ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 21
Shadow

Author: Kodanki

200 வருடமாக நடந்து வரும்  பிரச்சனையை  அலசியிருக்கும் தோட்டம்..!

200 வருடமாக நடந்து வரும் பிரச்சனையை அலசியிருக்கும் தோட்டம்..!

சினி நிகழ்வுகள்
Blue eye productions என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் படத்திற்கு "தோட்டம்" என்று பெயரிட்டுள்ளனர். இந்தப்படத்தில் சிங்கை ஜெகன் நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் கே.எஸ்.மணியம் நடிக்கிறார்.. நாயகியாக தனா மற்றும் விவியாஷான் என்ற சீன நடிகையும் நடிக்கிறார். மற்றும் ரூபன் லோகன் தியாகு, ஜீவி. அகில்வர்மன் ஆகியோர் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் அரங்கண்ணல் ராஜ் கூறியதாவது. ஒவ்வொரு நாடும் பொருளாதார முன்னேற்றம் அடைவதே அந்த நாட்டின் விவசாய வருமானத்தைக் கொண்டே. இலங்கை, மலேசியா  மற்ற இதர நாடுகளும் இதில் அடங்கும்.. அந்த விவசாய கூலித் தொழிலாளியாகப் பயன்படுத்தப் பட்டவர்கள் பெரும்பாலும் இந்தியர்களே. அதிலும் குறிப்பாக தமிழர்களே. அப்படி உழைத்து உருவாக்கிய தோட்டங்களும் பெரும் வணிக சந்தையாகி விட்டது.. தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கை மட்டும் அதே நிலையில் தான் இருக்கிறது. அப்படி உருவாக்கிய தோ...
ஜூலை 15ல்  ரிலீஸ் ஆக உள்ள ‘தப்பு தாண்டா ‘

ஜூலை 15ல் ரிலீஸ் ஆக உள்ள ‘தப்பு தாண்டா ‘

செய்திகள்
இயக்குனர் பாலுமஹேந்திராவின் சினிமா பட்டறையிலிருந்து பயின்று வந்துள்ள ஸ்ரீகாந்தன் இயக்கியுள்ள முதல் படம் 'தப்பு தண்டா  '. இப்படத்தில்  சத்யா கதாநாயகனாகவும் , ஸ்வேதா  கதாநாயகியாகவும் , ஜான் விஜய் மற்றும் 'விசாரணை ' புகழ் அஜய் கோஷும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இப்படம் ஜூலை 15ஆம் தேதி ரிலீஸ் ஆகா உள்ளது. '' ஒரு படத்திற்கும் அதன் உருவாக்கத்திற்கும் நடிகர்கள் போடும் உழைப்பு, தொழில்நுட்ப கலைஞ்ஜர்களின்  அர்ப்பணிப்பு, இயக்குனரின் தவம் அனைத்தும் முழுமை பெறுவது அப்படம் மக்களிடம் சரியாக கொண்டு போய் சேர்க்கும் விநியோகஸ்தர்கள் கையில் போய் சேரும்போது மட்டுமே. அவ்வாறான விநியோகஸ்தர் ஜோன்ஸ் அவர்கள் எங்களின்  'தப்பு தாண்டா' விற்கு கிடைத்துள்ளது எங்களுக்கு மிக மிக மகிழ்ச்சியாகும் .தரமான ஜனரஞ்சக படங்களை மட்டுமே வாங்கி வெளியிடும் ' செஞ்சுரி இன்டெர்னஷனல்ஸ்' ன் ஜோன்ஸ் அவர்கள்  எங்களது 'தப்பு தாண்டா'...
நன்றி சொன்ன “மரகத நாணயம்’ டீம்..!

நன்றி சொன்ன “மரகத நாணயம்’ டீம்..!

சினி நிகழ்வுகள்
நல்ல படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுக்கும் முயற்சியில் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்து கடந்த வாரம் வெளியான படம் தான் 'மரகத நாணயம்'. ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், முண்டாசுப்பட்டி ராம்தாஸ், டேனி ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் ஒருமித்த பாராட்டில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வாரம்  புதுப்படங்கள் வெளியாகி இருந்தாலும் அதே அளவு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது மரகத நாணயம். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.  உறுமீன் படத்தை தொடர்ந்து நாங்கள் எடுக்கும் அடுத்த படம் வயது வரையறையின்றி அனைத்து மக்களாலும் ரசிக்கப்படுகிற படமாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம். அதற்காக நிறைய கதைகளை கேட்டேன். அதில் ஒன்று தான் சரவண் சொன்ன க...
வெங்கட் பிரபுவின் ” பார்ட்டி” மூலம் சில்வர் ஜூப்ளிஆண்டில் T.சிவா’ வின் ‘அம்மா கிரியேஷன்ஸ்

வெங்கட் பிரபுவின் ” பார்ட்டி” மூலம் சில்வர் ஜூப்ளிஆண்டில் T.சிவா’ வின் ‘அம்மா கிரியேஷன்ஸ்

சினி நிகழ்வுகள்
தமிழ் சினிமா உலகில் தனக்கென்று ஒரு தனி முத்திரையை பதித்தவர்  இயக்குனர் வெங்கட் பிரபு. இவரது ஒவ்வொரு படமும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்பை உண்டாக்கும் . அவ்வாறான இவர் தனது அடுத்த படத்தின் விவரங்களையும் மோஷன் போஸ்ட்டரையும் வெளியிட்டுள்ளார் .  T.சிவா' வின் 'அம்மா கிரேஷன்ஸ்' தயாரிப்பில் உருவாகவிருக்கும்  இந்த படத்திற்கு 'பார்ட்டி' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலன் 'அம்மா கிரேஷன்ஸ் ' தனது 25 ஆம் ஆண்டில் அடிவைக்க உள்ளது.  இளசுகளின் நாடியை என்றுமே நன்கு அறிந்து வைத்திருக்கும் வெங்கட் பிரபு 'பார்ட்டி ' என படத்திற்கு பெயரிட்டுள்ளதால் , அவரது ரசிகர்கள் குதூகலமடைந்துள்ளனர். இதில் பிரேம்ஜி அமரன், வெங்கட் பிரபுவின் படத்திற்கு முதல் முறையாக இசையமைக்க உள்ளார். KL பிரவீன் எடிட்டிங் செய்யவுள்ளார் . இப்படத்திற்க்காக பெரும் நட்சத்திர பட்டாளத்தை வெங்கட் பிரபு ஒன்று சேர்த்துள்ளார். சத்யராஜ் , நாசர...
வனமகன் விமர்சனம்

வனமகன் விமர்சனம்

விமர்சனம்
சாயிஷா சிறுவயதில் இருக்கும்போது அவளுடைய பெற்றோர் ஒரு விபத்தில் இறந்துவிட, அதன்பிறகு சாயிஷாவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு பிரகாஷ் ராஜ் வசம் வருகிறது. அதன்பின்னர், பிரகாஷ் ராஜ் சாயிஷாவின் பெயரில் நிறைய தொழில்கள் தொடங்கி சாயிஷாவை பெரிய தொழிலபதிர் ஆக்குகிறார். சாயிஷா பெயரிலேயே எல்லா சொத்துக்களும் இருப்பதால், தன்னுடைய மகனான வருணுக்கு அவளை திருமணம் செய்துவைத்து சொத்துக்களை தன்வசமாக்க நினைக்கிறார் பிரகாஷ் ராஜ். இந்நிலையில், அந்தமானுக்கு சுற்றுலா செல்லும் போது, காட்டுவாசியான ஜெயம் ரவியின் மீது கார் ஏற்றிவிடுகிறார்கள். அடிபட்டு கிடக்கும் ஜெயம் ரவிக்கும் சிகிச்சை அளிப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்கிறார்கள். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்க முடியாததால் இந்தியா கொண்டு வந்துவிடுகிறார்கள். அவருக்கு சிகிச்சை அளித்து நல்ல நிலைமைக்கு கொண்டு வருகிறார்கள். ஆனால், அவர் பழைய நினைவுகளை இழந்துவிடுகிறார். கா...
புதுமுகம் ரிஷி இயக்கி நடிக்கும்   “ 143 “

