புதன்கிழமை, ஜூலை 8
Shadow

Author: Kodanki

மத்திய பிரதேசத்தில் பட்ஜெட் தாக்கல்: பெண்களுக்கு மாதம் ரூ.1000 அறிவிப்பு!

மத்திய பிரதேசத்தில் பட்ஜெட் தாக்கல்: பெண்களுக்கு மாதம் ரூ.1000 அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மத்தியப் பிரதேச மாநில சட்டமன்றத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. அரசு இப்போதே தயராகி வருகிறது. இந்த நிலையில் 2023-24 ஆம் ஆண்டிற்கான ரூ.3.14 லட்சம் கோடி மதிப்பில் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்தது அரசு. நிதி மந்திரி ஜெகதீஷ் தேவ்தா 2023-24 ஆம் ஆண்டிற்கான ரூ.3.14 லட்சம் கோடி பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தேர்தல் வருவதால், இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, பட்ஜெட்டில், பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்திற்கு ரூ.459 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான முதலமைச்சரின் ஸ்கூட்டி திட்டத்தையும் மாநில அரசு முன்மொழிந்துள்ளது, இதன் கீழ் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவிகளுக்கு ஸ்கூட்டி வழங்கப்படும் என நிதிமந்திரி அறிவித்துள்ளார். பழங்குடியின ...
ஜெயிலர் படத்தின் கதாப்பாத்திரங்கள் குறித்த புதிய தகவல்!

ஜெயிலர் படத்தின் கதாப்பாத்திரங்கள் குறித்த புதிய தகவல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் கதாப்பாத்திரங்கள் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இப்படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற ஜெயிலராகவும், ரம்யா கிருஷ்ணன் ரஜினியின் மனைவியாகவும், வசந்த் ரவி ஐபிஎஸ் அதிகாரியாகவும், தமன்னா மற்றும் சுனில் சினிமா நடிகர்களாகவும் நடித்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரஜினி சம்பந்த...
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் இணையும் பிரபல நடிகை!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் இணையும் பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் ஐஸ்வர்யா இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்தனர். அதன் பிறகு பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீனு அரோரா தயாரிப்பில் 'ஓ சாத்தி சால்' என்ற இந்தி படத்தை இயக்கவுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கவுள்ளார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இதன்...
50வது நாள் வாரிசு படத்தின் கொண்டாட்டம்!

50வது நாள் வாரிசு படத்தின் கொண்டாட்டம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் உலக அளவில் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில், 'வாரிசு' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்களை கடந்துள்ளதை ரசிகர்கள் இணையத்தில் போஸ்டர்கள் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். மேலும் சில திரையரங்குகளில் ரசிகர்கள் விஜய்யின் போஸ்டர்களுக்கு மாலை அணிவித்து கொண்டாவது போன்ற வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பான ஹாஷ்டாக்குகளையும் இணையத்தில் வைரலாக்கியுள்ளனர். இப்படம...
வைரலாகும் ‘பஹீரா’ பட பாடல்!

வைரலாகும் ‘பஹீரா’ பட பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் 'பஹீரா'. சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார். பிரபுதேவா பல வேடங்களில் நடித்துள்ள 'பஹீரா' படத்தின் டிரைலர் 2021-ம் ஆண்டு வெளியானது. இப்படம் கடந்த ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு இப்படம் வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது டிரைலரை சமீபத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் இணையத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தனர். இத...
‘காசேதான் கடவுளடா’ படத்திற்கு நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!

‘காசேதான் கடவுளடா’ படத்திற்கு நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் சிவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'காசேதான் கடவுளடா'. இதில் யோகிபாபு, சிவாங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ராம் பிரசாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், சென்னை தி.நகரை சேர்ந்த ராஜ் மோகன் என்பவர் தன்னை சந்தித்து 'காசேதான் கடவுளடா' படத்தை எடுப்பதற்காக ரூ. 1 கோடியை 75 லட்சம் கடன் பெற்றதாகவும் படத்தை வெளியிடுவதற்கு முன்பு இந்த பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக ஒப்பந்தம் செய்து கொண்டதாக அந்த மனுவில் அவர் கூறியிருக்கிறார். இந்த ஒப்பந்தத்தை மீறி தயாரிப்பு நிறுவனம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதால் தனக்கு பெரிய நிதி இழ...
போதைப் பொருள் விழிப்புணர்வை முன்னிட்டு கைப்பந்து போட்டி!

போதைப் பொருள் விழிப்புணர்வை முன்னிட்டு கைப்பந்து போட்டி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மீஞ்சூர் அடுத்த காட்டூர் ஊராட்சியில் காட்டுப்பள்ளி அதானி பவுண்டேஷன் சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பொது மக்களிடையே கையெழுத்து மற்றும் ஒரு நாள் கைப்பந்து போட்டி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அதானி போர்ட் டெர்மினல் தலைவர் ராம்தேவ் கரன்சியாபாவனா, கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கினார். இதில் திட்ட மேலாளர் ஜேசுராஜ், காட்டூர் ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஊராட்சி மன்ற தலைவர்கள், செல்வராமன், முத்து, கோபி, தொகுப்பாளர் செண்பகவள்ளி மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்....
அமெரிக்காவில் நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் விமானம் விபத்து- 5 பேர் பலி!

அமெரிக்காவில் நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் விமானம் விபத்து- 5 பேர் பலி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று, ஸ்டேஜ்கோச் நகரில் இருந்து நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டது. விமானத்தில் விமானி, மருத்துவர், செவிலியர், நோயாளி மற்றும் அவரது உறவினர் என மொத்தம் 5 பேர் இருந்தனர். ஆம்புலன்ஸ் விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் மாயமானது. இதனையடுத்து, மாயமான விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிட்டன. சுமார் 2 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் மாயமான அந்த ஆம்புலன்ஸ் விமானம் ஸ்டேஜ்கோச் நகரில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மீட்பு குழுக்கள் அங்கு உடனடியாக விரைந்து சென்று பார்த்தபோது இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. அவர்களது உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். விபத்துக்கா...
வைரலாகும் அகிலன் பட ’துரோகம்’ பாடல் !

வைரலாகும் அகிலன் பட ’துரோகம்’ பாடல் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் 'அகிலன்'. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'அகிலன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரி என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான 'துரோகம்' பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இந்த பாடல் தற்போது வெளியாகியுள்ளது. சாம் சி.எஸ், சிவம் பாடியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.   https://youtu.be/rUER5mwz65w...
பிச்சைக்காரன் 2  ரிலீஸ் அப்டேட்!

பிச்சைக்காரன் 2 ரிலீஸ் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் முதல் 4 நிமிடம், ஆரம்ப காட்சி ஸ்னீக் பீக் டிரைலர் வெளியாகி வைரலானது.  ...