காமெடியும், காதலும் கலந்த கலவை காபி வித் காதல்
சுந்தர் சி. இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் காபி வித் காதல்.
ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, யோகிபாபு, திவ்யதர்ஷினி, ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
காதல் மற்றும் காமெடி என இருவேறு பரிணாமங்களில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார்.
ஏற்கனவே இப்படத்தில் இருந்து 3 பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம் பெற்றிருந்த ரம் பம் பம் ஆரம்பம் பாடலானது,
இந்தப் படத்தில் ரீமெக் செய்து வெளியிடப்பட்டது. இந்த பாடல் பெரும்பான்மையான ரசிகர்களை கவர்ந்தது.
படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், ப்ரீ ஃப்ரொடக்ஷன் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வந்தது.
தற்போது படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறது.
அதன்படி, காபி வித் காதல் திரைப்படம் அக்டோபர் மாதம் 7-ம் தேதி தியேட்டர்களில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், வழக்கம் போல உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்தப் படத்தை வெளியிடுகின்றனர்.

