திங்கட்கிழமை, ஜூலை 6
Shadow

Author: Kodanki

வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது ஆண்களின் தவறு மட்டும் அல்ல – ஆண்ட்ரியா

வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது ஆண்களின் தவறு மட்டும் அல்ல – ஆண்ட்ரியா

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
வடசென்னை படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எப்போதுமே துணிச்சலான கருத்துகளை பேசும் ஆண்ட்ரியா சமீபத்திய பரபரப்பான மீடூ இயக்கம் பற்றியும் துணிச்சலாக கருத்து தெரிவித்துள்ளார். ‘மீ டூ’ இயக்கத்தை வரவேற்கிறேன். தற்போது மாற்றத்திற்கான நேரம். பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் கேட்கத் துவங்கியுள்ளது. இந்த மீ டூ இயக்கம் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்க வாய்ப்பு இல்லை. பட வாய்ப்புக்காக என்னை யாரும் படுக்கைக்கு அழைத்தது இல்லை. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது ஆண்களின் தவறு மட்டும் அல்ல. வேலைக்காக படுக்கைக்கு செல்ல பெண்கள் விருப்பமாக இல்லாவிட்டால் ஆண்கள் அழைக்க மாட்டார்கள். எனக்கு என் மீது நம்பிக்கை உள்ளது, நான் யாருடனும் படுக்கைக்கு செல்ல மாட்டேன் என்று பெண்கள் தைரியமாக சொன்னால் தான் இந்த பழக்கம் முடிவுக்கு வரும். நான் பெரிய, பெரிய இயக்குனர்களுடன் சேர்ந்...
அடங்கமறு படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை கைப்பற்றிய கிளாப் போர்ட் ப்ரொடக்‌ஷன்ஸ்!

அடங்கமறு படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை கைப்பற்றிய கிளாப் போர்ட் ப்ரொடக்‌ஷன்ஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜெயம் ரவி - ராஷி கண்ணா நடித்துள்ள அடங்க மறு, பெரிய நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் நடிக்க புகழ்பெற்ற படமாக உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் ஆல்பம் மற்றும் ப்ரோமோ காட்சிகள் பெரும் வெற்றியை பெற்று அனைவரையும் கவர்ந்திருப்பதே இதற்கு சாட்சி. இந்நிலையில், கிளாப் போர்ட் புரொடக்சன்ஸ் V. சத்தியமூர்த்தி தமிழ்நாடு திரையரங்கு உரிமைகளை பெற்றிருப்பது, படத்தை  கொண்டாட மேலும் ஒரு வலுவான காரணமாக அமைந்துள்ளது. சீட்டின் நுனிக்கே வர வைக்கும், துரத்தல் வகை த்ரில்லர் படங்கள்  புத்திசாலித்தனமான மற்றும் சுறுசுறுப்பான விஷயங்களால் ரசிகர்களை கவர தவறுவதே இல்லை. இயக்குனர் கார்த்திக் தங்கவேலின் 'அடங்க மறு' படமும் அந்த வகையிலான ஒரு படம் தான். அதிரடியான சண்டைக்காட்சிகள், யதார்த்தமான அரங்க அமைப்பு மற்றும் மிகச்சிறந்த நடிகர்கள் மூலம் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. இதன் ...
யுவனின் மிகப் பெரிய விசிறி நான் – ஜீனியஸ் நாயகி

யுவனின் மிகப் பெரிய விசிறி நான் – ஜீனியஸ் நாயகி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
'ஜீனியஸ்' படத்தின் கதாநாயகி பிரியா லால் பேசியது :- மலையாளத்தில் முதல் படம் 'ஜனகன்'. அப்படத்தில் சுரேஷ் கோபியின் மகளாக நடித்திருக்கிறேன். உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு த்ரில்லராக எடுக்கப்பட்ட படம். அதன் பிறகு ரொமாண்டிக், காமெடி படங்களில் நடித்திருக்கிறேன். தமிழில் ஜீனியஸ் தான் முதல் படம்.   இயக்குநர் சுசீந்திரனின் படத்தை முன்பே பார்த்திருக்கிறேன். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் வித்தியாசமானது. 'ஜீனியஸ்' படத்தின் கதை எனக்குத் தெரியாது. அது பற்றி ஒரு வரி தான் சுசீந்திரன் கூறினார். அப்போதே இந்த படத்தில் நடிக்க முடிவு செய்து விட்டேன். வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, ஜீவா, பாண்டியநாடு போன்ற படங்களைப் பார்த்திருக்கிறேன். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் ஜாஸ்மின். ஒரு நர்ஸ் ஆக நடிக்கிறேன். இந்த கதாபாத்திரம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஒரு மாணவி ப...
நாங்கள் தோற்கவில்லை.. தோற்கடிக்கப்பட்டோம்” ; ஆண் தேவதை இயக்குனர் குமுறல்

