மக்களை ஏமாற்றி தயாரிப்பாளர்களின் கோவணத்தை உருவும் முன்னணி நடிகர்கள் வெளுத்து வாங்கும் தயாரிப்பாளர்
தமிழ் சினிமாவில் சமீப காலமாக திருட்டு கதைகள் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், பட வெற்றி விழாக்களும் போலியாக மக்களை ஏமாற்றுவதற்காக தயாரிப்பாளர்களை நஷ்டத்தில் தள்ளி நடிகர்களின் விளம்பரத்திற்காக நடத்தப்படுகிற விழ £க்கள் என்று பகீர் உண்மையை தயாரிப்பாளர் ஒருவர் வெளிப்படுத்தியிருப்பதால் தமிழ் சினிமாவில் பல வெற்றி விழாக்களின் பே £லித்தனம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
இது குறித்து தயாரிப்பாளர் திருப்பூர் சுப்பிரமணியம் என்பவர் வாட்ஸ் அப் குரல் மூலம் வெளியிட்டிருக்கும் ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழ் சினிமாவில் பணம்போட்டு படம் தயாரிக்கிற தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் எல்லாருமே பெருத்த நஷ்டத்தில்தான் இருக்கிறார்கள். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இதுதான் நிலைமை. ஆனால், இதை மறைத்து விட்டு படம் ரிலீஸ் ஆன இரண்ட £வது நாளே வெற்றி விழா கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயம். அந்...
