செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

Author: Kodanki

நியூயார்க் இந்திய திரைப்படம் விழாவிற்கு தேர்வான ‘ஒரு கிடாயின் கருணை மனு’

நியூயார்க் இந்திய திரைப்படம் விழாவிற்கு தேர்வான ‘ஒரு கிடாயின் கருணை மனு’

செய்திகள்
இந்திய திரையுலகின் முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி கொண்டிருக்கும் 'ஈரோஸ்' தயாரித்து இருக்கும் 'ஒரு கிடாயின் கருணை மனு' திரைப்படம், நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கின்றது. இதன் மூலம் உலகளவில் உள்ள சினிமா ரசிகர்களின் உள்ளங்களை 'ஒரு கிடாயின் கருணை மனு' திரைப்படம் கவர்ந்து விடும் என்பதை உறுதியாகவே சொல்லலாம். இந்த படத்தை 'காக்கா முட்டை' புகழ் மணிகண்டனின் உதவியாளரான சுரேஷ் சங்கையா இயக்கி இருக்கிறார். இவர் உதவி இயக்குநராக பணிபுரிந்த 'காக்கா முட்டை' திரைப்படமும், பல சர்வேதச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பாராட்டுகளை குவித்தது குறிப்பிடத்தக்கது. "தரமான கதையம்சம் நிறைந்த திரைப்படங்கள் அனைத்துமே சர்வேதச திரைப்பட விழாக்களால் எளிதில் அடையாளம் கொள்ளப்படுகிறது. அந்த வகையில் எங்களின் ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படம் நியூயார்க் இந்...
‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ கதாநாயகியாக   ‘குக்கூ’ மாளவிகா நாயர்..!

‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ கதாநாயகியாக ‘குக்கூ’ மாளவிகா நாயர்..!

செய்திகள்
'குக்கூ' படம் மூலம் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் உள்ளங்களையும் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் கவர்ந்து சென்றவர் மாளவிகா நாயர். தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகிகளின் பட்டியலில் இருக்கும் இவர், தற்போது 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விநியோக துறையில் நிலையான வெற்றியை தழுவி வரும் 'ஆரா சினிமாஸ்' மகேஷ் கோவிந்தராஜ் தயாரிக்கும் இந்த படத்தை, அறிமுக இயக்குநர் அவினாஷ் ஹரிஹரன் (குறும்பட மற்றும் விளம்பர பட இயக்குநர்) இயக்குகின்றார். 'ராஜதந்திரம்' புகழ் வீரா கதாநாயகனாக நடிக்கும் இந்த அரசியல் கலந்த நகைச்சுவை திரைப்படத்தில் மேட்லி ப்ளூஸ் இசையமைப்பாளராக பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. "நடிப்பிற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொள்ளும் ஒரு நடிகை தான் எங்கள் படத்தின் கதைக்கு ஏற்றவராக இருக்க முடியும். அந்த வகையில் எங்கள் அனைவரின் மனதிலும் தோன்ற...
ஒரு காதலின் புதுப்பயணம் ஆல்பம் வெளியீடு ..!

ஒரு காதலின் புதுப்பயணம் ஆல்பம் வெளியீடு ..!

சினி நிகழ்வுகள்
இயக்குநர்களின் முதல் கதாநாயகன் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள்தான் என்று ரஜினி முருகன்' புகழ் இயக்குநர் பொன்ராம். ஜுபின் இசையில் குமரன் எழுதி இயக்கிய 'ஒரு காதலின் புதுப்பயணம்' ஆல்பத்தின் வெளியீட்டு விழா இன்று பிரசாத் ஆய்வுக்ககூடம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் ஆல்பத்தை பொன்ராம் வெளியிட்டார். நடிகர்கள் மைம் கோபி,பிரஜின் ,நிஷாந்த் தயாரிப்பாளர் இளையஅரசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். *விழாவில் இயக்குநர் பொன்ராம் பேசும்போது* " இந்தக் குமரன் என்னிடம் உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டு வந்தார். அப்போது வாய்ப்பு தரமுடியவில்லை .அடுத்த படத்துக்கு பார்க்கலாம் என்றேன். ஆனால் அடுத்து இப்படி ஒரு வாய்ப்பு வந்து இருக்கிறது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. புதிய படமும் வந்து விட்டது. ஒருவரை நம்பி படவாய்ப்பு கொடுப்பது என்பது சாதாரணம் அல்ல. முதல் படவாய்ப்பு கொடுக்கும் தயாரிப்பாளர்தான் நமக்கு கதாநாயகன்- ஹீ...
பிலிம் சேம்பர் புதிய நிர்வாகிகளுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து..!

பிலிம் சேம்பர் புதிய நிர்வாகிகளுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து..!

செய்திகள்
தென்னிந்திய ​​ஃபிலிம் சேம்பர் புதிய நிர்வாகிகளுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து...!! தென்னிந்திய ​​ஃபிலிம் சேம்பருக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கும் நடிகர் சங்கம் தனது வாழ்த்து தெரிவித்துள்ளது, "சேம்பருக்கு புதியதாக தேர்ந்தெடுக்க பட்டுள்ள தலைவர் திரு.L சுரேஷ், துணைத்தலைவர்களாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள திரு.A.சாய்பிரசாத், திரு.A.கணேஷ் திரு.V.P.மாதவன் நாயர், திரு.A.V.M.K.ஷண்முகம், கௌரவ செயலாளர்களாக தேர்ந்தெடுக்க பட்டுள்ள திரு.ரவி கொட்டாரக்கரா, திரு.N.ராமசாமி மற்றும் பொருளாளர் திரு.K.கிருஷ்ண ரெட்டி ஆகியோரை தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார வாழ்த்துவதோடு தங்களது சங்கத்திற்கு முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் தெரியப்படுத்திக்கொள்கிறோம். மேலும் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கபட்டுள்ள தென்னிந்திய நடிகர் சங்க செயற் குழு உறுப்ப...
பிரமாண்டமான முறையில் நவீன தொழில் நுட்பத்தில் நடந்த பாகுபலி 2 விழா..!

