புதன்கிழமை, ஜூலை 8
Shadow

Author: Kodanki

ஒசாமா பின்லேடன் மகன் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.7 கோடி பரிசு; அமெரிக்கா அறிவிப்பு

ஒசாமா பின்லேடன் மகன் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.7 கோடி பரிசு; அமெரிக்கா அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி பின்லேடன். அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவனாக செயல்பட்டு வந்த நிலையில், அமெரிக்க சிறப்பு படையால் பாகிஸ்தானில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார். இவரது மகன் ஹம்சா பின்லேடன். பின்லேடன் மறைவுக்கு பின் அந்த இயக்கத்தின் தலைவராகும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார் ஹம்சா பின்லேடன். தொடர்ந்து கடந்த 4 வருடங்களாக ஆடியோ மற்றும் வீடியோ வழியே இயக்க உறுப்பினர்களிடம் தகவல்களை அனுப்பி, பின்லேடனை கொன்றதற்காக அமெரிக்கா மீது தாக்குதல்களை நடத்த வலியுறுத்தி வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அவரை பற்றிய தகவல் அளிப்போருக்கு ரூ.7 கோடி அளவிற்கு பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஹம்சா பின்லேடன், ஆப்கனிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான எல்லை பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்றும் ஈரான் நாட்டில் தஞ்சமடையலாம் எ...
+2 தேர்வு இன்று தொடக்கம்..!

+2 தேர்வு இன்று தொடக்கம்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  2018-19-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 19-ந் தேதி வரை நடக்கிறது. பிளஸ்-2 பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7 ஆயிரத்து 82 பள்ளிகளிலிருந்து 8 லட்சத்து 61 ஆயிரத்து 107 மாணவர்கள் மற்றும் பழைய நடைமுறையில் (ஒரு பாடத்துக்கு 200 மதிப்பெண்கள் என மொத்தம் 1,200 மதிப்பெண்கள்) 25 ஆயிரத்து 741 தனித்தேர்வர்களும், புதிய நடைமுறையில் (ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண்கள் என மொத்தம் 600 மதிப்பெண்கள்) 1,144 தனித்தேர்வர்கள் என மொத்தத்தில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் தேர்வு எழுத உள்ளனர். பள்ளி மாணவிகள் 4 லட்சத்து 60 ஆயிரத்து 6 பேர். மாணவர்கள் 4 லட்சத்து ஆயிரத்து 101 ஆகும். மாணவர்களை விட மாணவிகள் எண்ணிக்கை 58 ஆயிரத்து 905 அதிகம் ஆகும். தனித்தேர்வர்களில் 8 ஆயிரத்து 855 பெண்களும், 18 ஆயிரத்து 28 ஆண்களும், 2 திருநங்கைகளும் தேர்வு எழுத...
இஸ்தான்புல் யூனிவர்சிட்டியில் திரையிடப்பட்ட இயக்குனர் கௌரவ் நாரயணனின் “தூங்கா நகரம்”

இஸ்தான்புல் யூனிவர்சிட்டியில் திரையிடப்பட்ட இயக்குனர் கௌரவ் நாரயணனின் “தூங்கா நகரம்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
இஸ்தான்புல் யூனிவர்சிட்டியில் சர்வதேச கலாச்சார பரிமாற்ற நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலை மற்றும் கலாச்சார துறை ஏற்பாடு செய்திருந்த "இந்திய சினிமாவில் கலாச்சாரமும் பாரம்பரியமும்" நிகழ்வில் இயக்குனர் கௌரவ் நாரயணன் இயக்கிய "தூங்கா நகரம்" திரைப்படம் திரையிடப்பட்டது. படம் முடிந்ததும் குறும்பட இயக்குனர்கள் மற்றும் இஸ்தான்புல் யூனிவர்சிட்டியில் உள்ள மாணவர்களுடன் இயக்குனர் கௌரவ் நாரயணன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்....
லைக்கா புரொடக்ஷன்ஸ்  நிறுவனம் தயாரிக்கும் ”பன்னிக்குட்டி”

லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ”பன்னிக்குட்டி”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  லைக்கா புரொடக்ஷன்ஸ்  நிறுவனம் தயாரிக்கும் ''பன்னிக்குட்டி '' எனும் புதிய படத்தினை அனுசரண் முருகையாஇயக்குகிறார். பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனுசரண் முருகையா இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படம் " பன்னிக்குட்டி'' . இந்த படத்தினை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் திரு.சுபாஷ்கரன் அவர்கள் தயாரிக்கிறார். இப்படத்தில் கருணாகரன் , யோகிபாபு , சிங்கம் புலி , திண்டுக்கல் லியோனி , T.P கஜேந்திரன் , லக்ஷ்மி ப்ரியா , ராமர் , 'பழைய ஜோக்' தங்கதுரை ஆகியோர் முக்கிய  கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆண்டவன் கட்டளை , 49-0 , கிருமி ஆகிய படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் 'K' என்கிற கிருஷ்ணகுமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கிருமி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இயக்குனர் அனுசரனுடன் இணைந்துள்ள...
பிடிபட்ட வீரரை விடுவிப்பதாக அறிவித்த பாக்.அதிபர் இம்ரான்கான்..!

பிடிபட்ட வீரரை விடுவிப்பதாக அறிவித்த பாக்.அதிபர் இம்ரான்கான்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானபடை பாக் ஆக்ரமிப்பு பகுதியில் குண்டு வீசியது. இந்த தாக்குதலில் பல நூறு தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நமது போர் விமானத்தை சுட்டுவீழ்த்தினார்கள். இதில் சென்னை தாமபரத்தை சேர்ந்த அபிநந்தன் பாக் வீரர்களிடம் சிக்கினார். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. எல்லையில் போர் பதற்றம் உலக அரங்கில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. இந்த நிலையில் பாக்.அதிபர் இம்ரான்கான் அதிரடி முடிவை அறிவித்து உலக அரங்கில் தன் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். பாராளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமைதியை நிலைநாட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை வெளியிட முடிவு செய்திருப்பதாக அறிவித்திருக்கிறார். இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் நேற்று கைது செய்யப்பட்டார். அமைதி பேச்சுவார்த்...
பேராசிரியை நிர்மலாதேவியை  ஜாமீனில் வெளியே விட அச்சப்படுகிறதா அரசு? உயர்நீதிமன்ற கிளை கேள்வி?!

பேராசிரியை நிர்மலாதேவியை ஜாமீனில் வெளியே விட அச்சப்படுகிறதா அரசு? உயர்நீதிமன்ற கிளை கேள்வி?!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருக்கும் தேவாங்கர் கலைக்கல்லூரியில் பணியாற்றிய உதவி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த ஆடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் கவர்னர் தாத்தா என்ற வார்த்தையும் இடம்பெற்று இந்த விவகாரம் மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நிர்மலா தேவி அடுத்தடுத்து தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் அனைத்தும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள நிர்மலா தேவி வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் அமர்வு, 'பெரும் கொலைக் குற்றவாளிகளுக்குக் கூட ஜாமீன் வழங்கப்படும் நிலையில் நிர்மல...
இந்திய-பாக் போர் சூழலில் கவனம் ஈர்க்கும் ‘மிட்டி’..!

இந்திய-பாக் போர் சூழலில் கவனம் ஈர்க்கும் ‘மிட்டி’..!

CINI NEWS, செய்திகள்
சென்னை இளைஞர்கள் உருவாக்கத்தில்  வைரலாகும் இந்தியா பாகிஸ்தான் எல்லையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட "மிட்டி"இந்தி குறும்படம். இந்தியா பாகிஸ்தான் எல்லையை கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட mitti (மிட்டி) இந்தி குறும்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது . சமீபத்தில் நடைபெற்ற காஷ்மீர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு இணையத்தில் அதிகமாக பார்க்கப்பட்ட பகிரப்பட்ட இந்த குறும்படத்தை இயக்கியவர்கள் சென்னையை சேர்ந்த இளைஞர்கள் இந்தியில் mitti என்றால் தமிழில் மண் என்று அர்த்தம். இந்திய மண்ணும் பாகிஸ்தான் மண்ணும் போரினால் பாதிக்கப்பட்டு இருக்கும் சூழலை மிக அழகாக எதார்த்தமாக ஒரு குறும்படத்தில் படம்பிடிக்கப்பட்டு இன்று இணையத்தில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த இந்தி mitti குறும் படத்தை இயக்கியவர்கள் முதல் இந்த படத்தில் வேலை செய்த அத்தனை பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இந்த படத்தை இயக்கிய விக்னேஷ...
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத அருண்விஜய்யின் ‘தடம்’!.. படம் பற்றி ஒரு முன்னோட்டம்!

