடியதா..??? என்பதுதான் படத்தின் மீதிக் கதை. நாயகன் ரெஜித் மேனன், கதைக்கேற்ற சரியான பொருத்தம்தான். காட்சிக்கு காட்சி அழகு சேர்க்கிறார். சரியான கதை அமைந்தால் கோலிவுட்டில் நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார். படத்திற்கு மிகப்பெரிய பலமே நாயகி ராதிகா ப்ரீத்தி தான். அழகாக இருக்கிறார். அவருடைய கண்கள் கவிதைகள் பேசுகின்றன. கோவிவுட்டில் அடுத்த கட...
அக்னி தேவி விமர்சனம்

அக்னி தேவி விமர்சனம்

HOME SLIDER, விமர்சனம்
விறைப்பான போலீஸ் உயரதிகாரியாக வருகிறார் பாபி சிம்ஹா. பேருந்து நிலையத்தில் இளம் பெண் ஒருவர் இளைஞன் ஒருவனால் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு பாபி சிம்ஹாக்கு வருகிறது. வழக்கு அடுத்தடுத்த கட்டத்திற்கு நகரும் போது பல திடுக்கிடும் சம்பவங்கள் அரங்கேறுகிறது. இதற்கு பின்புலமாக இருப்பது தமிழகத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராக வரும் மதுபாலா. மதுபாலாவிற்கும் பாபி சிம்ஹாவிற்கும் நடக்கும் யுத்தமே இந்த ‘அக்னி தேவி’. வழக்கமான பாணியில் பாபி சிம்ஹாவின் நடிப்பு, இப்படத்திலும் கொடுத்திருப்பது சூப்பர். ஒரு போலீஸ் அதிகாரிக்கு உரித்தான மிடுக்கான நடிப்பில் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார் பாபி. என்ன… குரல் தான் அவரோடது இல்லன்னு மட்டும் தெளிவா தெரியுது. ரோஜா படத்தில் பார்த்த நாயகியா இவர் என ஆச்சர்யபட வைக்கிறார் மதுபாலா. வில்லத்தனத்திற்கு பல நாட்கள் பயிற்சி எடுத்திருப்பார் ப...
வித்தியாசமான கதை களத்தில் வெள்ளைப் பூக்கள்..!

வித்தியாசமான கதை களத்தில் வெள்ளைப் பூக்கள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  விவேக் இளங்கோவன்: இயக்குனர் உத்யோகரீதியாக மென்பொருள் பொறியாளராக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தாலும், விவேக் நாடகத்துறையில் அனுபவமிக்கவராக, ஒரு இயக்குனராக, ஒரு எழுத்தாளராக தன்னை பதிவு செய்வதில் பேரார்வம் கொண்டவர்.  இண்டஸ் குழுமத்தின் பல்வேறு நாடக மற்றும் திரைப்பட தயாரிப்புகளில் இயக்குனர் குழுவில் பங்குபெற்றிருக்கிறார். அவரது குறும்படங்களான ‘ஓடம்’ மற்றும் ‘நவம்’ சர்வதேவ அளவில் பல விருதுகளை வென்றிருப்பது அவரது ஆளுமைக்கு சான்றாக அமைகிறது. ஜெரால்ட் பீட்டர்: ஒளிப்பதிவாளர் உத்யோகரீதியாக மென்பொருள் பொறியாளராக / வணிக ஆய்வாளராக பணிபுரிந்தாலும், ஜெரால்ட் நாடகம் மற்றும் நாட்டியத்தில் அனுபவமும், ஈடுபாடுமிக்கவராக, ஒரு ஒளிப்பதிவாளராக, தன்னை அடையாளப்படுத்தி கொள்வதில் பேரார்வம் கொண்டவர். ‘ஓடம்’ மற்றும் ‘நவம்’ உள்ளிட்ட குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு குழுவை தலைமையேற்று நடத்தி, அவற்றை...
மீண்டும் கோலிவுட் திரும்பும் “தல”,” தளபதி” ஜோடி!

மீண்டும் கோலிவுட் திரும்பும் “தல”,” தளபதி” ஜோடி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  மீண்டும் களம் இறங்க காத்திருக்கும் 'தல', 'தளபதி'யின் நாயகி 'தேவா'வில் விஜய்யுடனும், 'வான்மதி'யில் அஜீத்துடன் ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்வாதி. இரண்டு படங்களும் வெற்றியடைந்ததை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால், அதையெல்லாம் நிராகரித்துவிட்டு படிப்புதான் முக்கியம் என்று ஹைதராபாத்திற்கு பறந்தார் ஸ்வாதி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமீரின் இயக்கத்தில் வெளியான 'யோகி' படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது, தெலுங்கில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஆர்வமாக உள்ளார். சினிமாவில் மட்டுமல்லாது தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவும் ஆர்வமாக உள்ளார். நான் நடித்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ் ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது திரையில் தோன்றுவீர...
நடிகர் சிவக்குமார் வெளியிட்ட பிலிம் நியூஸ் ஆனந்தனின் ‘ஞாபகம் வருதே ‘ நூல்

