செவ்வாய்க்கிழமை, ஜூலை 7
Shadow

Author: Kodanki

ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ்

ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `பேட்ட'. இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, சசிகுமார், சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் `விஸ்வாசம்' படம் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், ரஜினியும் பொங்கல் ரேசில் இணைந்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் கல்லூரி விடுதி காப்பாளர் தாதா வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மதுரையை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் அதிர...
ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சிம்பு

ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சிம்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். தனக்கு நஷ்ட ஈடு கொடுக்காமல் புதிய படங்களில் சிம்பு நடிக்கக்கூடாது என்று மைக்கேல் ராயப்பன் வற்புறுத்திய நிலையில், மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு நடித்து அந்த படமும் ரிலீசாகிவிட்டது. தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இந்த நிலையில் மைக்கேல் ராயப்பன் மீண்டும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “சிம்புவை வைத்து படம் எடுக்கக்கூடாது என்ற தயாரிப்பாளர் சங்க முடிவை சுந்தர்.சி மீறி இருப்பது கண்டிக்கத்தக்கது. பொங்கலுக்கு படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிடு...
பட விளம்பரத்தால் அதிமுக அரசை வம்புக்கு இழுக்கும் ஆர்.ஜே.பாலாஜி..!

பட விளம்பரத்தால் அதிமுக அரசை வம்புக்கு இழுக்கும் ஆர்.ஜே.பாலாஜி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஆர்ஜே பாலாஜி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘எல்.கே.ஜி’. இயக்குனர் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். பிரியா ஆனந்த் நாயகியாக நடித்துள்ளார். சமீபகால அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கியிருக்கிறார்கள். இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட இருப்பதாக அறிவித்து புதிய போஸ்டர் ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஆர்ஜே பாலாஜி. அந்த போஸ்டரில் அவரைச் சுற்றி இலவச ஆடு, மாடு, மிக்ஸி, கிரைண்டர், பேன், டிவி மற்றும் இலவச அரிசி ஆகியவை இருக்கிறது. அவை அனைத்திலுமே ஆர்.ஜே.பாலாஜியின் ஸ்டிக்கர் இடம்பெற்றிருக்கிறது. மேலும் அந்த போஸ்டரில் இலவச வேட்டி சேலையுடன் பொங்கலுக்கு வர்றோம் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான சர்கார் படத்தில் அரசு கொடுத்த இலவசங்களை விமர்சித்திருப்பதாக கூறி தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருந...
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களுக்கு தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் மறுப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களுக்கு தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் மறுப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த செப்டம்பர் 28-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை சில மகளிர் அமைப்புகள் வரவேற்றன. ஆனால் அய்யப்ப பக்தர்களும், இந்து அமைப்பினரும் கடுமையாக எதிர்த்தனர். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறு சீராய்வு செய்யக் கோரி ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஜனவரி 22-ந்தேதி விசாரிக்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று அறிவித்தது. அதே சமயம் பெண்கள் வழிபாடு நடத்த அனுமதி அளித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. நவம்பர் 16-ந்தேதி மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளதால் இந்த வழக்குகளை அவசரமாக விசாரிக்க கோரி வக்கீல் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவ...
கஜா புயல் இன்று கரையை  கடக்கும்போது 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு

கஜா புயல் இன்று கரையை கடக்கும்போது 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கஜா புயல் தற்போது சென்னையில் இருந்து 490 கிமீ தொலைவிலும் நாகையில் இருந்து 580 கிமீ தொலைவிலும்  நிலைகொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. காற்றின் அமைப்பைப் பொருத்து புயலின் வேகம் இருக்கும்.இன்று  மாலை கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது அப்போது, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசும். மணிக்கு 80 கிமீ முதல் 90 கிமீ வேகத்தில் காற்று வீசுவதற்கு வாய்ப்பு உள்ளது. புயல் கரையை கடக்கும்போது இந்த மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொருத்தவரை நாளை முதல் 3 நாட்களுக்கு மிதமான மழைபெய்யும்....
கமல் மகளின் அந்தரங்க படங்களை வெளியிட்டது யார் என தேடுகிறது மும்பை போலீஸ்!