நாங்கள் தோற்கவில்லை.. தோற்கடிக்கப்பட்டோம்” ; ஆண் தேவதை இயக்குனர் குமுறல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ரெட்டச்சுழி படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்த இயக்குனர் தாமிரா, சுமார் எட்டு வருட போராட்டங்களுக்கு பிறகு ‘ஆண் தேவதை’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். பல கடுமையான போராட்டங்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு ஒருவழியாக இந்தப்படம் சில தினங்களுக்கு முன் ரிலீஸானது. படம் நன்றாக இருப்பதாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்தப்படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காதது மற்றும் தவறான விநியோகஸ்தர் கைகளில் இந்தப்படம் சென்றது என பல காரணங்களால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது ‘ஆண் தேவதை’. இந்நிலையில் இந்தப்படத்தை வெளியிடுவதற்குள் தாங்கள் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்பட்டோம், எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கப்பட்டோம் என தனது மனக்குமுறல்களை பத்திரிகையாளர்களின் முன்னிலையில் வெளிப்படுத்தினார் இயக்குனர் தாமிரா. “எனது சிகரம் சினிமாஸ் நிறுவனத்துடன் பக்ருதீன், முஸ்தபா மற்றும் குட்டி என எனது மூன்று நண்பர்களையும் த...
பாலியல் புகார் கூறிய பெண் மீது வழக்கு தொடருவேன் – தியாகராஜன்

பாலியல் புகார் கூறிய பெண் மீது வழக்கு தொடருவேன் – தியாகராஜன்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  அலைகள் ஓய்வதில்லை, ரங்கா, மலையூர் மம்பட்டியான், நீங்கள் கேட்டவை, கொம்பேறி மூக்கன் உள்பட பல படங்களில் தியாகராஜன் நடித்துள்ளார். சமீபத்தில் திரைக்கு வந்த செக்கச்சிவந்த வானம் படத்திலும் நடித்து இருந்தார். தியாகராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரித்திகா மேனன் முக நூலில் கூறினார். கோவையில் படப்பிடிப்பு நடந்த போது தியாகராஜன் தன்னுடைய அறைக் கதவை தட்டியதாகவும் தான் திறக்க வில்லை என்றும் பதிவிட்டு இருந்தார். பிரித்திகாவின் இந்த குற்றசாட்டை தியாகராஜன் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- பிரித்திகாமேனன் நான் இயக்கிய பொன்னர் சங்கர் படத்தில் அப்ரெசண்டீசாக 3, 4 நாட்கள் புகைப்படம் எடுக்கும் பணியை செய்தார். அப்போது அவர் தங்கியிருந்த அறைக்கதவை யாரோ தட்டியதாகவும் அது நான் தான் என்று முகநூலில் பதிவிட்டுள்ளார். அவர் பங்குபெற்ற காட்சிகளின் படப்பிடிப்பு இரவு தொடங்கி மறுநாள் காலை வரை...
பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன – மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்

பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன – மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளைத் துணிந்து வெளியே சொல்வது மீ டூ இயக்கம் மூலம் அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் திரைத்துறையைச் சேர்ந்த பெண்கள், பத்திரிகையாளர்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். சில தினங்களாக நடிகர், இயக்குனர் அர்ஜுன், சுசி கணேஷன், தியாகராஜன், வைரமுத்து உள்ளிட்ட பலர் மீது பாலியல் புகார்கள் வந்துள்ளது. இந்நிலையில், ஆஸ்கர் விருது பெற்றவர் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். மீ டூ விவகாரம் குறித்து டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், சினிமா துறை பெண்களை மதிக்கும் துறையாக இருக்கவே விரும்புகிறேன். மீ டூ விவகாரம் தொடர்பாக வெளியாகும் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களை கேட்கும் பொழு...
கென்னடி கிளப் – மீண்டும் கபடி களத்தில் சுசீந்திரன்