பிரமாண்டமான முறையில் நவீன தொழில் நுட்பத்தில் நடந்த பாகுபலி 2 விழா..!

சினி நிகழ்வுகள்
ஐதராபாத்தில் நடந்த ‘பாகுபலி-2’ படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா நவீன தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பப்பட்டது. உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘பாகுபலி-2’ டிரைலர் சமீபத்தில் இணையதளத்தில் வெளியானது. இதை 10  கோடிக்கும் அதிகமானவர்கள் பார்த்தனர். இது உலகின் ‘டாப்-10’ டிரைலரிலும் இடம் பெற்றுள்ளது. ‘பாகுபலி-2’ படத்தில் தெலுங்கு இசை வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ஸ்டுடியோவில் பிரமாண்டமாக நடந்தது.  இதில் ராஜமவுலி, பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  பிரபல இந்தி டைரக்டர் கரண்ஜோகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நவீன தொழில்நுட்பங்களுடன் பிரமாண்டமாக தயாராகி  இருக்கும் ‘பாகுபலி-2’ தெலுங்கு இசை வெளியீட்டு விழாவும் நவீன தொழில்நுட்பமான ‘4 கே’ முறையில் ஒளிபரப்பப்பட்டது. இதன்  மூலம் இந்த பிரமாண்ட நிகழ்ச்சியை 360 டிகிரி கோ...
லைகா நிறுவனத்துக்கு போலீஸ் க்காவல்

லைகா நிறுவனத்துக்கு போலீஸ் க்காவல்

செய்திகள்
தமிழ் திரையுலகில் பிரமாண்ட நிறுவனமான லைகா சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள் கட்டி உள்ளது. அதை தமிழர்களுக்கு வழங்கும் விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, மதிமுக உடபட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் காரனமாக இலங்கை பயணத்தை ரஜினி ரத்து செய்தார். இதற்கிடையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் லைகா நிறுவனம் மீது ஒரு குற்றச்சாட்டு வைத்தார். இதை எதிர்த்து வேல்முருகன் மீது லைகா நிறுவனம் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளது. இதன் காரணமாக லைகா நிறுவனத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது....
என்கிட்ட மோதாதே விமர்சனம்

என்கிட்ட மோதாதே விமர்சனம்

விமர்சனம்
1988-ல் நடக்கும் கதையில் படத்தின் நாயகர்கள் நட்ராஜ் மற்றும் ராஜாஜி இருவரும் நண்பர்கள். கட்அவுட்டுக்கு ஓவியம் வரையும் தொழில் செய்து வருகிறார்கள். பின்னர் தனது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் நட்ராஜ், ராஜாஜியையும் தன்னுடன் அழைத்து வருகிறார். பின்னர் தனது அம்மா மற்றும் தங்கை சஞ்சிதா ஷெட்டியையும் திருநெல்வேலி அழைத்து வருகிறார். பின்னர் நட்ராஜ் மற்றும் ராஜாஜி அங்கேயே சொந்தமாக தொழில் செய்ய முடிவு செய்கின்றனர். இதில் நட்ராஜ் தீவிர ரஜினி ரசிகராக ரஜினி படங்களை கட்அவுட்களில் வரைந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். ராஜாஜி கமல் ரசிகராக கமல் படங்களை வரைய விரும்புகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் மாவட்ட ரசிகர் மன்றங்களில் உறுப்பினர்களாக இணைகின்றனர். அதேநேரத்தில் கமல் ரசிகரான ராஜாஜிக்கு, பார்வதி நாயரை பார்த்த உடனே காதல் வருகிறது. மறுபுறத்தில் நட்ராஜ் - சஞ்சிதாவை காதல் செய்கிறார்...
சாதனை படைத்த சிறுமியை அழைத்து பாராட்டிய நடிகர் விஜய்..!

சாதனை படைத்த சிறுமியை அழைத்து பாராட்டிய நடிகர் விஜய்..!

செய்திகள்
சேலம் மாவட்டம் ஸ்பீட் ஸ்கேட்டிங் அசோசியேஷனில் உள்ள ஜோஸ் குயின் கிளப்பில் பயிலும் மாணவி ஏ.பி.நேத்திரா. சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த ஏ.பி.நேத்திரா 2016-17 ஸ்போர்ட்ஸ் அகாடமி ஆண்டில் மாவட்ட, மாநில, தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் கோவாவில் நடைபெற்ற சர்வதேச போட்டிக்கான தேர்வில் 4-வயதுக்குட்பட்ட பிரிவில் கலந்துகொண்டு இரண்டு தங்கப்பதக்கங்களையும் பெற்று, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இதில் வென்றதன் மூலம் மே மாதம் தாய்லாந்தில் நடைபெறவுள்ள ‘ஏசியன் ரோலர் ஸ்போர்ட்ஸ் சர்வதேச போட்டி 2017’ ல் மாணவிகளுக்கான பிரிவில் இந்திய அளவில் மூன்றரை வயதுள்ள ஏ.பி.நேத்திரா கலந்துகொள்ள உள்ளார். அம்மாணவியை நடிகர் விஜய்யிடம் காண்பித்து அவரின் பாராட்டையும், ஊக்குவிப்பையும் பெற ஆசைப்பட்டனர். இதையறிந்த விஜய், நேத்திரா மற்றும் தமிழ்நாடு ஸ்கேட்டிங் அசோசியேஷன் உறுப்பினர்கள், கிளப் உறுப்பினர்களை...