வெள்ளிக்கிழமை, ஜூலை 3
Shadow

Author: Kodanki

‘சொப்பன சுந்தரி’ ஆன ஐஸ்வர்யா ராஜேஷ்!

‘சொப்பன சுந்தரி’ ஆன ஐஸ்வர்யா ராஜேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  சொப்பன சுந்தரி' ஆன ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னனி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் தற்போது ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தமிழில் தங்களது முதல் படத்தை தயாரித்துள்ளனர். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு 'சொப்பன சுந்தரி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனுடன் 'சொப்பன சுந்தரி' என்ற டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். 'லாக்கப்' படத்தை இயக்கிய இயக்குநர் எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். இவருடன் தேசிய விருது பெற்ற லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருண...
“சினம்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!!

“சினம்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  “சினம்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!! Movie Slides Pvt. Ltd சார்பில் R. விஜயகுமார் தயாரிப்பில், இயக்குநர் GNR குமரவேலன் இயக்கத்தில், அருண் விஜய், பாலக் லால்வானி, நடித்துள்ள திரில்லர் டிராமா திரைப்படம் “சினம்”. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை விழா இன்று கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் திரைப்பிரபலஙகளும் படத்தின் குழுவினரும் கலந்துகொண்டனர். இவ்விழாவினில்.., இயக்குனர் ஹரி கூறியதாவது.., “படத்தின் டிரைலரை நான் பார்த்தேன், கவரும் வகையில் இருந்தது. படத்தின் கதைகரு ஆழமாகவும், உணர்வுபூர்வமாகவும் இருக்கிறது. மனதை உலுக்ககூடிய ஒரு படமாக இருக்கும் என தெரிகிறது. பல ஆண்டுகள் கழித்து விஜயகுமார் சார் தயாரிப்பாளராக மாறியுள்ளார். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும்,இந்த படம் அனைவருக்கும் லாபம் தரக்கூடிய ஒன்றாக இருக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள். இயக்குனர் அ...
ஷூ’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

ஷூ’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஷூ' திரைப்பட இசை வெளியீட்டு விழா! Netco Studios சார்பில் நியாஷ் & கார்த்திக் மற்றும் ATM Productions T மதுராஜ் நிறுவனங்கள் தயாரிப்பில் இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் யோகிபாபு நாயகனாக நடித்திருக்கும் திரில்லர் காமெடி திரைப்படம் “ஷீ”. இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் CS இசையமைத்துள்ளார். புதுமையான திரைக்கதையில் ஒரு அருமையான திரில் பயணமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா  நடைபெற்றது. இவ்விழாவினில் தயாரிப்பாளர் நியாஷ் கூறியதாவது... தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை தருவதை மட்டுமே நோக்கமாக கொண்டு தயாரிப்பில் இயங்கியுள்ளோம். எங்களது முதல் திரைப்படமாக கல்யாண் இயக்கத்தில் ‘ஷூ’ திரைப்படம் உருவானது எங்களுக்கு மகிழ்ச்சி. அடுத்து பல திரைப்படங்களை வரிசையில் வைத்துள்ளோம். உங்களுடைய ஆதரவு எங்களுக்கு தேவை. தொடர்ந்து நல்ல படங்கள் தருவோம் நன்றி. ...
புதுமையான தோற்றத்தில் ஜெயம் ரவி மிரட்டும் “சைரன்”

புதுமையான தோற்றத்தில் ஜெயம் ரவி மிரட்டும் “சைரன்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  புதுமையான தோற்றத்தில் ஜெயம் ரவி மிரட்டும் “சைரன்” படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியது !!! Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதிய திரைப்படமான  “சைரன்” படத்தின் படப்பிடிப்பு கோலகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. தமிழ் திரையுலகில் ‘ஜெயம்’ படம் மூலம் அறிமுகமாகி, ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரம் மற்றும் வித்தியாசமான கதைகளங்களால் ரசிகர்களை மகிழ்வித்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர் ஜெயம் ரவி அடுத்ததாக “சைரன்” எனும் பிரமாண்ட படத்தில் நடிக்கிறார். இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ படங்களில் எழுத்தில் பங்களித்த ஆண்டனி பாக்யராஜ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மிகப்பிரமாண்ட பொருட்செலவில்...
உறியடி விஜய்குமாரின் புதிய படம் நிறைவு