கென்னடி கிளப் – மீண்டும் கபடி களத்தில் சுசீந்திரன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சுசீந்திரன் இயக்கத்தில் ஜீனியஸ் படம் வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி திரைக்கு வருகிறது. மேலும் ஏஞ்சலினா, சாம்பியன் உள்ளிட்ட படங்களையும் இயக்கி முடித்துள்ளார். இந்த இரு படங்களின் பின்னணி வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். அதன்படி சுசீந்திரன் இயக்கும் அடுத்த படத்தில் சசிகுமார் மற்றும் இயக்குனர் இமயம் பாரதிராஜா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். `கென்னடி கிளப்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சூரி, முனீஸ்காந்த், மீனாட்சி, காயத்ரி, நீது, சௌமியா, ஸிம்ரிதி, சௌந்தர்யா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் நடிக்க பாலிவுட்டில் இருந்து வில்லனை தேடிவருகிறார் சுசீந்திரன். பாண்டியநாடு, பாயும் புலி மற்றும் மாவீரன் கிட்டு உள்ளிட்ட படங்களுக்கு பிறகு சுசீந்திரன் இயக்கும் இந்...
செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் “கரிமுகன்”

செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் “கரிமுகன்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராக சின்ன மச்சான் செவத்த மச்சான் என்ற பாடலை பாடி முதல் பரிசு வென்றார்கள் செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி தம்பதியினர். இந்த பாடலை எழுதியவர் செல்ல தங்கையா. அதற்கு பிறகு இந்த பாடல் சார்லி சாப்ளின் 2 படத்தில் அம்ரீஷ் இசையில் உருவாக்கப்பட்டது...யூடியூப்பில் இன்று வரை 13 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு களித்திருக்கிறார்கள். உலகம் முழுதும் பிரபலமான இந்த குழு “ கரிமுகன் “ என்ற படத்தின் மூலம் சினிமாவில் களமிறங்கி இருக்கிறார்கள்.. செந்தில் கணேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.காயத்ரி என்ற கேரளா பெண் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் யோகிராம், பாவாலட்சுமணன், விஜய் கணேஷ், வின்செண்ட் ராய், தீபாஸ்ரீ ரா.கா.செந்தில் இவர்களுடன் இயக்குனர் செல்ல தங்கையாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்குகிறார் செல்ல தங்கையா. படம் ப...
தாய்லாந்தில் விஜய்சேதுபதி – அஞ்சலி!

தாய்லாந்தில் விஜய்சேதுபதி – அஞ்சலி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பாகுபலி 2 வெற்றிப் படத்தை வெளியிட்ட பட நிறுவனம் S.N.ராஜராஜனின் கே.புரொடக்‌ஷன்ஸ்..அத்துடன் ராணா ரெஜினா சத்யராஜ் நடிக்க சத்யசிவா இயக்கத்தில் தமிழில் மடை திறந்து தெலுங்கில் 1945 படங்கலையும் தயாரித்துக் கொண்டிருக்கிறது. கே புரொடக்சன்ஸ் எஸ்.என்.ராஜராஜன்,  ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் யுவன்சங்கர்ராஜா,  இர்பான் மாலிக்  இணைந்து சூப்பர் ஹிட் டான பியார் பிரேமா காதல் வெற்றிப் படத்தை  தொடர்ந்து விஜய் சேதுபதி அஞ்சலி  நடிக்கும் புதிய படம் ஒன்றையும்  தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி குற்றாலம் போன்ற இடங்களில் 30நாட்கள் நடை பெற்று முடிவடைந்தது... இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது. 40 நாட்கள் இடை விடாமல் தாய்லாந்து அதை சுற்றி உள்ள இடங்களில் மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப் பட உள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் இப்பட...
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்தில் முகாம்!

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்தில் முகாம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஜெயலலிதா மறைவுக்கு பின்னால் கட்சியிலும், ஆட்சியிலும் பல்வேறு சிக்கல்களை அ.தி.மு.க. சந்தித்து வருகிறது. முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற நிலையில், அ.தி.மு.க.வை சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு (2017) ஆகஸ்டு மாதம் 22-ம் தேதி அப்போது கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். அன்றைய தினமே சபாநாயகர் ப.தனபாலை சந்தித்த அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன், “அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவுக்கு எதிராக 19 பேரின் செயல்பாடு உள்ளது” என்று புகார் அளித்தார். அதன் அடிப்படையில், 19 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் ப.தனபால் நோட்டீஸ் அனுப்பினார். 19 பேரில் ஜக்கையன் (கம்பம் தொகுதி) மட்டும் சபா...