ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 21
Shadow

Author: Kodanki

மரகத நாணயம் – விமர்சனம்

விமர்சனம்
நடிகர்கள்: ஆதி, நிக்கி கல்ராணி, முனீஸ்காந்த், காளி வெங்கட், ஆனந்த் ராஜ் ஒளிப்பதிவு: ஷங்கர் பிவி இசை: திபு நினான் தாமஸ் தயாரிப்பு: ஜி டில்லி பாபு இயக்கம்: ஏ.ஆர் .கே.சரவண் கதை : பல  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இரும்பொரை என்ற சிறு அரசன், தன்னை விட பலசாலி அரசுகள் தன்னைத் தாக்காமல் இருக்க கேடயமாக மரகத நாணயம் ஒன்றை கடவுளிடம் வரமாகப் பெறுகிறான். அந்த நாணயத்தை தன் வாளில் பதித்துக் கொண்டு, எல்லா போர்களிலும் வெற்றி மேல் வெற்றி குவிக்கிறான். சாகும்வரை இதைப் பற்றி ஒருவரிடமும் மூச்சுக் காட்டாத மன்னன், கடைசியில் அந்த வாளை தன்னோடே வைத்துக் கொண்டு செத்துப் போகிறான். 90 களில் அந்த நாணயத்தை ஒரு தொல்பொருள் ஆய்வாளர் தோண்டிக் கண்டுபிடித்து எடுத்துவிடுகிறார். அந்த நாணயத்தைத் தொடும் அத்தனை பேரும் விபத்தில் அடிபட்டு இறக்கிறார்கள். இதற்குக் காரணம் அந்த இரும்பொரை மன்னனின் ஆவிதான் என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இந்தப் ப...

மாதவன் விஜய்சேதுபதி இணையும் ‘விக்ரம் வேதா’

செய்திகள்
ஒய் நாட் ஸ்டூடியோ சார்பில் சசிகாந்த் தயாரிப்பில்  இயக்குனர்கள் புஷ்கர் -  காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய்சேதுபதி, வரலக்ஷ்மி சரத்குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் பலர் நடித்து விரைவில் வெளியாகவுள்ள  'விக்ரம் வேதா' திரைப்படத்தின் ஆடியோ சமீபத்தில்  வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு C.S.சாம் இசையமைத்துள்ளார். P.S.வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'யாஞ்சி யாஞ்சி' எனும் பாடலை இசையமைப்பாளர் அனிருத்துடன் சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார். மனதை வருடும் பாடல். டாப் டென்னில் நிச்சயம் இடம்பெறும். 'டசக்கு.. டசக்கு..'  'போகாதே என்னைவிட்டு...' போன்ற பாடல்களும் கேட்கும்படி உள்ளது .    ...

விஜய் சேதுபதி நல்ல நாள் பார்த்து சொல்கிறார்

செய்திகள்
வித்தியாசமான கதை  மற்றும் கதாபாத்திரங்கள் தேர்விற்கு பேர் போனவர் நடிகர் விஜய் சேதுபதி . இவரின் அடுத்த படமான '' ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ''  இவருடைய பெயர் சொல்லும் அப்படி பட்ட  ஒரு  வித்தியாசமான படமாகும் . இது ஓர் அட்வெஞ்சர் காமெடி படமாகும் . இதில் இவர் , இதுவரை யாருமே செய்திராத, ஒரு சுவாரஸ்யமான பழங்குடிஇன  தலைவராக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்க்காக 8 வெவ்வேறு தோற்றங்களில் கலக்கியிருக்கிறார் விஜய் சேதுபதி. படப்பிடிப்பு கிட்டத்தட்ட  முடிந்தாகிவிட்டது . விஜய் சேதுபதியின் 8 வெவ்வேறு தோற்றங்களும் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும்  கவரும். இப்படத்தின் இன்னொரு கதாநாயகன் கவுதம் கார்த்திக் இப்படத்தின் மூலம் அடுத்த கட்டத்துக்கு உயர்வார்.  மேலும் பல உயரங்களை தொடுவர் . தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையை மனதில் வைத்து கொண்டே ''ஒரு நல்ல நாள்  பாத்து சொல்றேன் '' படமாக்கி உள்ளோம்'  என தன்னம...