புதுமுகம் ரிஷி இயக்கி நடிக்கும்   “ 143 “

செய்திகள்
                            நாயகிகளாக பிரியங்கா ஷர்மா, நட்சத்திரா நடிக்கிறார்கள். Eye talkies என்ற பட நிறுவனம் சார்பாக சதீஷ் சந்திரா பாலேட் தயாரிக்கும் படத்திற்கு    " 143"என்று பெயரிட்டுள்ளார்.. காதலர்களின் சங்கேத வார்த்தையாக கருதப்பட்ட 143அதாவது I LOVE YOU என்கிற வார்த்தைகளின் சுருக்கமே 143 .. இந்த டைட்டில் இது வரை இன்றைய தலைமுறை இயக்குனர்களால் கண்டு கொள்ளப் படாமல் விட்டிருப்பது ஆச்சர்யம் தான். அதை பிடித்துக் கொண்டார் இயக்குனர் ரிஷி. அவரே கதானாயகனாகவும் நடித்து எழுதி இயக்குகிறார். நாயகிகளாக பிரியங்கா ஷர்மா நட்சத்திரா இருவரும் அறிமுகமாகிறார்கள்.. அனுபவ நடிகரான விஜயகுமார் பக்குவபட்ட கே.ஆர்.விஜயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்கள்.. மற்றும் சுதா ராஜசிம்மன் பிதாமகன் மகாதேவன் நெல்லைசிவா மோனா முண்டாசுப்பட்டி பசுபதி இவர்களுடன் சதீஷ் சந்திரா பாலேட் முக்கிய வேடம் ஏற்றிரு...

விக்ரமுடன் மோதும் பாபி சிம்ஹா.

செய்திகள்
சாமி 2வில் வில்லனாக நடிக்க நடிகர் பாபி சிம்ஹா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். "சாமி படத்தின் முதல் பாகத்தில் ‘பெருமாள் பிச்சை ’என்ற வில்லன் கேரக்டர் வலுவாக இருக்கும். தற்போது தயாராகவிருக்கும் சாமி 2 வில் பெருமாள் பிச்சையை விட பத்து மடங்கு பலசாலியாகவும், புத்திசாலியாகவும் வில்லன் கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்த கேரக்டரில் பாபி சிம்ஹா புதிய அவதாரம் எடுக்கவிருக்கிறார்" என்றார் இயக்குநர் ஹரி. இயக்குனர் ஹரி மேலும் கூறுகையில் "நடிகர் விக்ரம் ஆக்க்ஷன் ஹீரோவாக மட்டுமல்லாமல் நல்ல பர்ஃபாமராகவும் இருப்பது அவரின் தனி அடையாளம். அவருடன் மோதும் வில்லன், அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஒரு நல்ல பர்ஃபாமராக இருக்கவேண்டும். அதனால் தான் பாபி சிம்ஹாவை வில்லனாக நடிக்க தேர்வு செய்து உள்ளோம்".  ...

ஸ்ரீதேவியின் ‘மாம்’

செய்திகள்
ஸ்ரீதேவி கபூர், அக்ஷய் கண்ணா, அத்னான் சித்திக், சஜல் அலி, ரீவா அரோரா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் 'மாம்'. 'இங்கிலிஷ் விங்கிலீஷ்' படத்திற்கு பிறகு நாயகி வேடத்திர்ற்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் நடித்திருக்கிறார் ஸ்ரீதேவி. இவர்களுடன் சிறப்பு வேடத்தில் நவசுதீன் சித்திக் நடித்திருக்கிறார். போனி கபூர், சுனில்மன் சந்தா  இருவரது கூட்டு தயாரிப்பில் ஜீ ஸ்டூடியோ இன்டர்நேஷனல் சார்பில் வெளியாகவிருக்கும் படம் மாம். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி உத்யவர் என்ற விளம்பரபட இயக்குனர் இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராகிறார்.  இத்திரைப்படம் தாய்க்கும் மகளுக்குமான உறவின் நெருக்கத்தை சொல்லும் விதமாக அமைந்திருக்கிறது. இத்திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் ரவி உத்யவர் கூறும்போது "வட இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது என்றாலும் கூட பெரும்பாலும் ஆண்களின் மேலாதிக்கம் வலுவாகவே இருக்க...

தங்கரதம் – விமர்சனம்

விமர்சனம்
நடிகர்கள் : வெற்றி,அதிதி கிருஷ்ணா, சவுந்தர்ராஜன் , 'ஆடுகளம்' நரேன், 'மொட்டை'ராஜேந்திரன் , சுவாமிநாதன் , சாண்டில்யா மற்றும் பலர்.  இயக்கம் : பாலமுருகன். காய்கறி லோடுவேன் டிரைவர்களின் வாழ்க்கை முறையும் அவர்களது காதலும் , கோபமும் , தாபமும் தான் "தங்க ரதம் " படக்கரு. கதை : தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய மார்க்கெட்டான ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு சுத்துப்பட்டு கிராமங்களில் இருந்து, போட்டி போட்டுக் கொண்டு காய்கறி லோடு அடிக்கும் ஒரே ஊரைச் சேர்ந்த டெம்போ வேன் டிரைவர்கள் செல்வாவும் , பரமனும் .இதில் பரமனின் டெம்போ அவருக்கு சொந்தமானது .செல்வாவின் டெம்போ வேனுக்கு அவரது ஒன்று விட்ட சித்தப்பா உரிமையாளர். தொழில் போட்டியால் பகையாளியாக திரியும் பரமனின் தங்கையை செல்வா ., பரமனின் தங்கை அவர்., என்பது தெரிவதற்கு முன்பிருந்தே உயிருக்கு உயிராக காதலிக்கிறார். அந்த காதல் பூத்து காய்த்து , கசிந்துருகி ,கனிந்தத...

மீண்டும் இணைகிறது ‘ஈட்டி’ வெற்றிக்கூட்டணி

செய்திகள்
ஈட்டியின் வெற்றிக்கூட்டணியில் மீண்டும் அதர்வா. திரு மைக்கேல் ராயப்பன் அவர்களின் குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் 2015-ஆம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளிவந்த படம் ஈட்டி. விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.  குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் நாடோடிகள், ஈட்டி மற்றும் மிருதன் போன்ற தரமான கதைகளையும், வித்தியசமான கதையம்சம் கொண்ட படங்களையும் தயாரித்து வருகிறது. தரமான வெற்றி படங்களை கொடுக்கும் இந்நிறுவனம் தற்போது சிம்பு நடித்து வரும் AAA படத்தையும் மற்றும் தன் 10-வது படமான, ஜீவா - நிக்கி கல்ராணி நடிப்பில் கீ படத்தையும் தயாரித்து வருகிறது. இந்நிலையில் ஈட்டி பட கதாநாயகனான அதர்வாவுடன் மீண்டும் இணைந்து தனது அடுத்த படத்தை துவக்கவுள்ளது. பெயரிடப்படாத இப்படத்தில் அதர்வா கதா நாயகனாக நடிக்கிறார். டார்லிங்க், எனக்கு இன்னொரு பேரு இருக்கு போன்ற படங்களை இயக்க...