திங்கட்கிழமை, ஜூன் 22
Shadow

Author: Kodanki

விசாரணை  வில்லன் அஜய்கோஷ் தமிழ் மக்கள் வரவேற்புக்கு தப்பு தண்டா மேடையில் விழுந்து வணங்கி நன்றி தெரிவித்தார்..!

விசாரணை வில்லன் அஜய்கோஷ் தமிழ் மக்கள் வரவேற்புக்கு தப்பு தண்டா மேடையில் விழுந்து வணங்கி நன்றி தெரிவித்தார்..!

சினி நிகழ்வுகள்
தப்புதண்டா பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. மறைந்த இயக்குனர் பாலுமகேந்திரா மனைவி அகிலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விசாரணை பட தெலுங்கு போலீஸ் வில்லன் அஜய்கோஷ் அந்த படத்துக்கு தமிழ் மக்கள் தந்த வரவேற்புக்கு தப்பு தண்டா பட விழா மேடையில் விழுந்து வணங்கி நன்றி தெரிவித்தார்.
கடம்பன் நல்ல முயற்சி..! விமர்சனம்

கடம்பன் நல்ல முயற்சி..! விமர்சனம்

விமர்சனம்
கார்ப்ரேட்டுக்களின் பார்வையிலும், தொழில் முனைவோர்களின் பணத்தாசையிலும் சிக்கி பாடுபடும் இயற்கை கொடையான காடு பற்றிய படம் கடம்பன். பிரமாண்ட வெற்று விளம்பரங்கள், பில்டப் அதிரடி ஆக்‌ஷன் படங்களுக்கு மத்தியில் ஒரு வாழ்வியலை வலியோடு சொல்ல முயற்சித்ததற்காக இயக்குனர் ராகவா பாராட்டப்படலாம். கதா நாயகனாக ஸ்டைல் காட்டி ரொமான்ஸ் நாயகனாக வலம் வந்த ஆர்யாவை மாற்றி உடல் மொழிகளில் வித்தியாசம் காட்டி நடித்திருக்கும் ஆர்யா கேரியரில் கடம்பன் முக்கியமானவன். கதை என்று பார்த்தால் அடர்ந்த காடு. அதற்குள் காலம் காலமாக வசிக்கும் மலைவாழ் மக்கள். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வெளியேற்றி விட்டு காட்டை சூரையாட முயற்சிக்கும் ஒரு கோஷ்டி. கடம்பன் ஆர்யா காட்டை காப்பாற்றினாரா... காதல் ஜெயிச்சதா என்பது மீதிகதை. கதையின் மையகரு மிக அற்புத்மாமானது திரைக்கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் நலம். ஒளிப்பதிவு பல...
ஜாலியான…  கனமான ஒரு உணர்வையும் சொல்லும்  திருப்பதிசாமி குடும்பம் ..!

ஜாலியான… கனமான ஒரு உணர்வையும் சொல்லும் திருப்பதிசாமி குடும்பம் ..!

செய்திகள்
ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா, ஜெம்ஸ் பிலிம்ஸ் முருகானந்தம் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ திருப்பதிசாமி குடும்பம் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ஜே.கே, ஜாகீன் என்கிற இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஜெயன் என்பவர் அறிமுகமாகிறார். மற்றும் தேவதர்ஷினி, லஷ்மி ஐஸ்வர்யா, மயில், முத்துராமன், கே.அமீர், சிசர்மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்.. ஒரு நடுத்தர குடும்பத் தலைவன் திருப்பதிசாமி, கால் டாக்சி டிரைவரான திருப்பதிசாமி, அவரது மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் என சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த குடும்பத்திற்கு ஒரு சின்ன தடங்கல். திருப்பதிசாமியின் பிள்ளைகளுக்கு நடக்கும் எதிர்பாராத நிகழ்வு ஒன்று அந்த சந்தோஷக் குடும்பத்தை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதே கதை ! ஜாலியான அதே சமயம் கனமான ஒரு உணர்வையும் இந்த திருப்பதிச...
சிவலிங்கா விமர்சனம்..!