ஜூன் 23-ல் இயக்குனர் விஜய் – ஜெயம் ரவி கூட்டணியில் ‘வனமகன்’

செய்திகள்
திங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் தயாரிக்க, இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் படம் 'வனமகன்'. அடர்ந்த வனப்பகுதியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் சாயீஷா ஜோடியாக நடித்துள்ளனர். முதன்முறையாக ஹரீஸ் ஜெயராஜ் மற்றும் மதன் கார்க்கியுடன் கை கோர்த்திருக்கிறார் இயக்குனர் விஜய். படத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இது ஹாரிஸ் ஜெயராஜின் 50வது படமாகவும் அமைந்திருக்கிறது. வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. ஏசி ரூம்ல உட்கார்ந்து ஈஸியா பாடல் எழுதி கொடுத்துட்டேன், ஆனா மொத்த டீமும் காட்டுல கஷ்டப்பட்டு பாட்டை ஷூட் பன்ணிட்டு வந்துருக்காங்க. பழங்குடியினர் வாழ்க்கையை சொல்லும் ஒரு மிக முக்கியமான படம். ஜெயம் ரவி இந்த மாதிரி வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதால் தான் அவர் படத்தில் வேலை செய்யு...
உலகத்தின் முதல் சிலிக்கான் சிலை அருங்காட்சியகம். துவக்கி வைத்தார், “கீர்த்தி சுரேஷ்”.

உலகத்தின் முதல் சிலிக்கான் சிலை அருங்காட்சியகம். துவக்கி வைத்தார், “கீர்த்தி சுரேஷ்”.

சினி நிகழ்வுகள், செய்திகள்
உலகத்தின் முதல் சிலிக்கான் சிலை அருங்காட்சியகம். குத்துவிளக்கு "தீட்டி" துவக்கி வைத்தார், "கீர்த்தி சுரேஷ்". கிளிக் ஆர்ட் மியூசியம், விண்டேஜ் கேமரா மியூசியம் போன்ற ஆச்சர்யங்களின் வரிசையில் 3வதாக உருவாகி உள்ளது "லைவ் ஆர்ட் மியூசியம்". உலகின் பல்வேறு இடங்களில் மெழுகு சிலை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மெழுகு சிலைகளில் கிடைக்கும் துல்லியத்தை விட சிலிக்கானில் அதிகமான துல்லியமும் உயிரோட்டமும் கிடைக்கும் என்பதால் திறமையான கலைஞர்களின் பங்களிப்போடு, வெகு சிறப்பாக உலகின் முதன் மாதிரி அருங்காட்சியகம் சென்னையில் அமைவது சென்னைக்கு பெருமையான ஒன்று. யார் யாருடைய சிலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்த பின், அதற்கான ஓவியங்களை ஏ.பி.ஸ்ரீதர், சிலை வடிவமைப்பை ரவி, ஆடை வடிவமைப்பை தக்ஷா தயாளன், ஆக்ஸசரீஸ்களை வினோத் என திறமையான குழு திறம்பட செய்து முடித்தது. இச்சிலைகளை நிறுவும் இடத்தின் அரங்க வடிவமைப்...
குரங்கு பொம்மை படத்தின் டீசரை வெளியிட்டார் ஆர்யா

குரங்கு பொம்மை படத்தின் டீசரை வெளியிட்டார் ஆர்யா

சினி நிகழ்வுகள், டிரைலர்கள், வீடியோ
https://youtu.be/7mIi5M_ntk0 குரங்கு பொம்மை படத்தின் டீசரை வெளியிட்டார் ஆர்யா ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கி இருக்கும் படம் 'குரங்கு பொம்மை'. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மம்முட்டியும், அனிமேஷன் போஸ்டரை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும் வெளியிட்டார்கள். இதனைத் தொடர்ந்து, நடிகர் ஆர்யா இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ‘குரங்கு பொம்மை’ படத்தின் டீசரை வெளியிட்டார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் அனிமேஷன் போஸ்டரைப் போலவே, டீசரும் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வருகிறது....
வாடகை கட்ட முடியாமல் வறுமையில் தவித்த பிரபல நடிகரின் மகனுக்கு தயாரிப்பாளர் தாணு 1 லட்சம் நிதி வழங்கினார்..!

வாடகை கட்ட முடியாமல் வறுமையில் தவித்த பிரபல நடிகரின் மகனுக்கு தயாரிப்பாளர் தாணு 1 லட்சம் நிதி வழங்கினார்..!

