வடிவுடையான் இயக்கத்தில் பரத், இனியா, நமீதா உட்பட பலர் நடிப்பில் பிரமாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் பொட்டு பட பாடல்கள் சமீபத்தில் மலேசியாவில் வெளியிடப்பட்டது.
இணையத்தில் வெளியான டிரைலரை இதுவரை 7 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள் என்கிறார் இயக்குனர்.
https://m.youtube.com/watch?v=026p5zQmS1g
சினிமா ஸ்டண்ட் மாஸ்டரான ராஜ்கிரண், தன் மகன் பிரசன்னா, மருமகள் சாயா சிங், பேரன் பேத்திகளுடன் வாழ்ந்து வருகிறார். வயதானாலும் இவர் வசிக்கும் பகுதியில் நடக்கும் தவறுகளை துணிச்சலுடன் தட்டிக் கேட்கிறார்.
இதனால் போலீஸ் இவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்கிறது. இது பிரசன்னாவுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் ராஜ்கிரணிடம் பிரசன்னா கடுமையாக நடந்துகொள்கிறார். எனவே, இவர்களுக்கு இனிமேல் தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று நினைக்கும் ராஜ்கிரண், வீட்டைவிட்டு வெளியேறி தனது புல்லட்டில் நீண்ட தூரம் பயணம் செய்கிறார்.
அப்போது வழியில் அவரது வயதையொட்டிய சிலபேர் நண்பர்களாக கிடைக்க, அவர்களிடம் தனது முதல் காதலியை பார்க்க செல்வதாக கூறுகிறார். அவள் எங்கிருக்கிறாள்? என்பது தெரியாத ராஜ்கிரணுக்கு, நண்பர்கள் பேஸ்புக் பற்றி அவருக்கு தெரியவைத்து, அதன்மூலம் அவரது காதலியை தேட துணை புரிகிறார்கள்.
அதன்படி, ராஜ்கிர...
தப்புதண்டா பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. மறைந்த இயக்குனர் பாலுமகேந்திரா மனைவி அகிலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விசாரணை பட தெலுங்கு போலீஸ் வில்லன் அஜய்கோஷ் அந்த படத்துக்கு தமிழ் மக்கள் தந்த வரவேற்புக்கு தப்பு தண்டா பட விழா மேடையில் விழுந்து வணங்கி நன்றி தெரிவித்தார்.
கார்ப்ரேட்டுக்களின் பார்வையிலும், தொழில் முனைவோர்களின் பணத்தாசையிலும் சிக்கி பாடுபடும் இயற்கை கொடையான காடு பற்றிய படம் கடம்பன்.
பிரமாண்ட வெற்று விளம்பரங்கள், பில்டப் அதிரடி ஆக்ஷன் படங்களுக்கு மத்தியில் ஒரு வாழ்வியலை வலியோடு சொல்ல முயற்சித்ததற்காக இயக்குனர் ராகவா பாராட்டப்படலாம்.
கதா நாயகனாக ஸ்டைல் காட்டி ரொமான்ஸ் நாயகனாக வலம் வந்த ஆர்யாவை மாற்றி உடல் மொழிகளில் வித்தியாசம் காட்டி நடித்திருக்கும் ஆர்யா கேரியரில் கடம்பன் முக்கியமானவன்.
கதை என்று பார்த்தால் அடர்ந்த காடு. அதற்குள் காலம் காலமாக வசிக்கும் மலைவாழ் மக்கள்.
அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வெளியேற்றி விட்டு காட்டை சூரையாட முயற்சிக்கும் ஒரு கோஷ்டி.
கடம்பன் ஆர்யா காட்டை காப்பாற்றினாரா... காதல் ஜெயிச்சதா என்பது மீதிகதை.
கதையின் மையகரு மிக அற்புத்மாமானது திரைக்கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் நலம்.
ஒளிப்பதிவு பல...
ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா, ஜெம்ஸ் பிலிம்ஸ் முருகானந்தம் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ திருப்பதிசாமி குடும்பம் “ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் ஜே.கே, ஜாகீன் என்கிற இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஜெயன் என்பவர் அறிமுகமாகிறார். மற்றும் தேவதர்ஷினி, லஷ்மி ஐஸ்வர்யா, மயில், முத்துராமன், கே.அமீர், சிசர்மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்..
ஒரு நடுத்தர குடும்பத் தலைவன் திருப்பதிசாமி, கால் டாக்சி டிரைவரான திருப்பதிசாமி, அவரது மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் என சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த குடும்பத்திற்கு ஒரு சின்ன தடங்கல். திருப்பதிசாமியின் பிள்ளைகளுக்கு நடக்கும் எதிர்பாராத நிகழ்வு ஒன்று அந்த சந்தோஷக் குடும்பத்தை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதே கதை !
ஜாலியான அதே சமயம் கனமான ஒரு உணர்வையும் இந்த திருப்பதிச...
சக்திவேல் வாசு மற்றும் அவரது அப்பா சந்தானபாரதி இருவரும் பிரியாணி மாஸ்டர்கள். நடிகை சாராவும் அவரது அப்பாவான ராதாரவியும் சைவ உணவு மாஸ்டர்கள். இந்த இரு குடும்பமும் எந்தவொரு நிகழ்ச்சியிலும் ஒன்றாகவே சமைப்பார்கள். இந்த நெருக்கமானது, சக்திவேல் வாசுவுக்கும், சாராவுக்கும் இடையே காதலை உண்டாக்கியது.
ஆனால், இவர்களுடைய காதல் சாராவின் அப்பாவுக்கு பிடிக்கவில்லை. சக்தி சமைப்பதோடு மட்டுமில்லாமல் புறா ஒன்றயும் பாசமாக வளர்த்து வருகிறார். இந்நிலையில், வெளியூருக்கு சமையல் வேலையாக ரெயிலில் சென்று கொண்டிருக்கும்போது, மர்ம நபர் ஒருவர் சக்தியை ரெயிலில் இருந்து கீழே தள்ளி கொலை செய்துவிடுகிறார். இந்த கொலையில் ரெயில்வே போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்காததால் சக்தி தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்லி வழக்கை முடிக்கிறது.
ஆனால், சாராவோ இது தற்கொலை இல்லை, கொலை என்று போலீசில் புகார் கொடுக்கிறார். இதையடுத்து இந்த வழக்...
பிரபல நடிகர் சரண்ராஜ் மகன் தேஜ் சரண்ராஜ் நடிப்பில் லிங்கன் ராஜாளி இயக்கத்தில் உருவாகியுள்ள " லாலி லாலி ஆராரோ " படத்தின் இசையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்.
ரஜினிகாந்த் வீட்டில் மிக எளிமையாக நடந்தது. பாடலை கேட்டு ரஜினி பாராட்டினார்.