சிவலிங்கா விமர்சனம்..!

விமர்சனம்
சக்திவேல் வாசு மற்றும் அவரது அப்பா சந்தானபாரதி இருவரும் பிரியாணி மாஸ்டர்கள். நடிகை சாராவும் அவரது அப்பாவான ராதாரவியும் சைவ உணவு மாஸ்டர்கள். இந்த இரு குடும்பமும் எந்தவொரு நிகழ்ச்சியிலும் ஒன்றாகவே சமைப்பார்கள். இந்த நெருக்கமானது, சக்திவேல் வாசுவுக்கும், சாராவுக்கும் இடையே காதலை உண்டாக்கியது. ஆனால், இவர்களுடைய காதல் சாராவின் அப்பாவுக்கு பிடிக்கவில்லை. சக்தி சமைப்பதோடு மட்டுமில்லாமல் புறா ஒன்றயும் பாசமாக வளர்த்து வருகிறார். இந்நிலையில், வெளியூருக்கு சமையல் வேலையாக ரெயிலில் சென்று கொண்டிருக்கும்போது, மர்ம நபர் ஒருவர் சக்தியை ரெயிலில் இருந்து கீழே தள்ளி கொலை செய்துவிடுகிறார். இந்த கொலையில் ரெயில்வே போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்காததால் சக்தி தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்லி வழக்கை முடிக்கிறது.  ஆனால், சாராவோ இது தற்கொலை இல்லை, கொலை என்று போலீசில் புகார் கொடுக்கிறார். இதையடுத்து இந்த வழக்...
நடிகர் சரண் ராஜ் மகனின் படப் பாடல்  சூப்பர் ஸ்டார் வெளியிட்டார்…!

நடிகர் சரண் ராஜ் மகனின் படப் பாடல் சூப்பர் ஸ்டார் வெளியிட்டார்…!

சினி நிகழ்வுகள்
பிரபல நடிகர் சரண்ராஜ் மகன் தேஜ் சரண்ராஜ் நடிப்பில் லிங்கன் ராஜாளி இயக்கத்தில் உருவாகியுள்ள " லாலி லாலி ஆராரோ " படத்தின் இசையை  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். ரஜினிகாந்த் வீட்டில் மிக எளிமையாக நடந்தது. பாடலை கேட்டு ரஜினி பாராட்டினார்.
ஹரிப்பிரியா கவர்ச்சியில் உருவாகும் சிலந்தி 2…!

ஹரிப்பிரியா கவர்ச்சியில் உருவாகும் சிலந்தி 2…!

செய்திகள்
தென்னிந்திய திரையுலகின் முழுமையான முதல் டிஜிட்டல் திரைப்படமான சிலந்தி படத்தை எழுதி இயக்கி வெற்றிபெற்ற ஆதிராஜன் தனது டிஜிட்டல் தியேட்டர்ஸ் பட நிறுவனம் மூலம் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம் ”சிலந்தி-2” கை நிறைய சம்பாதிக்கும் வேகத்தில் நாகரீக மோகத்தில் நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் காற்றில் பறக்கவிட்டு..சுதந்திரம் என்ற பெயரில் எல்லை மீறி சிறகடிக்கத் துடிக்கும் பெண்களால் ஏற்படும் விபரீத விளைவுகளும் அதனால் அந்த பெண்களுக்கு உருவாகும் ஆபத்துக்களையும் மையப்படுத்தி பரபரப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.. ரசனையான காதல்.. நாகரீகமான நகைச்சுவை.. அதிரடி சண்டைக் காட்சிகளுடன்.. அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத திரைக்கதையுடன் உருவாகியிருக்கும் இந்த த்ரில்லர் படத்தில் ​ ​விஜய​ ​ராகவேந்திரா கதாநாயகனாக நடித்தி...