கவிஞர் வைரமுத்துவின் மலையாளச் சிறுகதைகள் கேரளாவில் எம்.டி.வாசுதேவன் நாயர் வெளியிடுகிறார்
கவிஞர் வைரமுத்து எழுதிய ‘வைரமுத்து சிறுகதைகள்’ என்ற நூல் மூன்று மாதங்களில் 9 பதிப்புகள் கண்டதாகும். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 15 சிறுகதைகள் ‘சிறிது நேரம் மனிதனாயிருந்தவன்’ என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மாத்ருபூமி பதிப்பித்திருக்கும் இந்த நூலை ஞானபீடம் பரிசுபெற்ற புகழ்மிக்க மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் இம்மாதம் 28ஆம் தேதி கேரளாவில் வெளியிடுகிறார். நூலின் முதற்படியை கேரள சாகித்ய அகாடமியின் செயலாளர் மோகனன் பெற்றுக்கொள்கிறார். கே.எஸ்.வெங்கிடாசலம் சிறுகதைகளை
மொழிபெயர்த்திருக்கிறார்.
மலையாள இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் எழுத்தச்சன் திருவிழா கோழிக்கோட்டை அடுத்த திரூரில் கொண்டாடப்படுகிறது. துஞ்சன் திருவிழா என்று ஒவ்வோராண்டும் நான்கு நாட்கள் நடைபெறும் அந்தக் கலை இலக்கியத் திருவிழாவில் அகில இந்திய அறிஞர்களும் எழுத்தாள...