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத அருண்விஜய்யின் ‘தடம்’!.. படம் பற்றி ஒரு முன்னோட்டம்!

CINI NEWS, REVIEWS, செய்திகள்
    மகிழ்திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அருண்விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘தடம்’.   காட்சிக்கு காட்சி பதட்டம், செண்டிமெண்ட், காதல், ஆக்‌ஷன், பரபரப்பு என எதிலும் குறைவில்லாத ஒரு நல்ல திரைக்கதை ஓட்டத்தை சிறப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி. கதைக்கு ஏற்ற கதாநாயகனாக இப்படத்தில் வலம் வரும் அருண்விஜய், மிடுக்கான, கட்டுமஸ்தான உடல்கட்டோடு அனைவரையும் மிரள வைக்கிறார் தனது நடிப்பில். மற்ற கதாபாத்திரங்களும் கதைக்கேற்ற பொருத்தம் தான். பின்னனி இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் படத்திற்கு பலம் தான். தரமான தடத்தை பதிவு செய்துள்ளது அருண் விஜய்யின் இந்த ’தடம்’ விரிவான விமர்சனம் விரைவில்.......
இறுதிகட்டத்தை எட்டிய யோகிபாபுவின் ‘ஜாம்பி’!

இறுதிகட்டத்தை எட்டிய யோகிபாபுவின் ‘ஜாம்பி’!

CINI NEWS, செய்திகள்
எஸ் 3 பிக்ச்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இனைந்து தயாரிக்கும் திரைப்படம் ஜாம்பி. இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தற்போது இரண்டாம் கட்ட பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இது தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் அதோடு படத்தின் முழு படப்பிடிப்பு நிறைவுபெறும் என படக்குழு தெரிவித்துள்ளது. தற்போது யோகிபாபு , யாஷிகா ஆனந்த் , கோபி, சுதாகர், T.M.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், சித்ரா அக்கா உள்ளிட்ட இன்டர்நெட் பிரபலங்கள் பலர் பங்கேற்கும் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் ரிசார்ட்டில் நடைபெறுவது போல தான் படத்தில் அதிமாக காட்சிகள் இடம்பெறுகிறது. ஆதலால் படப்பிடிப்பு தொடர்ந்து இரவு நேரத்தில் பிரபல வி.ஜி.பி போன்ற ரிசார்ட்களில் வைத்து தொடர்ந்து வேகமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வி.ஜி.பி ரிசார்ட்டில் 200 இளம் ...
சீனாவில் படமாக்கப்படும் பிரபுதேவாவின் குங்பூ சண்டைக்காட்சி!

சீனாவில் படமாக்கப்படும் பிரபுதேவாவின் குங்பூ சண்டைக்காட்சி!

CINI NEWS, செய்திகள்
  இயக்குநர் அர்ஜுன் இயக்கத்தில் நடிகர் பிரபு தேவா நீண்ட நாட்களாக நடித்து வரும் திரைப்படம் 'எங் மங் சங்’. இந்த படத்தில் பிரபு தேவாவிற்கு ஜோடியாக நடிகை லக்ஷ்மி மேனன் நடித்து கொண்டு இருக்கிறார். மேலும் இந்த படத்தில் ????தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்ராலட்சுமனன், கும்கி அஸ்வின் காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா உள்ளிட்ட பலருடன் 'பாகுபலி' பட வில்லன் பிரபாகர் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது சீனாவில் மிகுந்த பொருட்செலவில் அரங்கு அமைத்து சண்டை காட்சிகளின் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். இந்த படத்தில் குங்பூ மற்றும் சைனீஸ் ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெறுவதால் கூடுதல் சிரமம் எடுத்து சண்டைக் காட்சிகளை சில்வா அமைத்துள்ளார்....