'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் தீர்ப்பு தேதி இன்று ( 7.11.17) அறிவிப்பு திக்... திக்... படபடப்பில் அறிவாலயம்..!
காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு தேதி, இன்று அறிவிக்கப்பட உள்ளது.
'இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, கடந்த விசாரணையின்போது ஆஜராகாத, கரீம் மொரானி, சஞ்சய் சந்திரா மற்றும், தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜா, கனிமொழி ஆகியோர் உட்பட, அனைவரும் இன்று ஆஜராக வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால், 10 ஆண்டுகளுக்கு முன், ஊழல் செய்தவர்கள், அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
மத்தியில், காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியின்போது, 2007 - 2009 வரை, மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக, தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜா இருந்தார்.
அப்போது, மொபைல் போன் சேவைகளுக்கான, ...
பணியிலிருக்கும்போதே இயற்கை எய்திய பத்திரிகையாளர் மோகன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும்
தமிழக அரசுக்கு டி.யூ,ஜெ. கோரிக்கை
பணியிலிருக்கும்பாதே இயற்கை எய்திய பத்திரிகையாளர் மோகன் குடும்பத்திற்கு ரூ.5லட்சம் நிதி உதவி அளிக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் (டி.யூ.ஜே.) கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தினகரன் பத்திரிக்கையின் மூத்த செய்தியாளரும், எம்.யூ,ஜெ.வின் பொதுச்செயலாளரும், எனது 30 ஆண்டு கால நெருக்கமான தோழராகிய மோகன் அவர்கள் நேற்று (நவம்பர் 5) முற்பகலில் மறைந்தார் என்ற செய்தி என்னை அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தியது.
மறைந்த டி.யூ,ஜெ. தலைவர் தோழர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்களால் பத்திரிக்கை துறைக்கும், பத்திரிகையாளர் ...
முதல் முறையாக கோபாலபுரம் வீட்டுக்கு சென்று கருணாநிதியிடம் உடல் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி
ரொம்ப நாட்களாக நடந்து வரும் 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி நாளை அறிவிக்கப்பட இருக்கிறது.
நாளையோடு சரியாக ஓராண்டு முடியும் சாமானிய மக்களை ஏமாற்றிய மோடி அரசின் பண மதிப்பிழப்பு நாளை 8ம் தேதி திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் "கருப்பு தினம்" என போராட்டம் நடத்த அழைப்பு விடுத்த நாள்.
அதே போல அதே நாளில் ஆளும் பிஜேபி அந்த நாளை கருப்புப் பணம் ஒழிப்பு நாள் ஆக கொண்டாடப் போவதாக அறிவித்தது.
இந்தியாவிலேயே மிக மூத்த அரசியல் தலைவர் கருணாநிதியை திடீரென பிரதமர் மோடி சந்தித்தது சரிந்து விழும் மக்கள் செல்வாக்கை மீட்டுக் கொள்ளவா...
திமுக அறிவித்த போராட்டம் பிசுபிசுக்குமா...
மஸ்தான் வித்தை எடுபடுமா...
- கோடங்கி...
சீயான் விக்ரம் அவர்களின் மகள் அக்ஷிதாவிற்கும், திமுகவின் தலைவர் கருணாநிதியின் மகன் மு க முத்துவின் மகள் வயிற்று பேரனும், கெவின் கேர் நிறுவனத்தலைவர் சி கே ரங்கநாதன் அவர்களின் மகன் மனு ரஞ்சித்திற்கும் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் திருமண வரவேற்பு நடைபெற்றது.
புதுச்சேரி அருகே உள்ள பட்டானூரில்அமைந்திருக்கும் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் வரவேற்பு நடைபெற்றது. இதில் தொழிலதிபர்கள், அரசியல் கட்சியின் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள், கெவின் கேர் குழும ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் திரு, ச ராமதாஸ், திமுகவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான திரு. எம் ஆர் கே பன்னீர் செல்வம், தி மு க வின் முன்னாள் அமை...
ஹீரோக்களை மிஞ்சும் விதத்தில் கட் அவுட்டில் இடம் பெற்ற நயன்தாரா - அறம் பட விளம்பர யுக்தி
பெண் சமத்துவம் என்பதை வெறும் பேச்சில் மட்டுமே கொண்டுள்ள பல துறைகள் இருக்கும் இக்காலத்தில், அதனை நடைமுறையிலும் செயலாக்கிக்கொண்டிருக்கிறது தமிழ் சினிமா துறை.
மிக வலுவான முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள 'அறம்' படத்தை கோபி நைனார் இயக்கியுள்ளார். இது ஒரு சமுதாய பிரச்சனைகளை பற்றி பேசும் படமாகும்.
இப்படத்தை தயாரித்துள்ள KJR ஸ்டுடியோஸ், பிரம்மாண்ட விளம்பர யுக்திகளை கையாளவுள்ளனர். ஒரு பெரிய மாஸ் ஹீரோவின் பட ரிலீசுக்கு இணையாக இப்படத்திற்கு மிகப்பெரிய பேனர்கள் தமிழகமெங்கும் பல திரையரங்கங்களில் எழுப்பப்படவுள்ளன. '
' 'அறம்' படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியுள்ளது. நயன்தாரா அவர்களின் பெரிய மார்க்கெட் வேல்யூவிற்கு ஈடான விளம்பர யுக்திகளை கையாள்வத...
புது முகங்களை வைத்து படம் இயக்கி வெற்றி அடையும் போதுதான் அந்த வெற்றி இயக்குநரை சேரும் - சுசீந்திரன்.
'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தில் சந்திப், விக்ராந்த் ஹீரோவாகவும். மெஹரின் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். இந்த படம் 'நான் மகான் அல்ல', 'பாண்டியநாடு' போன்ற படம். நட்பை மையப்படுத்தி சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டுள்ளது. இமான் அவர்களுடன் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இணைந்துவுள்ளோம். படத்தில் பாடல்கள் நன்றாக வந்துள்ளது.என்னுடன் எல்லா படத்திலும் இருக்கும் சூரி இந்த படத்திலும் இருக்கிறார்.சூரிக்கு என்னுடன் இது ஏழாவது படம். இந்த படத்தில் சூரியின் பங்கு அதிகமாக இருக்கும். மிகவும் ஆச்சரியப்படுத்தும் நபர்களில் ஒருவர் சூரி.வெண்ணிலா கபடி குழுவுக்கு பின் லட்சுமணனுடன் மீண்டும் இணையும் படம். இந்த படத்தின் கலை இயக்குநராக சேகர் பணியாற்றியுள்ளார். நிச்சயமாக இந்த படம் அனைவருக்கும் வெற்றி படமாக அமை...
இயக்குநர் பா_இரஞ்சித்தின் அடுத்தக்கட்ட நகர்வு.
இயக்குநர் பா.இரஞ்சித், தனது அனைத்து படங்களிலும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்வியலையும், அவர்களுக்கான அரசியலையும் வலுவாக பேசக்கூடியவர். திரைப்படங்களில் கருத்துக்களைப் பேசுவதோடு நின்று விடாமல் களத்திலும் சமூக மாற்றத்திற்கான அவசியத்தை முன்னிறுத்தி பல ஒருங்கிணைப்புகளையும், சாதி ஒழிப்பிற்கான பல விவாதங்களையும் நடத்திக் கொண்டிருப்பவர். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து “காலா” படத்தை எடுத்து வந்தாலும், இடையிடையே சமூகம் சார்ந்த தனது செயல்பாடுகளையும் தொய்வில்லாமல் தொடர்ந்தவண்ணம் உள்ளார்.
அந்த வகையில், தனது சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான “நீலம் புரொடக்சன்ஸ்” மற்றும் “நீலம் பண்பாட்டு மையம்” ஆகியவை இணைந்து ஒருங்கிணைத்துள்ள “நானும் ஒரு குழந்தை” என்னும் தலைப்பில் புகைப்பட கண்காட்சி ஒன்றை நடத்த உள்ளார் பா.இரஞ்சித்.
புகைப்படக் கலைஞர் ம.பழனிகுமாரின் புகைப்...