உறியடி விஜய்குமாரின் புதிய படம் நிறைவு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  62 நாட்கள் தொடர் படப்பிடிப்பில் உறியடி விஜய்குமாரின் புதிய படம் நிறைவு உறியடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் விஜயகுமார் நடிப்பில் , சேத்துமான் படத்தின் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் தயாராகிவரும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர்ந்து இரவுபகலாக 62 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது. சிறந்த படைப்புகளை தரும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட ‘ரீல் குட் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆதித்யாவின் இரண்டாவது படைப்பாக காதல், அரசியல், ஆக்சன் கலந்த ஜனரஞ்சகமான குடும்பதிரைப்படமாக இப்படம் தயாராகி வருகிறது. கதாநாயகனாக விஜய்குமார் நடிக்க நாயகிகளாக ’அயோத்தி’ படத்தில் நடிக்கும் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் அறிமுக நடிகையான ரிச்சா ஜோஷி நடிக்கிறார்கள். இவர்களோடு முக்கிய கதாப்பாத்திரத்தில் ‘வத்திக்குச்சி’ திலீபன், ’கைதி’ ஜார்ஜ் மரியான், ’வடசென்ன...
காமெடியும், காதலும் கலந்த கலவை காபி வித் காதல்

காமெடியும், காதலும் கலந்த கலவை காபி வித் காதல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
காமெடியும், காதலும் கலந்த கலவை காபி வித் காதல் சுந்தர் சி. இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் காபி வித் காதல். ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, யோகிபாபு, திவ்யதர்ஷினி, ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காதல் மற்றும் காமெடி என இருவேறு பரிணாமங்களில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். ஏற்கனவே இப்படத்தில் இருந்து 3 பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம் பெற்றிருந்த ரம் பம் பம் ஆரம்பம் பாடலானது, இந்தப் படத்தில் ரீமெக் செய்து வெளியிடப்பட்டது. இந்த பாடல் பெரும்பான்மையான ரசிகர்களை கவர்ந்தது. படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், ப்ரீ ஃப்ரொடக்‌ஷன் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது படக்குழு படத்தின் ரிலீஸ் தேத...
விஷ்ணு விஷால் நடிக்கும் க்ரைம் திரில்லர் “ஆர்யன்”!

விஷ்ணு விஷால் நடிக்கும் க்ரைம் திரில்லர் “ஆர்யன்”!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஷ்ணு விஷால் நடிக்கும் க்ரைம் திரில்லர்  “ஆர்யன்”! விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க,  நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில் உருவாகும் க்ரைம் திரில்லர் திரைப்படமான “ஆர்யன்” படத்தின் பூஜை, படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள எளிமையான முறையில் இனிதே நடைபெற்றது. தமிழ் திரையுலகில் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைகளங்களில் நடித்து, தொடர் வெற்றிகளை தந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால், ராட்சசன் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். புதுமையான திரைக்கதையில், பரப்பரான திருப்பங்களுடன் உருவாகும் இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குநர் பிரவீன் K இப்படத்தினை இயக்குகிறார். இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீந...
பா.இரஞ்சித்தை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினி!

பா.இரஞ்சித்தை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பா.இரஞ்சித்தை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினி. இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பல்வேறுதரப்பட்ட மக்களின் பாராட்டுகளையும் பெற்றுவருகிறது. துஷாரா, காளிதாஸ்ஜெயராம், கலையரசன், ஹரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று பார்த்துவிட்டு இயக்குனர் பா.இரஞ்சித்தை அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். "உங்கள் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் சிறந்த படம் நட்சத்திரம் நகர்கிறது படம்தான். நடிகர்கள், ஒளிப்பதிவு, இசை , கலை இயக்கம் என அனைத்தும் மிகச்சிறப்பு , எனக்கு படம் ரொம்ப பிடிச்சிருக்கு, நான் மிகவும் ரசித்தேன். குறிப்பாக எனது ஆரம்பகால நாடக வாழ்க்கையையும் எனக்கு ஞாபகப்படுத்தியது இந்தபடம். நாடக நடிகராக என்னால் இந்த படத்தில் எளிதாக ஒன்றிப்போக முடிந்தது, என்று தனது நாடககால வாழ்வின் ...
புது முகங்களின் காதல் காவியமான ‘பனாரஸ்’ நவம்பரில் ரிலீஸ்!

புது முகங்களின் காதல் காவியமான ‘பனாரஸ்’ நவம்பரில் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
*காதல் காவியமான 'பனாரஸ்' நவம்பரில் வெளியாகிறது*   புதுமுக நடிகர் ஜையீத் கான், பாலிவுட் நடிகை சோனல் மோன்டோரியோ முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் காதல் காவியமான 'பனாரஸ்' திரைப்படம், நவம்பர் மாதம் நான்காம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கன்னட திரையுலகின் முன்னணி இயக்குநரும், பல விருதுகளை வென்ற படைப்பாளியுமான ஜெயதீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பனாரஸ்'. ஜையீத் கான் மற்றும் சோனல் மோன்டோரியோ கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். காதலை முன்னிலைப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை என். கே. புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்...
ஜெயிலரில் இணையும் ஜெய் !

ஜெயிலரில் இணையும் ஜெய் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. மேலும், இந்த படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் ஆகியோர் இணைந்துள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ஜெய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....