Author: Kodanki
சசிகுமாருக்கு தங்கை ஆன முன்னணி நடிகை..!
ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது முத்தையா இயக்கத்தில் சசிகுமார், ஜோடியாக ஹன்சிகா நடிக்கும் கொடிவீரன் படத்தில், சசிகுமாரின் தங்கையாக நடிக்கிறார். இது பற்றி கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ்...
“நான் எப்போதுமே ஒரு படத்தில் நடிக்கும் போது அதில் யார் ஹீரோ, எத்தனை நாயகிகள் என்று பார்ப்பது இல்லை. கதையில் எனது பங்கு என்ன என்பதை மட்டுமே பார்க்கிறேன்
அந்த வகையில் ‘கொடிவீரன்’ படத்தில் எனக்கு தங்கை வேடம் என்றாலும் அழுத்தமான வேடம். கதைக்கு முக்கியத்துவம் உள்ள வேடம். ‘காக்காமுட்டை’ படத்தில் எப்படி எனது அம்மா வேடம் பேச வைத்ததோ, அது போல் இந்த தங்கை வேடமும் என்னை பற்றி பேசவைக்கும் வகையில் இருக்கும். எனவே, சசிகுமாருக்கு தங்கையானதும் மகிழ்ச்சி தான்” என்றார்....
ரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த் வேண்டுகோள்
இலங்கை வாழ் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை நடிகர் ரஜினிகாந்த் பயனாளிகளுக்கு வழங்க இருந்தார். இந்நிலையில், அவர் இலங்கைக்கு செல்லக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் எதிரப்பு தெரிவித்ததை அடுத்து இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ’2.0’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லண்டனைச் சேர்ந்த லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், இலங்கை முன்னாள் அதிபரான ராஜபக்சே-வுக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் இந்தப் படத்திற்கு சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இந்நிலையில், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனத்தின் சார்பில் 150 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி அடு...
8 தோட்டாக்கள் படத்திற்காக தேசிய விருதை நிச்சயம் கூறுகிறார் நடிகர் நாசர்
இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி இருக்கும் திரைப்படம் '8 தோட்டாக்கள்'. 'வெற்றிவேல் சரவணா சினிமாஸ்' சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன் மற்றும் 'பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்' - ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரித்து இருக்கும் இந்த '8 தோட்டாக்கள்' திரைப்படத்தை, 'சத்திவேல் பிலிம் பேக்டரி' சார்பில் சக்திவேல் தமிழகமெங்கும் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. புதுமுகம் வெற்றி மற்றும் அபர்ணா பாலமுரளி (மலையாள திரைப்படம் 'மஹேஷிந்தெ பிரதிகாரம்' புகழ்) முன்னணி கதாப்பாத்திரங்களிலும், நடிகர்கள் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, மைம் கோபி மற்றும் மீரா மிதுன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் இசை உரிமையை 'யு 1 ரெகார்டஸ்' நிறுவனத்தின் சார்பில் யுவன்ஷங்கர் ராஜா வாங்கிய அடுத்த கணமே, இந்த படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து விட்...
திரைக்கதை வேகத்தால் பிளாட்பாரத்தை தாண்டும் வைகை எக்ஸ்பிரஸ்..!
சென்னையில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிக்கும் மூன்று பெண்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர். அவர்களில் ஒருவர் டிவி நிருபர், இன்னொருவர் எம்.பி.சுமனின் மச்சினிச்சி, மற்றொருவர் துப்பாக்கி சுடும் வீராங்கனையான நீது சந்திரா.
மூன்று பேரில், இரண்டு பேர் இறந்துவிட, நீது சந்திரா மட்டும் பலத்த காயத்துடன் உயிர்போகும் நிலையில் குத்துயிரும் கொலையிருமாக கிடக்கிறார். இந்த கொலையை விசாரிக்க ரெயில்வே போலீஸ் சிறப்பு பிரிவில் பணியாற்றும் ஆர்.கே.வை நியமிக்கிறார் எம்.பி.சுமன். அவர் அதே பெட்டியில் பயணம் செய்யும் தீவிரவாதியான ஆர்.கே.செல்வமணி மீது சந்தேகப்படுகிறார். ஆனால், அவர் இந்த கொலையை செய்யவில்லை என்பது தெரிந்ததும், அந்த கூபேயில் உடன் பயணிக்கும் மற்றவர்கள் மீது தனது சந்தேக பார்வையை செலுத்துகிறார் ஆர்.கே.
இந்த கொலைக்கான விசாரணையை வெவ்வேறு கோணங்களில் விசாரிக்கும் ஆ...
