புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

யா யா பட தயாரிப்பாளரின் அடுத்த படம்

யா யா பட தயாரிப்பாளரின் அடுத்த படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
எம் 10 புரொடக்‌ஷன் சார்பாக எம்.எஸ்.முருகராஜ் தயாரிப்பில் வெளியான படம் "யா யா". இப்படத்தில் "மிர்ச்சி" சிவா, சந்தானம், சாய் தன்ஷிகா, சந்தியா ஆகியோர் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் தந்து உருவான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது. இந்நிலையில், தனது நிறுவனத்தின் அடுத்த படைப்பை தயாரிக்க இருக்கிறார் தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ். இவர் அடுத்ததாக தயாரிக்கவிருக்கும் படம் முழுக்க முழுக்க எமோஷனலுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ஜனரஞ்சகமான படமாக உருவாகவிருக்கிறது. மனிதர்களுக்கும் ஒட்டகத்துக்குமான பாசப்பிணைப்பை நெகிழ்ச்சியுடன் சொல்லும் படமான இதனை ’சிகை’ படத்தின் இயக்குநர் ஜெகதீசன் சுபு இயக்கவிருக்கிறார். படத்தின் திரைக்கதை அமைப்பு வேலைகள் நடைபெற்றுவருகிறது. படத்தின் பூஜை விரைவில் நடைபெறவிருக்கிறது. பட...
போட்டோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா..!

போட்டோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது “பொட்டு“ படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள். பொட்டு படம் மே மாதம் வெளியாக உள்ளது. அதை தொடர்ந்து ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “கா“ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். உலக மக்களுக்கான படம் இது. இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. கா என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும். முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளதால் ‘கா’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைப் போட்டோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். மு...
ஆளுநர் அருகில் நிர்மலாதேவியை அனுமதித்தது யார்?- பேராசிரியர் முருகனின் மனைவி ஆவேசம்

ஆளுநர் அருகில் நிர்மலாதேவியை அனுமதித்தது யார்?- பேராசிரியர் முருகனின் மனைவி ஆவேசம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
நிர்மலாதேவி விவகாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மேலாண்மைத்துறை உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மதுரை ஒத்தக்கடையில் உள்ள பேராசிரியர் முருகனின் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இன்று 4-வது நாளாக முருகன் மற்றும் கருப்பசாமியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா இன்று காலை மதுரை சுற்றுலா மாளிகை வந்தார். அங்கு விசாரணை அதிகாரி சந்தானத்தை சந்தித்து மனு கொடுத்தார். பின்னர் வெளியே வந்த சுஜா நிருபர்களிடம் கூறியதாவது:-நிர்மலாதேவி விவகாரத்தில் எனது கணவர் முருகன் மற்றும் கருப்பசாமியை பலிகடாவாக்கி வழக்கை முடிக்க பார்க்கின்றனர். நிர்மலாதேவிக்கும், எனது கணவருக்கும் எந்த பழக்கமும் இல்லை. கடந்த 4 மாதமாகத்தான் அவரை தெரியும். புத்தாக...
அடல்ட் ஹாரர் காமெடி படத்தை பொழுதுபோக்கு படமாக மட்டுமே பார்க்கவேண்டும் – இயக்குநர் சந்தோஷ்

அடல்ட் ஹாரர் காமெடி படத்தை பொழுதுபோக்கு படமாக மட்டுமே பார்க்கவேண்டும் – இயக்குநர் சந்தோஷ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  மே மாதம் 4 ஆம் தேதியன்று வெளியாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் ஹாரர் காமெடி படத்தை பொழுதுபோக்கு படமாகத்தான் பார்க்கவேண்டும் என்று அப்பட இயக்குநர் சந்தோஷ் P.ஜெயகுமார் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாரான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையிலுள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நாயகன் கௌதம் கார்த்திக், நாயகிகளுள் ஒருவரான யாஷிகா ஆனந்த், நடிகர் சாரா, இயக்குநர் சந்தோஷ் P. ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகை யாஷிகா ஆனந்த் பேசுகையில்,‘ இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கௌதம் கார்த்திக், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் என அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றிய போது என்னுடைய கனவு நனவானது போல் இருந்தது. அத்...
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’  மே 4ம் தேதி ரிலீஸ்..!

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ மே 4ம் தேதி ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
`ஹரஹர மஹாதேவகி' படத்தை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் அடுத்ததாக ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, `கஜினிகாந்த்' உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார். இதில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நாயகன், நாயகியாக கவுதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா நடிக்கின்றனர். அடல்ட் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகும் இந்த படத்தில் ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வந்தது. தற்போது இப்படத்தை மே 4ம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்....
தடைகளை தாண்டி மே 11ல் படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெறும் – அரவிந்த்சாமி நம்பிக்கை

தடைகளை தாண்டி மே 11ல் படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெறும் – அரவிந்த்சாமி நம்பிக்கை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள "பாஸ்கர் ஒரு ராஸ்கல்" படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி  நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார்.இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோருடன் ,மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார்.அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார். 'பரதன் பிலிம்ஸ்' இப்படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இப்படத்தை ‘ஹர்ஷினி மூவீஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.'பரதன் பிலிம்ஸ்' இப்படத்தினை தமிழகம் முழுவதும் வருகின்ற மே 11  முதல் ரிலீஸ் செய்ய உள்ளது. சென்னையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் நடிகர் அரவிந்த்சாமி ,சித்ரா லட்சுமணன் ,தயாரிப்பாள...
குட்கா வழக்கு ; சிபிஐ விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

குட்கா வழக்கு ; சிபிஐ விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

HOME SLIDER, NEWS, செய்திகள்
குட்கா முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ய டி.ஜி.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆகியோர் லஞ்சம் பெற்றதாகக் கூறப்பட்டு வந்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரும் லஞ்சம் வாங்கினார் என்றும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் எனத் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கு தொடங்கியதிலிருந்து இதற்கு சி.பி.ஐ விசாரணை தேவையில்லை...
அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறிய காளிதாஸ்

அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறிய காளிதாஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’. பரத், அன் ஷீத்தல், ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். புவன் சீனிவாசன் படத் தொகுப்பை கவனிக்கிறார். திரைக்கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீசெந்தில். இவர் நாளைய இயக்குநர் சீசன் - 3 இல் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை முன்னேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,‘ சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தில் நடிகர் பரத் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். முக்கியமான கேரக்டர்களில் ஆதவ் கண்ணதாசனும், சுரேஷ் மேனனும் நடித்திருக்கிறார்கள். பரத்திற்கு ஜோடியாக அன் ஷீத்தல் என்ற மலையாள நடிகையை ...
ரஜினியின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரஜினியின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ரஜினி நடிப்பில் ‘காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரஜினிகாந்த் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சன்பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், விஜய் சேதுபதி நடிப்பதை படக்குழு உறுதிசெய்துள்ளது. ரஜினியுடன் விஜய் சேதுபதி முதல்முறையாக இணையவிருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. விஜய் சேதுபதி இந்த படத்தில் ரஜினியின் தம்பி அல்லது வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் நாயகி மற்றும் மற்ற கதாபாத்திரங்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படப்பிடிப்பை அடுத்த மாதம் துவங்க படக்குழு திட்டமிட்டிருப்ப...