செய்திகள்
பொருளாதார பிரச்சினையில் தவிக்கும் நடிகர் பிஎஸ் வீரப்பா மகன்... தேடிச் சென்று நிதி உதவி செய்த கலைப்புலி தாணு! பிஎஸ் வீரப்பாவை நினைவிருக்கிறதா... மகாதேவி, மன்னாதி மன்னன், வஞ்சிக்கோட்டை வாலிபன், மீனவ நண்பன், மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் போன்ற படங்களில் கம்பீர வில்லனாக வந்து பின், பிஎஸ்வி பிக்சர்ஸ் என்ற பேனரில் ஆந்த ஜோதி, ஆலயமணி, ஆண்டவன் கட்டளை, நட்பு உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர். பிஎஸ்வி பிக்சர்ஸ் பேனரில் வெற்றி, சபாஷ், சாட்சி உள்பட அடுத்தடுத்து 4 படங்களை இயக்கியவர் இன்றைய டாப் ஸ்டார் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் என்பது குறிப்பிடத்தக்கது. வீரப்பாவின் மகன் பிஎஸ்வி ஹரிஹரன். இவரும் தயாரிப்பாளர்தான். ஆனால் பிஎஸ் வீரப்பாவின் மறைவுக்குப் பிறகு, படங்கள் தயாரிப்பதை நிறுத்திவிட்டார். ஏராளமான படங்களில் நடித்துச் சம்பாதித்த பணத்தை, படத் தயாரிப்பில் இழந்துவிட்டார் வீரப்பா. இப்போதும் வாடகை வீட...
சங்கிலி புங்கிலி கதவதொற… டீசர்..!

சங்கிலி புங்கிலி கதவதொற… டீசர்..!

சினி நிகழ்வுகள், டிரைலர்கள், வீடியோ
https://m.youtube.com/watch?v=maJM53J6jjo ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'சங்கிலி புங்கிலி கதவ தொற'. ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி நடிக்க கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்த ஐக் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையில் சிம்பு, அனிருத், ஜி.வி.பிரகாஷ்குமார், கங்கை அமரன், பிரேம்ஜி என ஐந்து இசையமைப்பாளர்கள் பாடியுள்ள இந்த படத்தின் இசை சத்யம் திரையரங்கில் வெளியிடப்பட்டது. ஒரு வித்தியாசமான ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசையை உலக நாயகன் கமல்ஹாசன் தன் சீடருக்காக வந்து வெளியிட்டுக் கொடுத்தார். இதே சத்யம் திரையரங்கில் தான் என் முதல் படம் ராஜா ராணியின் இசை வெளியீடும் நடந்தது. என் முதல் தயாரிப்பும் இந்த மேடையில் நடப்பது மகிழ்ச்சி.  என் உருவத்தை பார்த்து இவன் என்ன பெருசா பண்ணிட போறான் என நினைக்காமல் ஏ.ஆர்.முருகதாஸ் ச...
கலகலப்பான குழந்தைகள் படம் “ வானரப்படை “  எம்.ஜெயபிரகாஷ் இயக்குகிறார்

கலகலப்பான குழந்தைகள் படம் “ வானரப்படை “ எம்.ஜெயபிரகாஷ் இயக்குகிறார்

சினி நிகழ்வுகள்
ஸ்ரீருக்மணி அம்மாள் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ வானரப்படை “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பேரனும், இயக்குனர், கதாசிரியர் அண்ணாதுரை கண்ணதாசனின் மகனுமான முத்தையா கண்ணதாசன் நாயகனாக அறிமுகமாகிறார். மற்றும் பஞ்சுசுப்பு, நமோ நாராயணன், ஜீவா ரவி, ஆகியோரும் நடிக்கிறார்கள். அவந்திகா என்ற சிறுமி முத்தையா கண்ணதாசனின் மகளாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருடன் அனிருத், நிதிஷ், நிகில், அனிகா, வைஷ்ணவி, ஈஸ்வர் என்கிற ஆறு சிறுவர், சிறுமியர்கள் வானரப்படைகளாக நடிக்கிறார்கள். 9 வயதிலிருந்து 11 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகளின் கள்ளம் கபடமில்லாத கலாட்டாவுக்காக இந்த சிறுவர் சிறுமிகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். படம் பற்றி இயக்குனர் M.ஜெயபிரகாஷிடம் கேட்டோம்.. பெற்றோருக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் சின்ன இடைவெளி தா...