நடிகர் சிவக்குமார் வெளியிட்ட பிலிம் நியூஸ் ஆனந்தனின் ‘ஞாபகம் வருதே ‘ நூல்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  பிலிம் நியூஸ் ஆனந்தனின் 'ஞாபகம் வருதே ' நூல் வெளியீட்டு நிகழ்வு! தென் இந்தியாவின் முதல் மக்கள் தொடர்பாளரும் தமிழ்த் திரையுலகத் தகவல் களஞ்சியமுமான பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் நினைவு நாளான இன்று  அவரைப் பற்றிய பல்வேறு பிரமுகர்களின் அனுபவ நினைவுகளைக் கொண்டு அருள்செல்வன் தொகுத்துள்ள  'ஞாபகம் வருதே'  நினைவலைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு  இன்று நடிகர் சிவகுமார் அவர்களின் இல்லத்தில் வித்தியாசமான முறையில் நடைபெற்றது . நூலை நடிகர் சிவகுமார் வெளியிட இயக்குநர் ஞான ராஜசேகரன் ஐ.ஏ.எஸ். பெற்றுக்கொண்டார்.  இந்நிகழ்வில் மூத்த பத்திரிகையாளர்கள் சலன் , மக்கள் குரல் ராம்ஜி , திரைப் பட இயக்குநர் ஓவியர் ஏ.பி .ஸ்ரீதர் , பிலிம் நியூஸ் ஆனந்தனின் மகன் மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு , பி.ஆர்.ஓ. யூனியன் தலைவர் விஜயமுரளி ஆகியோர்  கலந்து கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பிலிம் நியூ...
மீண்டும் தரணிதரன் இயக்கத்தில் சிபிராஜ்..!

மீண்டும் தரணிதரன் இயக்கத்தில் சிபிராஜ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மீண்டும் இணையும் சிபி சத்யராஜ் மற்றும் தரணிதரன்! கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் எந்த ஒரு நடிகருக்கும் அது ஒரு 'பாதுகாப்பான பந்தயம்' என்பதை தாண்டி, 'வலுவான பந்தயம்' என்று சொல்லலாம். அந்த வகையில், நடிகர் சிபி சத்யராஜ் ஒவ்வொரு படத்திலும் வெற்றியை பெற்று வருகிறார். அவரது முந்தைய படங்கள் இதை நிரூபித்திருக்கின்றன. அடுத்து வெளிவர இருக்கும் 'மாயோன்' உட்பட அனைத்து படங்களும் எதிர்பார்ப்புகளை அதிகமாக்கி உள்ளன. ஆர்வத்தை தூண்டும் கதையில் உருவாகியுள்ள அவரது ரங்கா படம் அடுத்து வெளிவர இருக்கும் நிலையில், சிபிராஜ் அவருக்கு மிகவும் பிடித்த இயக்குனரான தரணிதரன் உடன் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார். இந்த படத்தில் சிபிராஜ் காட்டிலாகா அதிகாரியாக நடிக்கிறார். தற்காலிகமாக 'தயாரிப்பு எண் 4' என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை MG ஆரா சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் காவ்யா மகேஷ் தயாரி...
மதுவிலக்கு போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் குடிமகன்

மதுவிலக்கு போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் குடிமகன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மதுவிலக்கு போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் குடிமகன் ஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் வழங்கும் 'குடிமகன்' “குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது” என்கிற கருத்தினை மையமாகக் கொண்டு இயக்குநர் சத்தீஷ்வரன், தயாரித்து இயக்கி இருக்கும்திரைப்படம் “குடிமகன்”. விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட ஒரு அழகான கிராமத்தில் கந்தன், செல்லக்கண்ணு தம்பதியினர் ஆகாஷ் என்கிற 8 வயது மகனுடன் வசித்து வருகிறார்கள். மகனின் மீது அதிக அன்பும், அக்கறையும்கொண்டு வளர்த்து வருகிறார்கள். மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கும் இவர்களுடைய வாழ்விலும், அந்த கிராமத்து மக்களின் வாழ்விலும் ஒரு மதுபானக் கடையினைக் கொண்டு வந்து பேரதிர்ச்சியைத் தருகிறார், அந்தஊர் கவுன்சிலர். அதிர்ச்சியடைந்த அந்த ஊர் மக்கள், ஊர்த் தலைவரான அய்யா தலைமை...