ஞாயிற்றுக்கிழமை, மே 12
Shadow

பேராசிரியை நிர்மலாதேவியை ஜாமீனில் வெளியே விட அச்சப்படுகிறதா அரசு? உயர்நீதிமன்ற கிளை கேள்வி?!

 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருக்கும் தேவாங்கர் கலைக்கல்லூரியில் பணியாற்றிய உதவி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த ஆடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் கவர்னர் தாத்தா என்ற வார்த்தையும் இடம்பெற்று இந்த விவகாரம் மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நிர்மலா தேவி அடுத்தடுத்து தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் அனைத்தும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள நிர்மலா தேவி வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

அதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் அமர்வு, ‘பெரும் கொலைக் குற்றவாளிகளுக்குக் கூட ஜாமீன் வழங்கப்படும் நிலையில் நிர்மலா தேவிக்கு ஏன் ஜாமீன் கிடைக்கவில்லை. ஜாமீன் வழங்கப்படாமல் சிறையில் வைத்திருப்பதன் அவசியம் என்ன? நிர்மலா தேவியை ஜாமீனில் வெளியே விட அச்சமா?’ என்று நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், விசாரணை ஒருசார்பாக அமையக் கூடாது என தெரிவித்த நீதிபதிகள், விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தனர். இதுதொடர்பாக தமிழக அரசு, சிபிஐ, சிபிசிஐடி, நிர்மலா தேவி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் மார்ச் 18ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

343 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன