செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

பணியிலிருக்கும்போதே  இயற்கை எய்திய பத்திரிகையாளர் மோகன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் – அரசுக்கு TUJ கோரிக்கை

 

பணியிலிருக்கும்போதே  இயற்கை எய்திய பத்திரிகையாளர் மோகன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும்

தமிழக அரசுக்கு டி.யூ,ஜெ. கோரிக்கை

 

பணியிலிருக்கும்பாதே  இயற்கை எய்திய பத்திரிகையாளர் மோகன் குடும்பத்திற்கு ரூ.5லட்சம் நிதி உதவி அளிக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் (டி.யூ.ஜே.) கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தினகரன் பத்திரிக்கையின் மூத்த செய்தியாளரும், எம்.யூ,ஜெ.வின் பொதுச்செயலாளரும், எனது 30 ஆண்டு கால நெருக்கமான தோழராகிய மோகன் அவர்கள் நேற்று (நவம்பர் 5) முற்பகலில் மறைந்தார் என்ற செய்தி என்னை அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தியது.

மறைந்த டி.யூ,ஜெ. தலைவர் தோழர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்களால் பத்திரிக்கை துறைக்கும், பத்திரிகையாளர் சங்கத்திற்கும் அறிமுகப்படுத்தப்பட்ட தோழர் மோகன் தனது தன்னலம் கருதாத உழைப்பால் டி.யூ,ஜெ. மற்றும் எம்.யூ,ஜெ, சென்னை பிரஸ் கிளப், பிரஸ்கில்டு ஆகியவற்றின் பல்வேறு உயர் பொறுப்புகளை திறம்பட வகித்தவர். எம்.யூ,ஜெ. வின் பொதுச்செயலாளராக இருக்கும்போதே இயற்கை எய்தியுள்ளார்.

 

அந்த அளவிற்கு பத்திரிகை, தொழிற்சங்க பணிகளிலும், பத்திரிகையாளர்கள் நலன்கள் மற்றும் உரிமைகளுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு நேர்மையாக அயராது உழைத்து வந்தவர் தோழார் மோகன். அவரது திடீர் மறைவு உழைக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும், சங்கங்கள், அமைப்புகளுக்கும் பெரும் பின்னடைவாகும். தனிப்பட்ட முறையில் எனக்கும் ஒரு பேரிழப்பாகும்.

தோழர் மோகன் அவர்களை இழந்து வாடும் அவரது மனைவி சகோதரி சசிகலா அவர்களுக்கும், அவரது மகன்கள் விஜயசாரதி, பார்த்தசாரதி ஆகியோருக்கும், தோழர் மோகன் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் தினகரன் நாளிதழ் தோழர்கள், எம்.யூ,ஜெ. தோழர்கள் மற்றும் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும். எனது சார்பிலும் டி.யூ,ஜெ சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பணியிலிருக்கும் போது இயற்கை எய்தும் பத்திரிகையாளர் குடும்பத்திற்கு தற்போது வழங்கி வரும் ரூபாய் 2 லட்சம் என்ற நிதி உதவியினை ரூபாய் 5 லட்சமாக வழங்க வேண்டும் என்று டி.யூ,ஜெ. மற்றும் அனைத்து பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இயற்கை எய்திய பத்திரிகையாளர் மனைவிக்கும் மாதாந்திர குடும்ப ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும், அரசுக்கு வலியுறுத்தி வருகிறோம்.

எனவே, தமிழக அரசு இந்த கோரிக்கைகளை பரிசீலித்து தோழர் மோகன் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிதி உதவியும், அவரது மனைவி சகோதரி சசிகலா அவர்களுக்கு குடும்ப ஓய்வூதியமும் வழங்கவேண்டும் என தமிழக அரசை டி.யூ,ஜெ. வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு தனது அறிக்கையில் மாநிலத்தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் கூறியுள்ளார்.

அவர் மற்றொரு அறிக்கையில், Ôகண் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஈரோட்டில் மகன் வீட்டில் ஓய்விலிருப்பதால் என்னால் துரதிர்ஷ்டவசமாக நேரில் வந்து தோழர் மோகன் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்த முடியவில்லை என்பதைவேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.    சென்னையில் பிரஸ் கிளப்பில் நடைபெற்ற தோழர் மோகன் அஞ்சலி நிகழ்ச்சியில் டி.யூ,ஜெ.மாநில மையத்தின் சார்பில் மாநில துணைத்தலைவர் பி.சண்முகவேல், பொதுச்செயலாளர் கோ.முத்து தலைமை நிலைய செயலாளர்  பி.ஆர்.வேலங்கண், சென்னை மாவட்டச் செயலாளர் ம.மி.ஜாபர் உசேன் உள்ளிட்ட இதர தோழர்கள் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இன்று அவரது சொந்த ஊரான  குடியாத்தம் பரதராமியில் நடைபெறும் இறுதி நிகழ்ச்சியில் டி.யூ,ஜெ. சார்பில் மாநில அமைப்பு செயலாளர் தோழர் பி.ஆர்.சுப்பிரமணியன் உள்ளிட்ட வேலூர் மாவட்ட தோழர்கள் பங்கேற்று உள்ளார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என டி.யூ,ஜெ. மாநிலத்தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் கூறியுள்ளார்.

406 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன