நிசப்தம் அனைவரும் பார்க்கவேண்டிய தரமான சமூக சிந்தனையுள்ள, விழிப்புணர்ச்சி படம்..!
உலகில் எந்த குழந்தைக்கும் இப்படி நடந்து விடக்கூடாது என்று படம் பார்க்கும் ஒவ்வொரு ஈர மனசும் சொல்லும் விதத்தில் இரு க்கிறது ‘நிசப்தம்’ படம்.
படம் பார்த்த பாதிப்பு விமர்சனம் எழுதவே தோன்றாமல் தடுமாற வைத்திருக்கிறது... அந்தளவுக்கு ஒரு வலியான மனசு பாதிக்கும் நிஜத்தை சினிமாவாக ‘நிசப்தம்’ என்ற பெயரில் எடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பமும் குறிப்பாக பெண் குழந்தைகளை பெற்றிருக்கிற எல்லா பெற்றோரும் பார்க்க வேண்டிய படம் இது.
படத்தின் பெயர்தான் நிசப்தம்... ஆனால், படம் பார்க்கும்போது ஒவ்வொரு காட்சிகளிலும் அதன் வலிமிகுந்த தாக்கம் ஏற்படுத்தும் அதிர்வெடிகள் மனித மனங்களை வெடிவைத்து தகர்க்கும் சத்தம் மனசை தாண்டி கண்களில் வழியாக கண்ணீராக வெளிகாட்டும்.
சரி படம் அப்படி என்னதான் சொல்கிறது...
ஒரு அப்பா, அம்மா, ஒரு பெண் குழந்தை, ஒரு நண்பன் அவன் மனைவி, அவன் பிள்ளை இவர்களை சுற்றியே நடக்கிறது கதை. வீட்டில்...