கமல் மகளின் அந்தரங்க படங்களை வெளியிட்டது யார் என தேடுகிறது மும்பை போலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌‌ஷரா ஹாசன். இந்தியில் அமிதாப் பச்சனும், தனுஷும் இணைந்து நடித்த ‌ஷமிதாப் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் அஜித் குமார் நடித்த விவேகம் படத்திலும் நடித்திருந்தார். இதனையடுத்து தற்போது விக்ரமுடன் ஒரு படத்தில் நடித்துவருகிறார். இந்த நிலையில், கடந்த வாரம் அக்‌‌ஷராவின் அந்தரங்க படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதுபற்றி அக்‌‌ஷரா வெளியிட்ட அறிக்கையில் ’இந்தப் படங்கள் ஒரு படத்தின் டெஸ்ட் ஷூட்டின்போது எடுக்கப்பட்டவை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவை இணையத்தில் கசிந்துள்ளன. இவ்விவகாரத்தில் புகார் அளிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன்’ என்று கூறியிருந்தார். இதனையடுத்து இது தொடர்பாக மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் எப்.ஐ.ஆர...
ட்ரீம் வாரியர் தயாரிப்பில் ஜோதிகா..!

ட்ரீம் வாரியர் தயாரிப்பில் ஜோதிகா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் படத்தின் பூஜை இன்று போடப்பட்டது 2-வது சுற்றில் தான் நடிக்கும் படங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறார் ஜோதிகா. திருமணத்திற்கு பிறகு அவர் நடித்த '36 வயதினிலே' படம் வெற்றி பெற்றத்தைத் தொடர்ந்து 'மகளிர் மட்டும்' படமும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. தனக்கு முக்கியத்துவம் தரும் கதை மட்டும் தான் வேண்டும் என்றில்லாமல், நிஜ வாழ்க்கையோடு ஒன்றி போகும் கதாபாத்திரமாகவும் இருக்க வேண்டும் கவனமாக இருக்கிறார். இதன் மூலம் முன்பை விட அதிக ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறார். அதற்கு சான்றாக இந்த வாரம் வெளியாகிறது அவர் நடித்த 'காற்றின் மொழி'. இப்படம் வெளியாவதற்கு முன்பே ஜோதிகாவைப் பற்றியும், படத்தைப் பற்றியும் மிகுந்த எதிர்பார்ப்பை (குறிப்பாக பெண்களிடம்) ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், ஜோதிகாவை ...
மெளனகுரு சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யாவின் “மகாமுனி” படத்தை தயாரிக்கிறார் ஞானவேல் ராஜா!

மெளனகுரு சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யாவின் “மகாமுனி” படத்தை தயாரிக்கிறார் ஞானவேல் ராஜா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K E  ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மகாமுனி’. இதில் நடிகர் ஆர்யா, நடிகை மஹிமா நம்பியார், இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள் தாஸ், ஜி எம் சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாந்தகுமார். இவர் ஏற்கனவே மௌனகுரு என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர். இந்த படத்தின் ஒளிப்பதிவை அருண் பத்மநாபன் கவனிக்க, எஸ் எஸ் தமன் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார். தேசிய விருதுப்பெற்ற VJ சாபு ஜோசப் படத்தை தொகுக்க, ரெம்போன் பால்ராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சண்டை பயிற்சியை ஆக்சன் பிரகாஷ் மேற்கொள்கிறார். படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,“க்ரைம் திரில்லர் ஜேனரில் ‘மகாமுனி ’ தயாராகிறது. படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பரபரப்பா...
தமிழகத்தை நெருங்குகிறது ‘கஜா’ புயல் இன்று இரவு முதல் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தை நெருங்குகிறது ‘கஜா’ புயல் இன்று இரவு முதல் மழைக்கு வாய்ப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 10-ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கடந்த 11-ந் தேதி புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டு இருந்தது. இது முதலில் கடலூர்-ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே 15-ந் தேதி (நாளை) முற்பகலில் கரையை கடக்கும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், தற்போது கடலூர்-பாம்பன் இடையே அதே 15-ந் தேதி பிற்பகலில் கரையை கடக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.   இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக் குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு வட கிழக்கே சுமார் 720 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைக்கொண்டுள்ளது. இது தென்மேற்கு திசை நோக்கி நகர்ந்து 15-ந் தேதி (நாளை) பிற்பகலில் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் என...

2.O படத்தின் சென்சார் ரிசல்ட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் சுமார் ரூ.550 கோடியில் இந்த படம் 3டியில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன்பின் வெளியான டிரைலர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்று உலகளவில் டிரெண்டானது. தற்போது இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதை படக்குழுவினர் வெளியிட்டு நவம்பர் 29ம் தேதி ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளனர்....