பாம்பு சட்டை தப்பிக்கும்..! விமர்சனம்
சென்னையில் நடுத்தர குடும்பத்தில் தனது அண்ணி பானுவுடன் வாழ்ந்து வருகிறார் பாபி சிம்ஹா. தனது அண்ணன் இறந்ததால், அண்ணியை தனது அம்மாவாகவே மதித்து வரும் பாபி சிம்ஹாவுக்கு வேலை இல்லை. பல இடங்களில் வேலை தேடியும் பலன்கிடைக்கவில்லை. இறுதியில் தண்ணீர் கேன் நிறுவனம் வைத்திருக்கும் மொட்டை ராஜேந்திரனிடம் வேலையில் சேர்கிறார். அதன் மூலம் தனது அன்றாட வாழ்க்கையை நடத்தி வரும் பாபி சிம்ஹா தனது அண்ணிக்கு வேறு திருமணம் செய்து வைக்க முயற்சி மேற்கொள்கிறார்.
தண்ணீர் கேன் போடும் வேலையை விருப்பமில்லாமல் செய்து வரும் பாபி சிம்ஹா, வேலைக்கு சேர்ந்த மறுநாளே, படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷை சந்திக்கிறார். மேலும் முதல் சந்திப்பிலேயே கீர்த்தி மீது காதல் வயப்படுகிறார். பின்னரை கீர்த்தியை பார்ப்பதற்காகவே தினமும் தண்ணீர் கேன் போடும் வேலையை தொடர்கிறார். பின்னர் ஒருநாள் தனது காதலை கீர்த்தியிடம் தெரிவிக்கிறார்.
முதலில் ...
தாயம் ஆட்டம் குளோஸ்..!
விமர்சனத்திற்கு போவதற்கு முன்பு தாயம் போன்ற படங்களை எடுக்க முயற்சிப்பவர்கள் தயவு செய்து ஹாலிவுட் பக்கம் போய்விடுங்கள். தமிழில் உங்கள் கற்பனை திறனுக்கு வேலையே இல்லை...
கதை: ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வேலைக்கான நேர்முக தேர்வு நடக்கிறது. இதில், நாயகன், நாயகி உள்பட 8 பேர் வருகிறார்கள். அவர்களை ஜெயக்குமார் ஒரு அறையில் அடைத்து வைக்கிறார். அந்த அறைக்குள் அவர்கள் 1 மணி நேரம் இருக்க வேண்டும் என்றும், 1 மணி நேரத்திற்கு பிறகு யார் உயிரோடு இருக்கிறார்களோ, அவர்கள்தான் இந்த கம்பெனிக்கு தலைமை அதிகாரி என்றும் கூறிவிட்டு, அறைக் கதவை அடைத்துவிட்டு செல்கிறார்.
அந்த அறைக்குள் சென்றவுடன் 8 பேருக்கும் தான் யார் என்பதும், தன்னுடைய பின்புலம் என்னவென்பதும் மறந்துவிடுகிறது. ஆனால், நம்மில் யாரோ ஒருவர் மட்டும்தான் வெளியே செல்ல முடியும் என்பதுமட்டும்தான் தெரிகிறது. அப்படியிருக்கையில், அந்த அ...
கிராமத்து காதல், மோதல் கலந்து பயணிக்கும் வாகனம் ‘தங்கரதம்’
என்.டி.சி மீடியா மற்றும் வீகேர் புரொடக்ஷன் பட நிறுவனங்கள் இணைந்து ‘தங்கரதம்‘ என்கிற பெயரில் தமிழ்ப் படமொன்றை தயாரித்திருக்கிறது. மார்ச் 24 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையிலுள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் படத்தின் தயாரிப்பாளர் சி.வி.வர்கீஸ், இணைத் தயாரிப்பாளர் பினுராம் மற்றும் ஹரி, இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ, ஒளிப்பதிவாளர் ஜேக்கப் ரத்தினராஜ், கலை இயக்குநர் ழி.ரி.பாலமுருகன், பாடகர் அந்தோணி தாசன், பாடகி தேவிகா, படத்தின் நாயகன் வெற்றி, நாயகி அதிதி கிருஷ்ணா, இன்னொரு நாயகன் சௌந்தரராஜா, இயக்குநர் பாலமுருகன் மற்றும் படத்தை வெளியிடும் வெங்கீஸ் பிலிம் இண்டர்நேஷனல் வெங்கடேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
படத்தின் நாயகன் வெற்றி பேசும் போது,
“நான் கதையின் நாயகனாக அறிமுகமாகும் முதல் படம் இது. பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்வதும் இது தான் மு...
துருவங்கள் 16 படத்தின் வெற்றிவிழா
துருவங்கள் 16 படம் ரிலிஸ் ஆகி 75 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்திய ரிலீஸ் படங்களில் இந்த படம் தயாரிப்பாளருக்கும், வினியோகஸ்தருக்கும் லாபத்தை கொடித்திருக்கிற படம். இதன் 75வது நாள் வெற்றி விழா சென்னையில் நடை பெற்றது.
